கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

தேப்ஜானி மோடக்
பிரீமியம் ஸ்டோரி
News
தேப்ஜானி மோடக்

ஐந்தாண்டுகளுக்கு முன், அதாவது 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதிதான் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரில் ஹீரோயினாக கமிட் ஆனார் நடிகை அஸ்வினி.

ரச்சிதா
ரச்சிதா
ரச்சிதா
ரச்சிதா

‘பிக் பாஸ்’ சீசன் 6 முடிவடைந்த பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தபடியே இருக்கின்றன. அந்த வகையில் முதல் ஆளாக, தான் லீடு ரோலில் நடிக்கிற ‘மெய்நிகரி’ படத்துக்காக ஷூட்டிங் கிளம்பிவிட்டார் ரச்சிதா. ஷூட்டிங் இந்தியாவில் இல்லை, இலங்கையில் நடக்கிறதாம்.

தேப்ஜானி மோடக்
தேப்ஜானி மோடக்

‘வானத்தைப் போல’ தொடரில் தனது கேரக்டரின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் கூறி சீரியலிலிருந்து வெளியேறிவிட்டார் ஹீரோயின் தேப்ஜானி மோடக்.

அஸ்வினி
அஸ்வினி

ஐந்தாண்டுகளுக்கு முன், அதாவது 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதிதான் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடரில் ஹீரோயினாக கமிட் ஆனார் நடிகை அஸ்வினி. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிற ‘கிழக்கு வாசல்’ தொடரில் முக்கியமான ஒரு கேரக்டருக்காக, தற்போது அதே ஏப்ரல் 24-ம் தேதியில் கமிட் ஆகி ஷூட்டிங் சென்றிருக்கிறார். ‘‘அந்த சீரியலின் ‘ராசாத்தி’ கேரக்டர் தமிழில் எனக்கு நல்லதொரு இடத்தைப் பிடித்துத் தந்ததுபோல ‘கிழக்கு வாசல்’ தொடரும் அமையும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

வேணு அரவிந்த்
வேணு அரவிந்த்

சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணமாகி வீடு திரும்பினார் வேணு அரவிந்த். இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் ஒரு சீரியலுக்காக இவரை அணுகினார்களாம். உடல்நிலை முழுவதுமாகச் சரியாகாத நிலையில் தற்போது வீல்சேர் உபயோகித்து வருவதால் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது. ஆனால் இவரை அணுகிய தயாரிப்பாளர் தரப்போ, அவருடைய கேரக்டர் வீல்சேர் பயன்படுத்துவது போலவே இருக்கட்டுமெனச் சொல்லி கமிட் செய்துவிட்டதாம்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

சன் டி.வி-யின் முக்கியமான தொகுப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஐஸ்வர்யாவை நினைவிருக்கிறதா? சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர் அங்கு கரகம், கும்மி முதலான தமிழ் நாட்டுப்புறக் கலைகளைப் பரப்பும் அமைப்புகளுடன் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் குழந்தை பெற்றதால் சின்ன இடைவெளி விட்டிருந்தவர், தற்போது மீண்டும் அந்த வேலைகளைத் தொடர்ந்திருக்கிறாராம். மே முதல் வாரத்தில் இவரது கரகாட்ட நிகழ்ச்சி அங்கு நடைபெறவிருக்கிறது.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சீனியர் நடிகை அவர். சினிமாவில் இருந்தபோது பார்ட்டிகளில் கலந்துகொண்டு சண்டை, சச்சரவு வரை இவரது பெயர் அடிபட்டுள்ளது. தற்போது சீரியல் பக்கம் வந்துள்ள இவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் புது நடிகைகள் யாராவது தெரியாமல் ‘ஆன்ட்டி' எனக் கூப்பிட்டுவிட்டால் கோபமாகி, ‘அதென்ன ஆன்ட்டி' எனக் கேட்டுச் சண்டைபிடிக்கிறாராம். ‘‘என்னை ‘அக்கா'ன்னு கூப்பிடு. இல்லையா, எங்கூடப் பேசாத'’ என்கிறாராம். நிஜமாகவே பயந்து சில புதுமுக நடிகைகள் பேச்சை நிறுத்திக்கொண்டார்களாம்.