Published:Updated:

"பெங்காலி ஓவியர், சிவன் - பார்வதி கான்செப்ட்!"- தாய்மையைப் போற்றும் நீலிமாவின் வைரல் போட்டோ ஷூட்!

சின்னத்திரை நடிகை நீலிமா இசையின் கர்ப்பகால போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படங்கள் உருவான விதம் குறித்து அதன் போட்டோகிராபருடன் பேசினோம்.

சின்னத்திரை நடிகை நீலிமா இசை, கர்ப்பமாக இருக்கும் இந்தத் தருணத்தில் தாய்மையைப் போற்றும் விதமாக மேட்டர்னிட்டி போட்டோஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். இதுபற்றி அந்த போட்டோஷூட்டை எடுத்த போட்டோகிராபர் ஆர்.பிரசன்னா வெங்கடேஷிடம் பேசினேன்.
ஆர்.பிரசன்னா வெங்கடேஷ்
ஆர்.பிரசன்னா வெங்கடேஷ்

"இந்த போட்டோஷூட்ல நீலிமா மேமுக்கு ரொம்பவே சந்தோஷம். பெண்கள் தங்கள் கர்ப்ப காலங்களல மேட்டர்னிட்டி ஷூட் எடுக்கறதுண்டு. 'இப்படி ஒரு ஷூட் பண்ணனும். ஆனா, வித்தியாசமான ஷூட்டா இருக்கணும். அதே டைம்ல தமிழ்க் கலாசாரமும் பிரதிபலிக்கணும்'னு நீலிமா மேம் சொன்னாங்க. ஒரு பெங்கால் ஓவியரோட படம் ஒண்ணு பார்த்ததும், இந்த ஷூட்டுக்கான ஐடியா வந்துச்சு.

நமக்கு உயிர் கொடுக்கறது அம்மாதானே. எனவே தாய்மையை வலியுறுத்தி சிவன் - பார்வதி கான்செப்ட்ல பண்ணலாம்னு முடிவானோம். ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதுக்கான திட்டமிடலை ஆரம்பிச்சதால, பிளானிங் சரியா இருந்ததால, அரை நாளுக்குள் மொத்த ஷூட்டையும் எடுத்து முடிச்சிட்டோம். ஆர்ட் டைரக்டர் ரவி, மேக்கப் உமன் ஜீவிதானு ஒரு சின்ன டீம்தான் இதுல ஒர்க் பண்ணியிருக்காங்க. பட்ஜெட் ரொம்ப குறைவுனால தாமரை மலர்களை கூட தெர்மாக்கோல் அட்டைகள்லதான் தத்துரூபமா பண்ணியிருந்தோம். இப்ப வரவேற்பு குவியறது எங்க மொத்த டீமுக்குமே சந்தோஷமா இருக்கு" என்றார் பிரசன்னா வெங்கடேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு