சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி சங்கர்

ஹலோ நான் நடிகை மட்டுமல்ல, ஜர்னலிஸ்ட்டும்கூட” என்று செம நோஸ்கட் விட்டார் பிரியா பவானி சங்கர்.

தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி, பல பிரபலங்களைப் போலவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டார் பிரியா பவானி சங்கர். இதைப் பிடிக்காத விஷமிகள் பிரியாவைக் கலாய்க்க, “ஹலோ நான் நடிகை மட்டுமல்ல, ஜர்னலிஸ்ட்டும்கூட” என்று செம நோஸ்கட் விட்டார் பிரியா பவானி சங்கர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

அடுத்தடுத்து வரிசையாக ஐந்தாறு படங்கள் கைவசம் வந்த மகிழ்ச்சியில் இருந்தார் ரம்யா பாண்டியன். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சினிமா மறுபடியும் முடங்கியதில் ஏக வருத்தமாம். கொஞ்ச நாளைக்கு பழைய ‘போட்டோஷூட்’ பக்கமே திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விகடன் TV: ரிமோட் பட்டன்

வில்லி வேடங்களில் அசத்தும் தேவிப்ரியாவின் சிறு வயது ஆசை போலீஸ் ஆக வேண்டுமென்பதாம். காலம் நடிக்கக் கூட்டி வந்து விட்டது. கடைசியில், ‘‘பாரதிராஜா சார் இயக்கிய ஒரு சீரியல்ல காக்கி உடை மாட்டி விட்டார்’’ எனச் சிரிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சுந்தரி’ சீரியல் கேப்ரில்லாவுக்கும் ‘பிக் பாஸ்’ கேப்ரிக்கும் ஒரே சமயத்தில் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் இருவரின் ரசிகர்களும் குழம்பிப்போய்விட்டனர். ‘இவங்களுக்கில்லை; அவங்களுக்குத் தானாம்’ என இருவருடைய ரசிகர்களும் எண்ணிக்கொண்டிருக்க, இருவருமே இன்ஸ்டாவில் தகவலை உறுதிசெய்த பிறகே குழப்பம் தீர்ந்ததாம். ‘ரெண்டு பேரும் சீக்கிரம் குணமடையட்டும்’ எனக் கூட்டாகப் பிரார்த்தனை செய்துவருகிறார்களாம் ரசிகர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

சில மாதங்களுக்கு முன் தன் நாய்க்குட்டியின் பிறந்த நாளைக் கொண்டாடிய ஷிவானி, கடந்த வாரம் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். நிகழ்ச்சியின் முக்கியமான விருந்தினர் பாலா. பர்த் டே பேபிக்குப் பரிசு வழங்கிய பாலா இன்னொரு சிறிய பரிசை ஷிவானியின் அம்மாவுக்கும் வழங்கினாராம்.

யார்கிட்டயும சொல்லாதீங்க!:

சீரியல் ஹீரோ கமிட் ஆன படமொன்றின் ஷூட்டிங் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. ‘காமெடி ட்ராக் எழுத அவரை அழைக்கலாம்’ என ‘மீன்’ படத்தை எடுத்தவரை அணுகினார்களாம். படத்திற்குள் வந்த அவர் ‘என்ன எடுத்திருக்கீங்க’ எனக் கேட்டபடி, ‘எல்லாத்தையும் அழிங்க, புதுசா நானே எடுத்துத் தர்றேன்’ எனக் களமிறங்கியதுடன், ஹீரோவையும் மாற்றச் சொல்லிவிட்டாராம். ‘பெரிய ப்ளாப் கொடுத்தவர்கிட்ட இருந்து நல்ல வேளை தப்பிச்சேன்’ என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் சீரியல் ஹீரோ.