Published:Updated:

Rewind 2022: ராஜ்கிரண் வீட்டு ரகளைக் கல்யாணம் முதல் ஹீரோவாகும் ராமர் வரை!

முனீஸ்ராஜா, பிரியா, ராஜ்கிரண்

சில மாதங்களுக்கு முன் குடியிருந்த வீட்டை மாற்றினார் நடிகை மைனா நந்தினி. அப்படியே அந்த வீட்டைச் சுற்றிக் காட்டி 'ஹோம் டூர்' வீடியோவும் வெளியிட்டார். சொந்த வீடா எனக் கேட்ட ரசிகர்களிடம், 'அதுக்கு இன்னும் நாள் கிடக்கு' எனச் சொல்லியிருந்தார்.

Rewind 2022: ராஜ்கிரண் வீட்டு ரகளைக் கல்யாணம் முதல் ஹீரோவாகும் ராமர் வரை!

சில மாதங்களுக்கு முன் குடியிருந்த வீட்டை மாற்றினார் நடிகை மைனா நந்தினி. அப்படியே அந்த வீட்டைச் சுற்றிக் காட்டி 'ஹோம் டூர்' வீடியோவும் வெளியிட்டார். சொந்த வீடா எனக் கேட்ட ரசிகர்களிடம், 'அதுக்கு இன்னும் நாள் கிடக்கு' எனச் சொல்லியிருந்தார்.

Published:Updated:
முனீஸ்ராஜா, பிரியா, ராஜ்கிரண்
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்னு சொல்வாங்க. 2022ல் சின்னத்திரையில் வீடு கட்டிய, கல்யாணம் பண்ணியவர்கள் யார் யாரெனப் பார்க்கலாமா?

காதல்..கலாட்டா..கல்யாணம்!

கலர்ஸ் தமிழ் சேனலில் 'வள்ளி திருமணம்' தொடரின் ஹீரோயினாகக் கமிட் ஆன மகிழ்ச்சியில் வருடத்தின் ஆரம்பத்தில் வேலூர் அருகேயுள்ள வள்ளிமலை முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் நட்சத்திரா. நன்றாகப்  போன சீரியலில் கதைப்படி இவருக்குத் திருமணக் காட்சிகள் எடுக்கப்பட்ட நேரத்தில், நிஜத் திருமணமும் கைகூடி வந்தது. மாப்பிள்ளை சீரியல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விஷ்வா. முன்னதாக இவரது திருமணம் தொடர்பாக இவரது தோழி ஶ்ரீநிதி சில விஷயங்களைப் பேசி, அது சர்ச்சையாகி இருந்ததால் திருமணத்தை ரொம்பவே எளிமையாக நெருங்கிய சில உறவினர்களை மட்டுமே அழைத்து நடத்தினார். நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

 நட்சத்திரா
நட்சத்திரா

பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா - விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாகச் சொல்கிறார்கள்,'வள்ளி திருமணம்' தொடர் எதிர்பாராமல் முடிவடைந்ததில் ஏமாற்றமடைந்தாலும், ரியல் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமைந்ததில் மகிழ்ச்சியுடன் இருப்பவருக்கு இப்போது அம்மா ஆகப் போகிற செய்தியும் கிடைத்திருக்கிறது.

'நாதஸ்வரம்' சீரியல் முலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவரும் நடிகர் சண்முகராஜாவின் தம்பியுமான முனீஸ் ராஜாவும் 2022ல் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். முகநூல் மூலம் நடிகர் ராஜ்கிரனின் ம்கள் பிரியா நாச்சியாருடன் இவருக்கு அறிமுகம் உண்டாக, இருவரும் காதலித்தனர். ஆனால் இவர்களின் திருமணத்துக்கு ராஜ்கிரண் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. விளைவு இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர். 'பிரியா என் மகளே இல்லை' என அறிவித்தார் ராஜ்கிரண். பிரியா அவரது வளர்ப்பு மகள் என்பது அப்போதுதான் வெளியுலகத்துக்கே தெரிய வந்தது.

திருமணம் முடிந்த பிறகும் கூட இரு தரப்பும் காவல் துறையில் மாறி மாறிப் புகார் அளித்ததும் நடந்தது. இரண்டு தரப்பையுமே சமாதானமாகப் போகும்படி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளது காவல்துறை.

மைனா
மைனா

வாடகை வீடு.. பிக் பாஸ் வீடு.. சொந்த வீடு?

சில மாதங்களுக்கு முன் குடியிருந்த வீட்டை மாற்றினார் நடிகை மைனா நந்தினி. அப்படியே அந்த வீட்டைச் சுற்றிக் காட்டி 'ஹோம் டூர்' வீடியோவும் வெளியிட்டார். சொந்த வீடா எனக் கேட்ட ரசிகர்களிடம், 'அதுக்கு இன்னும் நாள் கிடக்கு' எனச் சொல்லி இருந்தார். ஆனாலும் 2022 இவருக்கு நிறையவே கொடுத்துச் சென்றிருக்கிறது. கமல், விஜய் சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் 'விக்ரம்' வாய்ப்பைப் பெற்றார். கூடவே   பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராகச் சென்று எண்பது நாட்களைக் கடந்து இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாடி வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வந்ததும் சொந்தமாக வீடு வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விஜய் டிவி ராமர்
விஜய் டிவி ராமர்

இந்த வருடத்தில் சொந்தமாக வீடு கட்டிய இன்னொரு டிவி பிரபலம் ராமர். மதுரை அருகே உள்ள தன் சொந்த கிராமத்தில் புது வீட்டைக் கட்டியவர், கிரஹப் பிரவேசத்தை பிரமாண்டமாக நடத்தினார். மொத்த விஜய் டிவி பட்டாளமும் அன்று மதுரையில் கூடியது. இவர் ஹீரோவாக நடித்திருக்கும் 'போடா முண்டம்' படம் கொரோனா காரணமாக தடைபட்டு இப்போது வரை அப்படியே நின்றது. இந்த வருடத்தில் படத்தை எதிர்பார்த்தாராம். ஆனால் அது நடக்கவில்லை. 2023 நிச்சயம் ஹீரோ ஆக்கி விடும் என நம்புகிறார்.