லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

ஸ்ரீநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீநிதி

என்னோட சொந்த ஊரு திருவனந்தபுரம். சின்ன வயசுல இருந்தே நடிப்புல ஆர்வம் இருந்துச்சு. ஸ்கூல் படிக்கிறப்ப 'மலர்வாடி'னு மலையாள சீரியல்ல நடிச்சேன். எனக்கு நடிப்பு கத்துக்குடுத்தவங்க என் அம்மா.

நிஜத்துல நான் செம வாலுங்க... - ‘செந்தூரப்பூவே’ ஸ்ரீநிதி

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘தறி’ சீரியலில் சுட்டி ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்தவர்ஸ்ரீநிதி. இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் `செந்தூரப்பூவே' சீரியலில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் இவர். ‘மலர்வாடி’ எனும் மலையாள சீரியலின் மூலம் திரையில் நுழைந்தவர், தமிழில் ‘ரோஜா’வாக மணம் வீசி வருகிறார்.

‘`நான் சென்னைப் பொண்ணுஇல்லைன்னாலும் இந்த ஊரும் இந்த மனுஷங்களும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’’ - அடிக்கும் வெயிலுக்கு இதமாக செம கூலாகத் தொடங்கினார்ஸ்ரீநிதி

நீங்க நடிகையானது எப்படி?

``என்னோட சொந்த ஊரு திருவனந்தபுரம். சின்ன வயசுல இருந்தே நடிப்புல ஆர்வம் இருந்துச்சு. ஸ்கூல் படிக்கிறப்ப ‘மலர்வாடி’னு மலையாள சீரியல்ல நடிச்சேன். எனக்கு நடிப்பு கத்துக்குடுத்தவங்க என் அம்மா. அவங்களுக்கு நடிப்புல ரொம்ப ஆசை... ஒவ்வொரு நடிகரும் எந்த மாதிரி நடிக்குறாங்கன்னு ரொம்ப நுணுக்கமா கவனிச்சு, நடிச்சும் காட்டுவாங்க. அதே ஆர்வம் எனக்குள்ளேயும் வந்திருக்கணும். பொதுவா, சினிமாவுல வாய்ப்பு கிடைக்காத பட்சத்துல தான் நடிகர்கள் சீரியல் பக்கம் திரும்புவாங்க. ஆனா, நான் ஆசைப்பட்டு நுழைஞ்ச இடமே சீரியல்தான்.

சேனல் சைட் டிஷ்

செந்தூரப்பூவே சீரியல் அனுபவம் எப்படியிருக்கு?

கதையையும் என் கேரக்டரையும் டைரக்டர் சொன்னதுமே டபுள் ஓகே சொல்லிட்டேன். என்னைவிட என் ஃபிரெண்ட்ஸுக்கு அவ்ளோ சந்தோஷம். சிலர் மட்டும் இவ்ளோ வயசு வித்தியாசத்துல ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்குற மாதிரி நடிக்கிறியேன்னு கேட்டாங்க. நடிப்பையும் ரியாலிட்டியையும் பிரிச்சுப் பார்க்கத் தெரியாத மனுஷங்களாதான் அவங்கள நான் பார்க்குறேன்.

நிஜத்துல முரட்டு சிங்கிளா நீங்க?

விஜய் டிவியில முரட்டு சிங்கிள் ஷோ மூலமா என்னோட ஃபிரெண்ட்ஸ் சர்க்கிள் பெருசாயிருக்கு. சீரியல்ல சாஃப்ட்டான ‘ரோஜா’ கேரக்டர்ல என்னைப் பார்த்தவங்க நிஜமான ஸ்ரீநிதிகிட்ட பழகினா ஷாக் ஆயிடுவாங்க. ஏன்னா, நிஜத்துல நான் செம வாலு.

ஸ்ரீநிதி, ‘ரோஜா’ டீச்சர் மாதிரி அடிக்கடி அழுவாங்களா?

நான்தான் சொன்னேனே... ரியல் லைஃப்ல நான் படு சுட்டி... என் முகம் ரொம்ப அப்பாவியா இருக்குறதாலயோ என்னவோ என்னை யாரும் நெகட்டிவ் கேரக்டருக்கு யோசிக்க மாட்டாங்களோனு தோணுது. ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டா பேசுறவங்க மட்டும்தான் போல்டுன்னு அர்த்தமில்லை. தன்னோட கஷ்டங்களை, தானே சமாளிக்க நினைக்கிற எல்லாருமே போல்டுதான். அந்த வகையில ‘ரோஜா’ கதாபாத்திரம் என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்பவே போல்டுதான். இருந்தாலும்... இவ்ளோ அழ வேண்டாம்தான்... என்ன செய்ய...’’ என்பவர் அவ்வளவு சிரிக்கிறார் நிஜத்தில்.

தெரிந்த முகங்கள்... தெரியாத தகவல்கள்...

சின்னத்திரை பிரபலங்களைத் தினமும் திரையில் பார்க்கிறோம். அவர்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள், கேள்விப்படாத தகவல்களைத் தெரிஞ்சிக்கலாமா...

சேனல் சைட் டிஷ்

நான் டம்மி பீஸுங்க! - தேவிப்ரியா

விதவிதமான வில்லி கதாபாத்திரங்கள், போலீஸ் கதாபாத்திரம் எனக் கலக்கிக்கொண்டிருக்கும் தேவிப்ரியா, தற்போது தேவயானி நடிக்கும் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலிலும் ஆஜராகிவிட்டார். வித்தியாசமான வில்லியாக சீரியலில் வலம்வந்து டார்ச்சர் செய்யும் இவர் நிஜத்தில் ரொம்பவே ஸ்வீட்!

“சீரியல்கள்ல பக்கம் பக்கமா வில்லத்தனமான டயலாக்குகளைப் பேசிடுவேன். ஆனா, நிஜத்துல சின்ன கவுன்ட்டர் கூட குடுக்கத் தெரியாது. சீரியல்ல தாங்க வில்லி... நிஜத்துல நான் டம்மி பீஸுங்க.

போன வருஷம்லாம் ஃப்ரீ டைம்ல டிக் டாக் பண்ணிட்டு இருந்தேன். லாக்டௌன்ல அதுதான் என்டர்டெயின்மென்டே. அந்த நேரத்துலதான் ஹார்ட் அட்டாக்ல நான் இறந்துட்டதா ஒரு நியூஸ் வந்தது. என்னோட டிக்டாக் வீடியோவுக்கு கீழேயே `ச்ச்சே... இவங்கபோய் இறந்துட்டாங்களே'ன் கமென்ட்ஸ் வேற. அட... நான் உசுரோடதான்ப்பா இருக்கேன்னு ஒவ்வொரு கமென்ட்டுக்கும் ரிப்ளை கொடுத்தேங்க.. என் கோபமோ, சண்டையோ பத்து நிமிஷங்கள்கூட நீடிக்காது. ஆனா, என்னைப் போய் டெரர்னு நெனைக்கறாங்களே... நம்புங்க, நான் ரொம்ப நல்லவ.’’

சரிங்க...

சேனல் சைட் டிஷ்

ஐஸ்வர்யா என் ஸ்வீட் சிஸ்டர் இன் லா! - சோஃபியா

`மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' ரியாலிட்டி ஷோவில் களமிறங்கியிருக்கிறது சோஃபியா - மணிகண்டன் ஜோடி. இவர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பாசமான அண்ணன் - அண்ணி.

‘`ஐஸ்வர்யா, உங்களுக்குத்தான் நடிகை. எனக்கு அவங்க ஸ்வீட் சிஸ்டர் இன் லா. வீட்டுல ரொம்ப சிம்பிளான பொண்ணுங்க. நான்

13 வருஷமா புரொஃபஷனல் டான்ஸரா இருக்கேன். மாடலிங், விளம்பரங்கள், சீரியல்கள், படங்கள்னு நிறைய பார்த்துட் டோம். இப்போ மூன்றரை வயசுல எங்களுக்கு ஒரு குட்டி கிங் இருக்காரு. போன வருஷ லாக்டௌன் முழுக்க அவன்கூடதான் போச்சு. ஆனா... வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்ததாலயே ஒருவித மன அழுத்தமும் இருந்தது. இந்த மாதிரியான ஒரு டைம்ல எங்களுக்கு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை அமைஞ்சிருக்குறது ரிலாக்ஸிங்கா இருக்கு. டான்ஸ்னா எனக்கு உயிர்.. பிரபுதேவா சாரோட `லட்சுமி' படத்துல நடிச்சிருக்கேன். ரொம்ப நாளைக்குப் பிறகு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை திருப்புமுனையா அமையும்னு நம்புறேன். ஒருவழியா லாக்டௌன் முடிஞ்சு இயல்பு வாழ்க்கை திரும்பிட்டு வருதுன்னு மூச்சுவிடுறதுக்குள்ள அடுத்த லாக்டௌன் கொஞ்சம் கொஞ்சமா வந்து துண்டு போட ஆரம்பிச்சிருக்கு... பார்ப்போம்’’ கவலையாகச் சொல்கிறார் சோஃபியா.

ஆமாங்க...

சேனல் சைட் டிஷ்

வாழ்க்கைல அடி விழுறது சகஜந்தானே... - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' கம்பம் மீனா

`பாண்டியன் ஸ்டோர்ஸி'ல் கஸ்தூரி, `பாக்கியலட்சுமி'யில் செல்வி, `தேன்மொழி பி.ஏ'வில் பவானியாக மனதில் இடம்பிடித்திருக்கிறார் கம்பம் மீனா.

``எனக்கு 15 வயசிலேயே கல்யாணம் முடிஞ்சுதுங்க. அப்பவே செம்மயா பைக் ஓட்டுவேன். பசங்களோட சேர்ந்து கிட்டிப்புல் விளையாடுவேன். ஆம்பள பயச்சட்டையும் அரைக்கால் பாவாடையும்தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் என் காஸ்ட் யூம்ஸ். பையன் மாதிரி பொண்ணை வளர்க்காதன்னு எங்க அம்மாவுக்கு சொந்தக்காரங்க பண்ணாத அட்வைஸே கிடையாதுங்க.

சினிமாவுக்கு வந்த பிறகு, நான் அழகா இருக்கேன்னு மத்தவங்க சொல்லச் சொல்லதான் எனக்கே நம்பிக்கை வந்துச்சு. என் அம்மாவைப்போல கணவனை இழந்து, கஷ்டப்பட்டுதான் என் ரெண்டு பசங்களையும் படிக்கவெச்சு முன்னுக்குக் கொண்டு வந்தேன். என் மூத்த பையனோட கல்யாணத்தையும் முடிச்சு சமீபத்துல நான் பாட்டியும் ஆகிட்டேன். பேரப்பிள்ளைகூட சேர்ந்து என்னை டிவில பார்க்குற ஃபீலே தனிதான். வாழ்க்கைன்னா அடிகள் படத்தானே செய்யும்... எலே டோன்ட் வொரி... பீ ஹேப்பி” என கெத்து காட்டுகிறார் கம்பம் மீனா.

சூப்பருங்க...

சேனல் சைட் டிஷ்

சட்டுனு கோபம்... டக்குனு ரியாக்ஷன்... - `பாரதி கண்ணம்மா' ரூபஸ்ரீ

'பாரதி கண்ணம்மா சீரியலில் வேற லெவல் மாமியாராக விசில் பறக்கவைப்பவர் ரூபஸ்ரீ.

``எனக்கு சட்டுன்னு கோபம் வந்துடும். டக்கு டக்குன்னு ரியாக்ட் பண்ணிடுவேன். அதேநேரம் மத்தவங்களை அது ஹர்ட் பண்ணியிருக்கும்னு யோசனை வந்த அடுத்த நிமிஷமே போய் சாரி கேட்பேன். டெய்லி கடவுளைத் தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன். அவர்கூட நிறைய பேசிக்கிட்டே இருப்பேன். அந்த மனுஷனுக்குத் தெரியும், நான் எவ்ளோ சாஃப்ட்டுனு!

நான் நடிக்குறப்ப வேற மாதிரி... வீட்டுல வேற மாதிரி. படங்களைத் தொடர்ந்து இருபது வருஷங்களா சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அனுபவம். என்னதான் லாக்டௌன் முடிஞ்சு ஷூட்டிங் போனாலும் ரொம்ப பயமா இருக்கு. இப்ப கொரோனா செகண்ட் வேவ் வேற பட்டையைக் கிளப்புதே. இப்பல்லாம் எங்க போனாலும் மாஸ்க்தான். அப்படி மாஸ்க்கோட போனாகூட சிலர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு வந்து பேசுவாங்க. ஆனா, அதெல்லாம் கண்ணம்மாவோட மாமியாருக்காகத்தானே. ரூபஸ்ரீக்காக இல்லையே'' என்கிறார்.

ஆமாங்க... அட இல்லீங்க...

சேனல் சைட் டிஷ்