தொடர்கள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவானி

யூ டியூப் சேனல் ஒன்று ‘பிக் பாஸ் வீட்டில் நடப்பதை விவாதிக்க வருகிறீர்களா’ என முன்பு அங்கு போய் வந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யாவைக் கேட்டதாம்

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சினிமா வாய்ப்பு வந்து மூன்று படங்களில் நடித்தும்விட்டார் மூக்குத்தி முருகன். ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே இன்னும் ரிலீசாகவில்லை. இந்தச் சூழலில் தற்போது ‘செல்ஃபி பேய்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ‘‘என்னுடைய நடிப்பைத் திரையில பார்க்கணும்னு நானும் ரொம்பவே ஆர்வமா இருக்கேன். ஆனா என்ன காரணமோ தெரியல, இன்னும் அந்தப் படங்கள் ரிலீசாகலை. இந்தப் பேய்ப் படமாச்சும் நல்லபடியா முடிஞ்சு ரிலீசாகணும்னு அந்த முருகனை வேண்டிக்கறேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேணு அரவிந்த் பூரண குணமாகி தற்போது வழக்கமான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டாராம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நடித்த அவரிடம் பிரபல சேனல் ஒன்று மீண்டும் சீரியலில் நடிக்கக் கேட்டு அணுகியுள்ளது. ‘‘விரைவில் அது முடிவாகும் என நினைக்கிறேன்’' என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யூ டியூப் சேனல் ஒன்று ‘பிக் பாஸ் வீட்டில் நடப்பதை விவாதிக்க வருகிறீர்களா’ என முன்பு அங்கு போய் வந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யாவைக் கேட்டதாம். சேனல் சொன்ன ஊதியத்தில் உடன்பாடில்லாமல் அதிகம் கேட்டிருக்கிறார் நித்யா. சேனல் தரப்பு இறங்கிவரத் தயாராக இல்லாததால், அந்த பிளான் டிராப் அவுட் ஆகிவிட்டதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல், மாடலிங் என என்னதான் பரபரப்பாக இருந்தாலும், தன் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு அவ்வப்போது ஒரு ட்ரிப் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் திவ்யா கணேஷ். ‘‘அது எனக்கு நல்லதொரு புத்துணர்ச்சி தர்ற விஷயமா அமையுது. கிராமத்துக்குப் போயிட்டு அப்படியே கமுதி பக்கத்துல இருக்கிற குலதெய்வக் கோவிலுக்கும் போய்ட்டு வருவேன். குறைஞ்சது நாலு நாள் இப்படிப் போய்ட்டு வந்தா அடுத்த ஆறு மாசம் வரைக்கும் மனம் அவ்வளவு உற்சாகமா இருக்குது'’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘விக்ரம்’ படத்தில் நடித்த மகேஷ்வரி, ‘மைனா’ நந்தினி இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருடனும் சேர்ந்து நடித்த ஷிவானி 4வது சீசனில் கலந்துகொண்டார். ஆனாலும் தற்போதைய சீசனிலும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு எட்டு சென்று வர ஆசைப்படுகிறாராம் இவர். இவருடன் சேர்த்துக் கிசுகிசுக்கப்பட்ட அசீமும் இந்த சீசனில் கன்டென்ட் கொடுப்பவராக இருப்பதால் ஷிவானியை ஒரு விருந்தாளியாக சில நாள்கள் அனுப்பி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

சிறைக்குச் சென்ற நடிகரின் விவகாரத்தைப் போலவே, சில மாதங்களுக்கு முன் மனைவியைப் பிரிந்த நடிகரின் விஷயத்திலும் மதம் ஒரு பிரச்னையாகும் போலத் தெரிகிறது. தன்னுடைய வயதில் பாதிகூட ஆகாத பெண்ணை விரைவில் மணம் முடிக்க இருப்பதாகச் சொல்லும் அந்த நடிகரின் முதல் திருமணம் மதங்களைக் கடந்து நடந்த திருமணமாம். நடிகர் முதல் மனைவியைப் பிரிந்த விதத்திலும் சில சிக்கல்கள் இருந்ததாகக் கூறும் சிலர், அது குறித்து விசாரிக்கவும் கிளம்பியிருக்கிறார்களாம்.