சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

வாணி போஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாணி போஜன்

ரிமோட் பட்டன்

விகடன் TV:  ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

இதுவரை சென்னையில் வாடகை வீட்டில் வசித்துவந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா விரைவில் சொந்த வீட்டுக்குக் குடிபோக இருக்கிறார். புது வீட்டின் கிரகப்பிரவேசத் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகச் சொல்கிறார்.

விகடன் TV:  ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

‘ஹீரோவைச் சுற்றியே நகரும் வழக்கமான கதை என்றால் எனக்கு செட் ஆகாது’ என, கதை சொல்ல வருகிறவர்களிடம் முதலிலேயே சொல்லிவிடுகிறாராம் வாணி போஜன். ‘‘ஆளாளுக்கு இப்படிக் கிளம்பினா என்னங்க சொல்றது’' என முணுமுணுத்துவிட்டுச் செல்கிறார்களாம் சிலர்.

விகடன் TV:  ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

ஆரம்பத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர் பிரேமி வெங்கட். பிறகு செய்தி வாசிப்பாளராக டி.வி-யில் அறிமுகமாகி தொடர்ந்து சீரியல் பக்கம் வந்தார். ‘வாணி ராணி', ‘சந்திரலேகா’ ஆகிய தொடர்கள் இவருக்கு நல்ல பெயரைத் தந்தன. தற்போது இவர் நடித்திருக்கும் ‘சுந்தரி' தொடர் 500 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது. ‘‘நான் டி.வி-யில் செய்தி வாசிப்பதைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சியடைந்தவர் என் அப்பா. இப்ப பிசியான சீரியல் நடிகையாக நான் இருப்பதைப் பார்க்க அப்பா இல்லை'’ என மறைந்த தன் தந்தையை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

விகடன் TV:  ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

சின்னத்திரையில் ‘ரகசியத் திருமணம்' என்பது தொடர் கதையாகிவிட்டது. ‘நாதஸ்வரம்' முனிஸ் ராஜாவைத் தொடர்ந்து இப்போது ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் ஜோடியும் திருமணம் செய்து கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவர்கள் காதலித்து வந்த நிலையில் இரு தரப்பு வீட்டாரும் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்களாம். எனவே எளிமையாக மாலை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விகடன் TV:  ஏகவள்ளி - ஃபெரோஸ்கான் திருமணம்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்து வந்த பின் எல்லோரையும் போலவே சினிமா வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்தார் அனிதா சம்பத். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே டி.வி பக்கம், அதாவது சீரியலுக்கு வந்து விட்டார். கலர்ஸ் தமிழ் சேனலின் சீரியல் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். செய்தி வாசித்துக்கொண்டிருந்த நாள்களில் ‘‘சீரியலா, சான்ஸே இல்ல. அந்தப் பக்கமெல்லாம் நான் வர மாட்டேன்’’ எனச் சொல்லிக் கொண்டிருந்தாராம் இவர்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

முன்பு பெரிய வீட்டுக்குள் சென்று திரும்பியவர் அவர், சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றம் குறித்து, நெருக்கமான நட்பு வட்டத்தில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாராம். ‘‘நான் ஒளிவுமறைவு இல்லாம ஒரு விஷயத்தைச் சொன்னப்ப, அது பெரிய தப்புன்னு வெளியில போகச் சொன்னாங்க. இப்ப அங்கேயே அந்த மாதிரி விஷயங்கள் நடந்தப்ப, சம்பந்தப்பட்டவங்களை ஒரு வார்த்தைகூடக் கண்டிக்காம அனுப்பி வச்சிருக்காங்க’' எனக் குமுறினாராம்.