Published:Updated:

`ஒண்ணு அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும்!'- `மாரி' தொடரிலிருந்து வெளியேறிய சோனா; நடந்தது என்ன?

சோனா

சோனாவிடம் மறுபடியும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரும் பிடிவாதமாகவே இருந்தாராம். `ஒண்ணு அவ சீரியல்ல இருக்கணும், இல்ல நான் இருக்கணும்' எனப் பேசினாராம்.

Published:Updated:

`ஒண்ணு அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும்!'- `மாரி' தொடரிலிருந்து வெளியேறிய சோனா; நடந்தது என்ன?

சோனாவிடம் மறுபடியும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரும் பிடிவாதமாகவே இருந்தாராம். `ஒண்ணு அவ சீரியல்ல இருக்கணும், இல்ல நான் இருக்கணும்' எனப் பேசினாராம்.

சோனா
மாரி. புதுமுக ஹீரோ ஹீரோயின்களுடன் சோனா, வனிதா விஜயகுமார், சுதா சந்திரன், அபிதா, வினோதினி, தேவயாணி என சீனியர் சினிமா நடிகைகள் பலரும் களமிறங்க, கடந்தாண்டு ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல்.

ரேட்டிங்கும் ஓரளவுக்குக் கிடைத்து வருகிறது. சீரியலில் `தாரா' என்கிற கேரக்டரில் வில்லத்தனம் செய்யும் மாமியாராக நடித்து வந்தார் சோனா. இவருக்கு மருமகளாக நடித்து வந்தார் `தெய்வமகள்' முதலான சில சீரியல்களில் நடித்த ஷப்னம்.

`மாரி' சீரியல்
`மாரி' சீரியல்

இந்தப் பின்னணியில் தற்போது நடிகை சோனா சீரியலிலிருந்து வெளியேறிவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்க, என்ன நடந்தது என சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது,

``சீரியலின் ஆரம்ப எபிசோடுகள்ல சோனா - ஷப்னம் ரெண்டு பேருக்குமிடையில் அப்படியொரு நல்ல நட்பு இருந்துச்சுங்க. பிரேக் டைம்ல  ஜாலி, கேலி, கிண்டல்னு அரட்டை அடிச்சுட்டுதான் இருப்பாங்க. சீரியலின் கதைப்படி தாராவின் மத்த மருமகள்களெல்லாம் அவருக்கு அடங்கிப் போக, ஷப்னம் மட்டும் மாமியாருக்கு அடங்காத, மாமியாரை கேள்வி கேட்குற  மருமகளா இருப்பாங்க.

மாரி சீரியலில் சோனா
மாரி சீரியலில் சோனா

ஷப்னத்தைப் பொறுத்தவரை இயல்பிலேயே கொஞ்சம் கலகலப்பான பொண்ணு. ஷூட்டிங்கில் வசனத்தை அப்படியே பேசாம டைமிங்காக பஞ்ச் பேசறது, ஹுயுமர் பண்றதுன்னு இருப்பாங்க. இவர் நடித்த சீரியல்களில் இயக்குநர்களுமே இதை அனுமதிச்சதா சொல்றாங்க. இப்படியான சூழலில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களே ரெண்டு பேருக்குமிடையில் பிரச்னை உண்டாகக் காரணமாச்சு.

அதாவது, சோனா கீழே விழுவது போல் ஒரு காட்சி. அவரை ஷப்னம் தாங்கிப் பிடிக்க வேண்டும். தாங்கிப் பிடிக்கிற போது, `என்ன அத்தே, இந்தக் கனம் கனக்குறீங்க'ன்னு கேட்டு, கூடவே சில வார்த்தைகளையும் ஷப்னம் பயன்படுத்தியதாகத் தெரியுது.

அது சோனாவைக் கோபப்படுத்தியதாகவும், அந்த நாள்ல இருந்தே ரெண்டு பேருக்குமிடையிலான பேச்சுவார்த்தை `கட்' ஆனதாகவும் சொல்றாங்க'' என்கிறார்கள் இந்த விவகாரங்களை உடனிருந்து கவனித்த சக ஆர்ட்டிஸ்டுகள் சிலர்.

ஷப்னம்
ஷப்னம்

சீரியல் தொடர்பான இன்னும் சிலரிடம் பேசியபோது, ''ரெண்டு பேருக்கிடையில் பிடிக்கலைன்னா அவரவர்பாட்டுக்குப் பேசாம இருந்தாலே பிரச்னை வளராது. ஆனா ஒருத்தருக்கொருத்தர் பின்னாடி பேசறது, சாடை மாடையாப் பேசறதுனு போச்சுன்னா சண்டை பெருசாகத்தானே செய்யும்?அதுதான் நடந்தது. ஒருநாள், சோனா என்ன சொன்னாங்கன்னு தெரியலை, ஷப்னமும் பதிலுக்கு ஏதோ பேச, அந்த இடமே அமளியாகிடுச்சு.

மறுநாள்ல இருந்து `ஷப்னம் கூட சீன் இருந்தா நான் நடிக்க மாட்டேன்' என யூனிட்டில் சோனா சொல்ல, பதிலுக்கு ஷப்னமும் `சேனலுக்கு விவகாரத்தைக் கொண்டு போயிட்டாங்க' என்றனர்.

ஷப்னம்
ஷப்னம்

சேனல் தரப்போ இருவரையும் சமாதானம் செய்ய முடியாமல் தவித்திருக்கிறது. சீனியர் நடிகை என்பதால் சோனாவும் வேண்டும். ஷூட்டிங்கில் நல்ல ஒத்துழைப்புத் தந்து சுறுசுறுப்பாக நடிக்கும் நடிகை என்பதால் ஷப்னமும் வேண்டுமென நினைத்திருக்கிறார்கள் சேனலில். எனவே இருவரும் சமாதானமாகப் போகும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த சமாதானம் நடக்கவில்லை.

ஷப்னத்துடன் ஒரே காட்சியில் நடிக்க தொடர்ந்து மறுத்தே வந்தாராம் சோனா. இதனால் மகளிர் தினக் கொண்டாட்டம் ஷூட் செய்யப்பட்ட ஒரு நாளில் ஷப்னத்தை மட்டும் விட்டுவிட்டு ஷூட் செய்திருக்கிறார்கள். இதில் கடும் அதிருப்தியடைந்த ஷப்னம் சீரியலிலிருந்து தான் வெளியேறிக் கொள்வதாகச் சொல்லி இரண்டொரு நாள் ஷூட்டிங்கும் செல்லவில்லையாம்.
மாரி சீரியல்
மாரி சீரியல்

சோனாவிடம் மறுபடியும் சேனல் தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரும் பிடிவாதமாகவே இருந்தாராம். 'ஒண்ணு அவ சீரியல்ல இருக்கணும், இல்ல நான் இருக்கணும்' என்கிற ரீதியில் பேசினாராம் சோனா.

இதற்கிடையில் இந்தாண்டுக்கான விருது விழா வர, அங்கும் இவர்களின் பஞ்சாயத்து எதிரொலித்ததாம். `இப்ப வந்த பொண்ணு' என ஷப்னத்திற்கு விருது கொடுத்ததை சோனா ஆட்சேபித்ததாகவும் சொல்கிறார்கள். `எதற்கு வம்பு' என நினைத்த சேனல் சீரியலுக்காக இரண்டு பேருக்குமே ஆளுக்கொரு விருதைத் தந்து அப்போதைக்குப் பிரச்னையை ஆஃப் செய்திருக்கிறது.

மாரி சீரியலில் சோனா
மாரி சீரியலில் சோனா

ஆனாலும் இருவருக்குமான பிரச்னை முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகவே, ஏதாவதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பு. எனவே கடைசியில், 'சோனா போனா போகட்டும்' என்கிற முடிவை ஒருவழியாக எடுத்திருக்கிறார்கள்.

கதைக்காக சீரியல்ல மல்லுக்கட்டுங்கனு சொன்னா ஷூட்டிங் ஸ்பாட்டுல நிஜமாகவே மல்லுக்கட்டியிருக்காங்க. `என்னத்த சொல்றது!' என்கின்றனர்.