Published:Updated:

விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”

மோக்‌ஷிதா பை
பிரீமியம் ஸ்டோரி
மோக்‌ஷிதா பை

கன்னட சீரியல்ல என்னைப் பார்த்துட்டு இந்த சீரியலுக்குக் கூப்பிட்டாங்க. ‘முதல் சீரியல்லயே பெரிய ஹீரோயின்கூட நடிக்கப் போறீங்க’ன்னு மட்டும் சொல்லியிருந்தாங்க.

விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”

கன்னட சீரியல்ல என்னைப் பார்த்துட்டு இந்த சீரியலுக்குக் கூப்பிட்டாங்க. ‘முதல் சீரியல்லயே பெரிய ஹீரோயின்கூட நடிக்கப் போறீங்க’ன்னு மட்டும் சொல்லியிருந்தாங்க.

Published:Updated:
மோக்‌ஷிதா பை
பிரீமியம் ஸ்டோரி
மோக்‌ஷிதா பை

மோக்‌ஷிதா பை. தமிழ் சீரியல் ஏரியாவில் கால் பதித்திருக்கும் புதுப்பொண்ணு. ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் இரண்டாவது பொண்ணு.

‘‘அது என்ன ‘மோக்‌ஷிதா பை?’ பெயர்க் காரணம் எதுவும் இருக்கா’’ என்ற கேள்வியுடன் பேசத் தொடங்கினேன்.

‘‘இங்கதான் இந்தப் பேரு வித்தியாசமாப் படுது. நிறைய பேர் எங்கிட்ட அது என்ன `பை’ன்னு கேட்டிருக்காங்க. ‘பை’ன்னா நாம பயன்படுத்துற `பேக்’லாம் கிடையாதுங்க. அது என்னுடைய சர் நேம்’’ எனச் சிரித்தபடியே விளக்கம் தந்தவர் தொடர்ந்து பேசினார்.

விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”
விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”
விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”

‘‘என் பூர்வீகம் மங்களூர். ஆனா இப்ப குடும்பம் வசிப்பது பெங்களூரில். அப்பாவுக்கு அங்க ட்ராவல் பிசினஸ். அவர் பிசினஸ்ல கணக்கு வழக்கெல்லாம் பார்த்துப்பேன்னு நினைச்சு என்னை பி.காம். படிக்க வச்சார். ஆனா என் விதி என்னை நடிகையாக்கிடுச்சு. சத்தியமா நான் நடிகையாவேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை’’ என்கிறார்.

``அப்படின்னா நடிக்க வந்தது ஒரு விபத்து... அதானே?’’

‘‘நிறைய பேர் இதே பதிலைச் சொல்லியிருப்பாங்கல்ல. நானும் சொன்னா மக்கள் எரிச்சல் ஆகிடுவாங்க. அதனால் என்ன நடந்ததோ அதைச் சொல்லிடுறேன். வேறென்ன, எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே. இன்ஸ்டாகிராம்ல ஆக்டிவா இருப்பேன். அதுல என்னுடைய போட்டோஸ் பார்த்துட்டு, இங்க ‘செம்பருத்தி’ சீரியல் வந்துச்சே, அதனுடைய கன்னட வெர்ஷன்ல ஹீரோயினா நடிக்கக் கேட்டாங்க. ‘எனக்கு நடிக்கத் தெரியாது’ன்னு சொன்னதும் பத்து நாள் ஒரு கிளாஸ் அனுப்பி ஆக்டிங் கத்துக் கொடுத்தாங்க.

முதல் சீரியல் வாய்ப்பே ஹீரோயினா வந்ததை இன்னுமே என்னால நம்ப முடியலை. ஆரம்ப நாள்கள்ல ஷூட்டிங் போனதுமே ‘நிறைய டேக் வாங்குவோமோ, அப்படி நடந்தா சக ஆர்ட்டிஸ்டுகள் நம்மால பாதிக்கப் படுவாங்களே’ன்னு ரொம்பவே பயம் வந்திடும். ஆனா டைரக்டர், சக ஆர்ட்டிஸ்டுகள் அவ்வளவு சப்போர்ட்டா இருந்தாங்க. இன்னைக்கு அங்க அந்த சீரியல் 900 எபிசோடைத் தாண்டி நல்லபடியாப் போயிட்டிருக்கு.’’

விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”
விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”
விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”

``தமிழ் சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘‘அதுக்கும் அந்த சீரியல்தான் காரணம். ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் புரடியூசர்தான் தமிழ் செம்பருத்தியின் தயாரிப்பாளர். கன்னட சீரியல்ல என்னைப் பார்த்துட்டு இந்த சீரியலுக்குக் கூப்பிட்டாங்க. ‘முதல் சீரியல்லயே பெரிய ஹீரோயின்கூட நடிக்கப் போறீங்க’ன்னு மட்டும் சொல்லியிருந்தாங்க. அர்ச்சனாம்மாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா சீரியலின் போஸ்டரைப் பார்த்த என் அம்மா ‘இவங்க கூடவா நடிக்கப்போற. இவங்க பெரிய ஆர்ட்டிஸ்ட். இங்க ராஜ்குமார்க்கு ஹீரோயினா நடிச்சிருக்காங்களே, சொல்லப் போனா எனக்கு ரொம்பவே பிடிச்ச ஆர்ட்டிஸ்ட். நானே அவங்களுடைய ஃபேனாக்கும்’னு சொல்றாங்க என் அம்மா.

அப்புறம்தான் தெரிஞ்சது, நானே கன்னடத்துல இவங்க நடிச்ச படத்தைப் பார்த்திருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எங்கிட்ட அப்படி அன்பா நடந்திக்கிடுறாங்க.’’

விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”
விகடன் TV: “எல்லாப் புகழும் இன்ஸ்டாவுக்கே!”

``உங்க அம்மா பத்திச் சொல்லுங்க...’’

‘‘என் அம்மா டீச்சர். சிறப்புக் குழந்தைகளுக்கான டீச்சர். என்னுடைய கூடப் பிறந்த தம்பி அந்த மாதிரியான ஒரு குழந்தை. அவனை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு வந்திட்டிருந்த அம்மாவுக்கு, அந்தக் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து அவங்களுக்கு ஏதாச்சும் செய்யலாம்னு தோண, அதே ஸ்கூல்லயே டீச்சர் ஆகிட்டாங்க.’’

``சீரியலுக்குள் வந்துட்டா அடுத்து சினிமாதானே?’’

‘‘ஆமாங்க. கன்னடத்துல ஒரு படம் முடிச்சிட்டேன். ரெண்டு படம் ஷூட்டிங் போயிட்டிருக்கு. தமிழ்ல இப்பதானே வந்திருக்கேன். சான்ஸ் வருதா பார்க்கணும். தவிர விளம்பரப் படங்கள், வெப்சீரிஸும் பண்ணியிருக்கேன். மீடியாவின் பார்வை பட்டா தமிழ் சினிமாவுலயும் சீக்கிரமே ஒரு ரவுண்ட் வருவேன்.’’