Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சுஜிதா, சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சுஜிதா, சித்ரா

சித்ராவுக்கு அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பு இருந்தது கிடையாது. ஆனால் ஹேமந்துக்குத்தான் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு உண்டு.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சித்ராவுக்கு அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பு இருந்தது கிடையாது. ஆனால் ஹேமந்துக்குத்தான் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு உண்டு.

Published:Updated:
சுஜிதா, சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சுஜிதா, சித்ரா
விகடன் TV: ரிமோட் பட்டன்

ஒரு சமயத்தில் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றவர் சாய்சக்தி. கடந்த சில வருடங்களாக அவ்வளவாக வாய்ப்புகள் அமையாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் `தெய்வம் தந்த பூவே' சீரியலில் நடிக்க கமிட் ஆனார். தற்போது மீண்டும் அதே சேனலில் `தவமாய் தவமிருந்து' தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். உற்சாகமாக இருக்கும் சாய் சக்தியிடம் ராகு கேது பரிகாரம் செய்துவிட்டு திருப்பதி சென்றுவருமாறு ஒருவர் ஜோதிடம் சொன்னாராம். சில தினங்களுக்கு முன் திருப்பதியும் சென்று வந்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கையால் விருது வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா. ‘சின்னத்திரையில் சிறந்த ரோல் மாடல்’ என இந்த விருதை சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சித்ரா மரணமடைந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தற்போது திடீரென அவரது மரணத்தில் அரசியல்வாதி ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக அவரின் கணவர் ஹேமந்த் கூறியிருப்பது அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து சித்ராவின் பெற்றோரைக் கேட்டதற்கு, ‘`சித்ராவுக்கு அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பு இருந்தது கிடையாது. ஆனால் ஹேமந்துக்குத்தான் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. எங்களுடைய மகள் மரணத்தில் ஆரம்பத்திலிருந்தே ஹேமந்த் மீது எங்களுக்கு இருந்த சந்தேகம் இப்போது உறுதியாகியிருக்கிறது'’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஒருவழியாக சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போதைய தலைவர் ரவி வர்மா நிர்வாகம் நியமித்த தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல் நடக்க‌ எதிர்த் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிமன்றமே புதிய தேர்தல் அதிகாரியை நியமித்திருக்கிறது. அடுத்த சில தினங்களில் அவர் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்கிறார்கள்.

விஜய் டி.வி-யில் `சரவணன் மீனாட்சி' முதல் சீசனை இயக்கியவர் அழகர். சீரியல் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறி சன் டி.வி-க்கு வந்தார். அங்கு பிரைம் டைம் ஸ்லாட்டில் `பாசமலர்' தொடரை இயக்கினார். பிறகு ராஜ் டி.வி-யில் திரில்லர் சீரியல் ஒன்றை இயக்கினார். கடந்த ஆண்டு திரும்பவும் சன் டி.வி-க்கு வந்தவருக்கு, `சரவணன் மீனாட்சி' வெற்றிக்கு நிகரான ஒரு பெயர் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. தற்போது அழகர் இயக்கி வரும் `சுந்தரி' சீரியலுக்கு இவ்வாண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த சீரியல், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகி உட்பட மொத்தம் 13 பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

மீண்டும் பழைய சேனலில் பிரைம் டைம் சீரியலில் கமிட் ஆன மகிழ்ச்சியில் இருந்தார் சமீபத்தில் திருமணமான அந்த நடிகை. டெஸ்ட் போட்டோஷூட் முடிவடைந்த நிலையில் என்ன காரணமோ தெரியவில்லை, சீரியலுக்கு வெளிமாநிலத்திலிருந்து வேறொரு கதாநாயகியைக் கூட்டி வந்துவிட்டார்கள். எனவே ‘புது சீரியல்’ என யாராவது பேச்செடுத்தாலே டென்ஷன் ஆகிவிடுகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism