Published:Updated:

"என்னைக்கோ செத்திருக்கணும்..!" – டிவி நடிகை ஹரிப்ரியாவின் பிரச்னையும், சுற்றியுள்ள சர்ச்சையும்!

ஹரிப்ரியா
ஹரிப்ரியா

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் மணவாழ்க்கையில் திடீர் விரிசல் விழ, தற்போது விக்கி தனியாகவும், ஹரிப்ரியா மகனுடனும் வசித்து வருகிறார்கள்.

‘’என்னைக்கோ நான் செத்திருக்கணும். சில காரணங்களுக்காகத்தான் பொறுத்துக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கேன், என்னை நம்பி ஒரு குட்டி உயிர் இருக்கு. அதுக்காகவாவது நான் வாழ்ந்தாகணும். என்னை வாழவிடுங்க ப்ளீஸ். நான் எவ்வளவு கஷ்டத்தோடு வாழ்ந்திட்டிருக்கேங்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும்...’’ - சில தினங்களுக்கு முன் ஹரிப்ரியா வெளியிட்டிருந்த இந்த வீடியோதான் டிவி ஏரியாவின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.

சக சின்னத்திரை நடிகரான விக்கியைக் காதலித்துக் கரம் பிடித்தவர் ஹரிப்ரியா. இந்தத் தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகனும் இருக்கிறான். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் மணவாழ்க்கையில் திடீர் விரிசல் விழ, தற்போது விக்கி தனியாகவும், ஹரிப்ரியா மகனுடனும் வசித்து வருகிறார்கள்.

விக்கி
விக்கி

இருவருக்கும் சட்டப்படியான விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சூழலில்தான், வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சோஷியல் மீடியாவில் தன்னுடைய பெயரில் நிறையப் போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அவை மூலம் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக வீடியோவில் குமுறியிருந்தார் ஹரிப்ரியா.

வீடியோ தொடர்பாகப் பேச ஹரிப்ரியாவையே தொடர்பு கொண்ட போது, ''கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல இருக்கேன். சில தினங்கள்ல சரியாகிடும்னு நம்புறேன். சரியானதும் பேசறேனே!" என முடித்துக் கொண்டார்.

ஹரிப்ரியாவை நன்கு அறிந்த சிலரிடம் பேசினேன்.

‘’எப்பவுமே ஹரிப்பிரியா பாசிட்டிவான எண்ணத்துடன் இருக்கிறவங்க. இதுக்கு முன்னாடி இவங்க இந்தளவுக்கு உடைஞ்சு நாங்க பார்த்ததில்லை. அவங்க வாழ்க்கையில சமீபத்துல சில விஷயங்கள் நடந்திருக்குன்னு மட்டும் எங்களுக்குத் தெரியவந்தது.

விக்கியுடனான மணவாழ்க்கையில் விரிசல் விழுந்தப்பக்கூட மன உளைச்சலை வெளியில காட்டிக்காம இருந்தாங்க.

``மோகன் லால், விஜய்... இவங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு கேள்வி கேட்கணும்!'' - மஞ்சிமா மோகன்

‘கஷ்டம்தான். ஆனாலும் என் பையனுடைய எதிர்காலம் எனக்கு முக்கியம். அவனுக்காகவாவது நான் பொறுத்துத்தான் போகணும். நான் ஏதாவது பேசினா, அது வளர்ந்து தினமும் மீடியாவுல செய்தி வந்துட்டே இருக்கும். எத்தனையோ உதாரணங்களை சமீபத்துலகூட பார்த்தோமே. அதை நான் விரும்பலை’ன்னு சொன்னாங்க.

அப்படி ஒதுங்கி இருந்தவங்களைப் பத்தி தீடிர்னு சோஷியல் மீடியாவுல தாறுமாறான செய்திகள் வந்ததுதான் அதிர்ச்சியா இருந்தது. இந்தச் செய்திகளுக்குப் பின்னாடி யாரோ சிலர் இருக்காங்கனு தெரியவந்தப்பதான் ரொம்பவே அப்செட் ஆகிட்டாங்க. அந்தப் பாதிப்புதான் அந்த வீடியோ’’ என்றார்கள்.

ஹரிப்ரியாவின் சீரியல் நண்பர்கள் சிலரோ இன்னும் கொஞ்சம் ஓப்பனாகவே பேசுகிறார்கள்.

‘’விக்கிக்கும் அவர்கூட சீரியல்ல சேர்ந்து நடிச்ச ஒரு நடிகைக்கும் தொடர்புன்னு செய்திகள் வரத் தொடங்கினப்பதான் குடும்பத்துக்குள் பிரச்னையும் தொடங்கியிருக்கு. அந்த நடிகையும் தன்னுடைய கணவரை விவாகரத்துச் செய்ய, அந்தக் கணவருமே உடனடியா மறுமணம் செஞ்சிக்கிட்டார். இப்ப அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலைன்னாலும், ஒருத்தருக்கொருத்தர் பேசிட்டுதான் இருக்காங்க. அந்த நடிகையைப் பொறுத்தவரை விக்கியைக் கல்யாணம் செய்துக்கணும்னா இப்ப எந்தத் தடையுமில்லை. ஆனா விக்கி விவகாரம் இழுத்துட்டே போகுதே. அவங்களுக்கு அந்தக் கடுப்பா இருக்கலாமோ என்னவோ?

ஹரிப்ரியா
ஹரிப்ரியா

தன்னையும் ஒரு ஆங்கரையும் இணைச்சு வெளியான அவதூறுச் செய்திகளுக்குப் பின்னாடி அந்த நடிகைதான் இருக்காங்கன்னு ஹரிப்ரியாவுக்கு எப்படியோ தெரிய வந்திருக்கு. முதல்ல இந்த மாதிரியான செய்திகள் வெளிவராம இருக்க சில முயற்சிகளைச் செஞ்சு பார்த்திருக்காங்க. பலன் கிடைக்கலைன்ன பிறகுதான் வீடியோ வெளியிட்டிருக்காங்க’’ என்பது இவர்களின் விளக்கமாக இருக்கிறது.

’விக்கியுடன் திருமணம்’ எனச் செய்திகள் வெளியான போது அது குறித்து அந்த நடிகை எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு