கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

 ஆர்யன் - சபானா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்யன் - சபானா

‘செம்பருத்தி’ சீரியல் ஹீரோயின் சபானாவுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஹீரோ ஆர்யனுக்கும் இடையில் காதல் என்பதுதான் டிவி ஏரியாவின் லேட்டஸ்ட் பரபரப்புத் தகவல்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கிருத்திகா உதயநிதி இயக்கும் வெப் சீரிஸில் நடிப்பதாகக் கமிட் ஆகி பின்னர் அந்தப் புராஜெக்டிலிருந்து வெளியேறிவிட்டார்’ என ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் குறித்துத் தகவல் வெளியானதல்லவா... முதல் கட்டப் பேச்சு வார்த்தை மட்டுமே நடந்ததாகத் தெரிவிக்கும் அஸ்வின், ஒப்பந்தம் போட்டு உறுதிப்படுத்தப்படாத ஒரு விஷயத்தில் தன்னுடைய பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டதாக வருத்தத்தில் இருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தெலுங்கு சீரியல் ஒன்றில் கமிட் ஆகி ஹைதராபாத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகை நளினிக்கு சில தினங்களுக்கு முன் கோவிட் அறிகுறிகள் தெரியவர, தற்போது அங்கேயே ஹோம் க்வாரண்டீனில் இருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஸ்ரீத்திகாவையும் விட்டு வைக்கவில்லை கொரோனா. கணவர் துபாயிலிருக்கிற சூழலில் இவருக்கு இங்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. ஹோம் க்வாரண்டீனில் இருக்கிறவர், மனைவி குறித்துக் கவலைப்பட்டபடி இருக்கும் கணவருக்குத் தைரியம் சொல்லி வருகிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயின், வில்லிக்கு நிகராக மாமியார் கேரக்டரில் நடிக்கும் ரூபயை மையப்படுத்தியும் மீம்ஸ்கள் தெறிப்பது தெரிந்ததே. ‘‘எனக்கு ‘மீம்’னா என்னன்னே தெரியாது. ஆரம்பத்துல அதென்ன ‘மீன்’னு சொல்றாங்கன்னு நினைச்சிருக்கேன். ஆனா, பல வருட சினிமா தராத பாப்புலாரிட்டி ஒரேயொரு மீம்ல கிடைச்சதே’’ என ஆச்சரியப்படுகிறார். விட்டால், மீம் கிரியேட்டர்களுக்கு கோயிலே கட்டிவிடுவார் போல.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி’ சீரியல் ஹீரோயின் சபானாவுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஹீரோ ஆர்யனுக்கும் இடையில் காதல் என்பதுதான் டிவி ஏரியாவின் லேட்டஸ்ட் பரபரப்புத் தகவல். சம்பந்தப்பட்ட இருவருமே சோஷியல் மீடியாவில் இந்தத் தகவலை உறுதி செய்திருப்பதாகத் தெரிகிறது. எந்த நேரத்திலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும சொல்லாதீங்க:

பல வருடங்களாக சீரியல் வாய்ப்புகள் அமையாமல், கிடைக்கிற சிறு சிறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவரை, நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் அந்த ஒரேயொரு கவிஞர் சீரியல் லைம் லைட்டுக்குக் கொண்டு வந்துவிட்டது. ‘எப்போதோ அதுவும் லீடு ரோலே கிடைக்க வேண்டியவர்தான். இடம் பொருள் ஏவல் தெரியாம சகட்டு மேனிக்குப் பேசற கெட்ட வார்த்தைகள்தான் வரவிடாமத் தடுத்தது’ என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.