Published:Updated:

`செம்பருத்தி’ சீரியலில் இருந்து ஹீரோ கார்த்திக் விலகினாரா... விலக்கப்பட்டாரா?!

செம்பருத்தி
செம்பருத்தி

'செம்பருத்தி' சீரியல் ஹீரோ கார்த்திக் மாற்றப்பட்டுவிட்டதாக 'ஜீ தமிழ்' சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஜீ தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து ஹீரோ கார்த்திக் வெளியேறி விட்டதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் உலா வந்தன.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் ஹிட் சீரியலில் இருந்து திடீரென ஹீரோ விலகியதற்கான காரணம் குறித்து கார்த்திக்கோ அல்லது 'ஜீ தமிழ்' சேனலோ எந்த ஒரு விளக்கமும் தராத நிலையில் யூகங்களாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விகடன் இணையதளத்தில் நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

'செம்பருத்தி' தொடரிலிருந்து ஹீரோ கார்த்திக் நீக்கமா?

இந்நிலையில் நேற்று மாலை, "'செம்பருத்தி’ சீரியலின் வெற்றியில் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது. அதற்கு நன்றி. அதேநேரம் தவிர்க்க இயலாத காரணத்தால் இனி கார்த்திக் சீரியலில் இல்லை" என்று அறிக்கை வெளியிட்டது சேனல்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக கார்த்திக் இல்லாத சீன்களே ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

செம்பருத்தி
செம்பருத்தி

கார்த்திக் விலகினாரா, விலக்கப்பட்டாரா?

'செம்பருத்தி' சீரியல் நடிகர்களுக்கு இடையே சின்னச்சின்னதாக எழுந்த ஈகோ மோதல்கள் ஒரு கட்டத்தில் மிகப்பெரிதாக வளர்ந்து நின்றதுதான் கார்த்திக்கின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள். சீரியலின் சீனியர் நடிகை மற்றும் வில்லி நடிகை என இருவரின் ஈகோவுக்குள் கார்த்திக் சிக்கிக்கொண்டாராம். வில்லி நடிகை, கார்த்திக் மாற்றப்படவேண்டும் எனச் சேனலில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். கார்த்திக் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு தயாரிப்பாளர். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதுதான் கார்த்திக்கின் கனவாக இருந்திருக்கிறது. வாய்ப்பு உடனடியாகக் கிடைக்காததால் சீரியலில் நடித்திருக்கிறார். தன்னைவைத்து சீரியலில் இவ்வளவு பிரச்னைகள் என்றதும் சேனல் தலைமையிடம் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால் இப்போது முறைப்படி ஹீரோ மாற்றத்தை அறிவித்திருக்கிறது சேனல்.

புதிய ஹீரோ யார் என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படுமாம்!

அடுத்த கட்டுரைக்கு