கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆரவ், உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரவ், உதயநிதி

‘பாசிட்டிவ் கேரக்டரோ நெகட்டிவ் கேரக்டரோ, சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டால் போதும்’ என நினைக்கிறாராம் ஆரவ்.

‘பாசிட்டிவ் கேரக்டரோ நெகட்டிவ் கேரக்டரோ, சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டால் போதும்’ என நினைக்கிறாராம் ஆரவ். நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’ படத்துக்குப் பிறகு வில்லன் கேரக்டருக்குக் கேட்டு வாய்ப்புகள் வரலாம் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகர் டிங்குவுடன் சேர்ந்து ‘துட்டு’ என்கிற பெயரில் படம் ஒன்றை எடுத்திருக்கிறார். சில காரணங்களால் அந்தப் படம் வெளியாகாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. டிங்கு அமெரிக்கா சென்றுவிட, படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் ராபர்ட்டிடம் கேட்கத் தொடங்கி இருக்கிறார்களாம். அந்தக் கடன் இன்று வரை அடைக்கப்படவில்லை என்றும், அதை அடைப்பதற்காகவே வனிதா விஜய்குமார் சிபாரிசில் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் ராபர்ட் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

முந்தைய சீசன்களை ஒப்பிடும்போது பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட அனைத்துப் போட்டியாளர்களுக்குமே சம்பளம் மிகவும் குறைவுதானாம். மகேஸ்வரி, ஆயிஷா, அமுதவாணன் ஆகிய மூவருக்கும்தான் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குறைவான சம்பளம் தனலட்சுமியினுடையது எனத் தெரிகிறது. அவருடைய ஒருநாள் சம்பளம் பத்தாயிரமாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எதிர் நீச்சல்’ மூலம் சீரியல் பக்கம் வந்தார் பாம்பே ஞானம். ‘பட்டம்மா’ என்கிற அவரது கேரக்டருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார். ‘90ஸ் கிட்ஸ்லாம் என்னைப் பத்தித் தெரிஞ்சுக்க கூகுள்ல தேடுறாங்களாம்’ என்றவர், தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்த இருக்கிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க...

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கேட்டு யாராவது அணுகினால், ‘‘கணவரையும் சேர்த்து அழைத்து வருகிறேன், கட்டணத்துல கொஞ்சம் கூடுதலாக் கொடுத்தாப் போதும்’’ என பேக்கேஜ் பேசுகிறாராம் அந்த ‘ராணி’ நடிகை. வந்தவர்கள் தயக்கம் காட்டினால், ‘‘அந்தத் தேதியில் வேறு நிகழ்ச்சி இருக்கும்னு நினைக்கிறேன்’’ என்கிறாராம். வேறு வழியில்லாமல் தம்பதி சகிதமாக அழைத்துச்செல்கிறார்களாம் சிலர்.