Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பங்கு பெறும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி யிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பங்கு பெறும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி யிருக்கிறது.

Published:Updated:
ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
ஷிவானி
விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் நட்சத்திரங்கள் பலரும் திரளாகக் கலந்துகொள்ள, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாளை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினார் ‘ரன்’ விஜித். டி.வி ஏரியாவில் கவனம் ஈர்த்த இன்னொரு பிறந்த நாள், நடிகை ஷிவானியின் பிறந்த நாள் பார்ட்டி. சில மாதங்களுக்கு முன் ஷிவானி தன்னுடைய நாய்க்குட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடியபோதே ஆஜர் ஆனவர் பாலா. ஷிவானியின் பிறந்த நாளில் இவர் இல்லாமலா? பரிசுப் பொருளுடன் பாலா வந்திருந்தார். ஷிவானியைவிட பார்ட்டியில் பலரது கவனத்தையும் கவர்ந்தவர் அவர் அம்மா. ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி வித்தியாசமாக இருந்தார். விசாரித்தால், அவருக்கும் சினிமா ஆசை வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பங்கு பெறும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி யிருக்கிறது. கடந்த ஆண்டு வனிதா விஜயகுமாருக்கும் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் பிரச்னை வந்து வனிதா வெளியேறினாரே, அதே நிகழ்ச்சிதான். இந்த முறையும் நடுவராக ரம்யா பங்கேற்பதால், நிகழ்ச்சியில் வனிதா இல்லை. மேலும், ஜோடிகளை ரீல் ஜோடி, ரியல் ஜோடி என இரு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்களாம். அதாவது சிலர் தங்களது நிஜ இணையர் களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, சிலரோ ரீல் ஜோடி களாகக் கலந்து கொள்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
MELLOW_PHOTOGRAPHY_GURU

‘ரோபோ சங்கர் மீது மைக் எறிந்தார் பார்த்திபன்’னு பரவிய செய்தியை, ஏதோவொரு நல்ல தகவல் வருவதற்கு முன்பே பரவுகிற எதிர்மறைச் செய்தியாகவே எடுத்துக்கொண்டதாம் ரோபோ சங்கர் குடும்பம். ‘‘என் மகள், தம்பின்னு எல்லாருமே அன்றைக்கு நிகழ்ச்சிக்குப் போயிருந்தாங்க. பார்த்திபன் சார் ஒருவேளை மைக் கொண்டு எறிஞ்சு, அதை என் வீட்டுக்காரர் எங்கிட்ட மறைச்சிருந்தாக் கூட என் தம்பியும் மகளும் சொல்லியிருக்க மாட்டாங்களா’’ எனக் கேட்கிறார் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சினிமா வாய்ப்புகளைத் தேடிப்போவதில்லை’ என்கிற முடிவில் இருக்கிறாராம் சதீஷ். ‘ஏன் இப்படி’ என்றால், ‘‘தற்சமயம் ‘அபி டெய்லர்ஸ்’ தொடர் போய்க் கொண்டிருக்கிறது. இதுக்கே நேரம் சரியா இருக்கு’’ என்கிறவர் மேற்கொண்டு சொன்ன விஷயங்கள்தான் ஹைலைட். ‘‘ஒரு நேரத்துல சினிமா வேற மாதிரி இருந்தது. அதனால நான் டி.வி-யில பிசியா இருந்த சூழ்நிலையிலும் அப்ப நான் சினிமாவுக்குப் போக ஆசைப்பட்டேன். பாலா சார் படமான ‘நந்தா’ படத்திலெல்லாம் நடிச்சேன். பார்த்திபன் சார் படமான ‘ஹவுஸ்ஃபுல்’ல விக்ரமுக்குப் பதில் நான் நடிச்சிருக்க வேண்டியது. அதேபோல ‘உல்லாசம்’ல அஜித்துடன் நான்தான் நடிச்சிருக்க வேண்டியது. மும்பைக்கெல்லாம் போயிட்டேன். ஆனா கடைசி நேரத்துல அங்கேயும் வந்துட்டார் விக்ரம். பத்திரிகை நண்பர் ஒருவர் விக்ரமுக்காக முயற்சி செய்தார்னு பிறகு கேள்விப்பட்டேன். இப்படி நிறைய அனுபவங்களை சினிமாவுல கத்துக்கிட்டதாலோ என்னவோ, இப்பெல்லாம் ‘வந்து கூப்பிட்டாங்கன்னா போவோமே’ங்கிற மனப்பான்மை வந்துடுச்சு’’ என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

`ரெண்டு மருமகள்கள் இருக்கிற வீட்டுல. ஒரு மருமகள்கிட்ட மட்டுமே பேசிட்டே இருந்தாங்கன்னா என்னங்க அர்த்தம்’ எனக் குமுறுகிறார் அந்த நடிகை. விவகாரம் என்னவெனில், அந்த `வீட்டு’ சீரியலில் இந்தப் `பொண்ணு’க்கு டயலாக்கே கொடுக்கப்படுவதில்லையாம். `அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல சும்மாவே வந்து போகிறது ரொம்பவே கொடுமையா இருக்கு, இந்த நிலை நீடிச்சா சீரியல்ல இருக்கணுமா இல்லையாங்கிறதை முடிவு செய்யணும்’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism