சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சபானா
பிரீமியம் ஸ்டோரி
News
சபானா

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராகியிருக்கும் ‘ஜோடி’ ஆனந்திக்கு இது எட்டாவது மாதம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குள் செல்ல கடந்த இரு வருடங்களாக பல முயற்சிகளை மேற்கொண்டார் சாய் சக்தி. ஆனால் பலனளிக்க வில்லை. ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அமுதவாணன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஆகியோர் இவர் குறித்து அந்த வீட்டுக்குள் பேச, உற்சாகமாகியிருக்கிறார். ‘‘கிச்சன் சூப்பர் ஸ்டார்ல என்னை காமெடியனா பார்த்தாங்க. அந்த நிகழ்ச்சியே நான் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குள் செல்லக் காரணம் ஆச்சு. அதேபோல் இந்த பிக் பாஸ்ல என் பேரு அடிபடுது. அடுத்த சீசன்ல நிச்சயம் பி.பா. வீட்டுக்குள் போக வைக்கும் என் ராசி’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆரம்பத்தில் நகைக்கடையில் வேலை பார்த்தாராம் ஜி.பி.முத்து. பிறகு சொந்தமாக மரக்கடை நடத்தியிருக்கிறார். டிக்டாக் வந்தவுடன் எல்லாவற்றையும் ஏறக்கட்டி விட்டு அதில் ஆர்வமாகி விட, அந்தப் புகழ் இன்று டி.வி, சினிமா எனக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது. பெரிய பேனர் ஒன்றின் படத்தில் காமெடி வேடத்துக்கும் சில மாதங்களுக்கு முன் அணுகினார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்தவுடன் அது உறுதியாகலாம் என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘செம்பருத்தி’ போலவே இன்னொரு கதையைத் தயார் செய்துகொண்டு, சபானாவிடம் நடிக்கக் கேட்டு அணுகியிருக் கிறார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ‘நோ’ சொல்லி விட்டாராம் அவர். ‘‘கதையைக் கேட்டுவிட்டாவது முடிவைச் சொல்லுங்களேன்’’ எனக் கேட்டுப் பார்த்திருக்கி றார்கள். அப்போதும் பிடிகொடுக்கவில்லையாம். ‘‘வந்த வழி மறப்பது வளர்ச்சிக்கு நல்லதல்ல’’ என முணுமுணுத்தபடி அங்கிருந்து கிளம்பினார்களாம். அணுகியவர்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ் டைட்டில் வென்றதன் மூலம் சினிமாவில் ஹீரோ ஆன முகேனின் வரிசையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’டில் டைட்டில் வென்ற பாலாவும் ஹீரோவாகக் கமிட் ஆகியிருக்கிறார். மகாலட்சுமியைத் திருமணம் செய்து பரபரப்பைக் கிளப்பினாரே ரவீந்தர், அவர் தயாரிக்கும் படத்தில்தான் நடிக்கிறார் பாலா.

விகடன் TV: ரிமோட் பட்டன்

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராகியிருக்கும் ‘ஜோடி’ ஆனந்திக்கு இது எட்டாவது மாதம். நவம்பர் முதல் வாரத்தில் டெலிவரிக்காக கோயம்புத்தூரில் இருக்கும் அம்மா வீட்டுக்குச் செல்லவிருக்கிறார். முன்னதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ‘‘பாப்பாவோ, தம்பியோ, இனி அவங்க வந்த பிறகுதான் ஆக்டிங்’’ என்கிறார்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

டி.வி ஏரியாவைப் பரபரக்க வைத்த அந்தக் கணவன் மனைவி சண்டை தொடங்கியதுமே, வேறு சேனலில் இருந்தபோதும், மனைவியை அவர் நடித்துக்கொண்டிருந்த சீரியலில் இருந்து தூக்க பல வழிகளில் முயற்சி செய்தாராம் கணவர். அதன் விளைவாக அவரின் மனைவிக்குக் குடைச்சல் தரப்பட்டதாம். ‘என்னுடைய வேலை தொடர்பாகவும் தொல்லை தரப்படுகிறது’ என மனைவி புகாரில் ஒரு வரியைச் சேர்த்துவிட, உஷாரான சேனல் தரப்பு அப்படியே பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து கைது நிகழ்ந்துவிட்டதால் ‘கொஞ்ச நாளைக்குப் பிரச்னை இருக்காது’ என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் நடிகை.