சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV - ரிமோட் பட்டன்

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி சங்கர்

நீலிமா ராணி இன்டஸ்ட்ரியில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேக் - அப் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

`கனா காணும் காலங்கள்’ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் டாம் ஃப்ராங்க். பிறகு ‘சரவணன் மீனாட்சி' சீரியலில் ஹீரோவுடன் பயணிக்கும் கேரக்டரில் நடித்தார். சினிமா ஆசையும் இருந்தது. ஆனால் ‘சரவணன் மீனாட்சி'க்குப் பிறகு சீரியல், சினிமா வாய்ப்புகள் அவ்வளவாகக் கிடைக்காததால், தற்போது ரியாலிட்டி ஷோக்களுக்கு நடிகர் நடிகைகளைப் பங்கெடுக்கச் செய்யும் ‘ஆர்ட்டிஸ்ட் கோ ஆர்டினேட்டர்' வேலையில் இறங்கிவிட்டாராம்.

விகடன் TV - ரிமோட் பட்டன்
விகடன் TV - ரிமோட் பட்டன்

பிரியா பவானி சங்கர், வாணி போஜன் இருவருக்கும் சினிமாவில் ஒரு இடம் கிடைத்திருப்பது, சின்னத்திரை நடிகைகள் பலரிடமும் சினிமா ஆர்வத்தையும் கூடவே நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. ஷிவாங்கி, ஜாக்குலின் ஆகியோருக்கு அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகி வருவதாகச் சொல்கிறார்கள்.

விகடன் TV - ரிமோட் பட்டன்
விகடன் TV - ரிமோட் பட்டன்

நீலிமா ராணி இன்டஸ்ட்ரியில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேக் - அப் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

விகடன் TV - ரிமோட் பட்டன்

இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதற்கும் பாக்யராஜின் முதிர்ச்சியற்ற பேச்சுக்கும் கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில் சீரியல் இயக்குநர் விக்ரமாதித்தனும் ட்விட்டரில் தன் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் சில வார்த்தைகள் தனிநபர் தாக்குதலாக இருந்ததாக நண்பர்கள் கூறியதையடுத்து அந்த வார்த்தைகளை மட்டும் நீக்கிவிட்டார் விக்ரமாதித்தன்.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரியதொரு சரிவைச் சந்தித்துள்ளன ஜீ தமிழ் சீரியல்கள். ஏப்ரல் 21 வியாழக்கிழமை வெளியான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல் இதைச் சுட்டிக்காட்டுகிறது. சில வருடங்களுக்கு முன் சன் டி.வி-யின் 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்து நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ‘செம்பருத்தி' தொடரின் ரேட்டிங்கே மூன்று புள்ளிகளுக்கும் குறைவுதான். ரேட்டிங்கை உயர்த்த என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

அம்மா மகள்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ரீ யூனியன் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதன் போட்டியாளர்களுக்கு கலந்து கொண்டதற்கான ஊதியம் தரப்படுமெனச் சொல்லப்பட்டிருந்ததாம். ஆனால் இப்போது வரை சிலருக்கு சம்பளப் பணம் போகவில்லையாம். ‘என்ன காரணம் எனத் தெரியவில்லையே’ எனப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், பணம் கிடைக்கப்பெறாதவர்கள்.