Published:Updated:

`இரட்டை ரோஜா’ சீரியலில் இருந்து ஷிவானி அவுட்... இனி யார், ஏன்?!

ஷிவானி, Shivani
ஷிவானி, Shivani

'இரட்டை ரோஜா' சீரியலில் இருந்து ஹீரோயின் ஷிவானி வெளியேற அதன் ஒளிபரப்பு நேரமும் மாறுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய சீரியல் `இரட்டை ரோஜா’. `பகல் நிலவு’, `கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷிவானி முதன் முதலாக ஹீரோயின் கம் வில்லியாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மதிய நேர ஸ்லாட்டில் ஒளிபரப்பானாலும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கொரோனா வந்து சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது மூன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்புகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், எல்லா சீரியல்களிலுமே நிறைய மாற்றங்கள். சில நடிகைகள் கொரோனா நிலைமை இன்னும் சீராகவில்லை எனச் சொல்லி ஷூட்டிங் வர மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி வர மறுத்தவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர் நடிகைகளைக் கமிட் செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரேவதி நடித்த `அழகு’, `சஞ்சீவ் நடித்த `காற்றின் மொழி’ உள்ளிட்ட சில சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.

230 கோடி பிசினஸ்? - மாஸ்டர் ‘வார்’! - மௌனம் கலைப்பாரா விஜய்?

இந்த வகையில் `இரட்டை ரோஜா’ தொடரிலிருந்து ஷிவானியும் வெளியேறியுள்ளார். லாக்டௌனுக்குப் பின் தொடங்கிய ஷூட்டிங்கில் இவர் கலந்துகொள்ளவில்லை. இவருக்குப் பதிலாக தொடரின் ஹீரோயின் கம் வில்லியாக கமிட் ஆகியிருப்பவர் நடிகை சாந்தினி. `சித்து + 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் டான்ஸர் நந்தாவின் மனைவியுமான இவர்தான் தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

இம்மாதக் கடைசியிலிருந்து புதிய எபிசோடுகள் வரத் தொடங்கும்போது இவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன.

ஷிவானி
ஷிவானி

ஷிவானியின் வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து சீரியல் வட்டாரத்தில் கேட்டபோது, ''முன்னாடி நடிச்சிட்டிருந்த சேனல்ல அதே பழைய டீம் புதுசா ஒரு சீரியலைத் தொடங்க இருக்குறாங்க; அதுல இவங்க கமிட் ஆகியிருக்குறதா கேள்விப் பட்டோம்’' என்கிறார்கள். அடுத்த மாதத்திலிருந்து அந்தத் தொடர் ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள்.

அதேநேரம் வேறு சிலரோ, `கொரோனாவுக்குப் பின் சில சீரியல்களில் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் அப்படியொரு நிலை ஷிவானிக்கும் வந்ததாகவும் அதற்கு அவர் உடன்படாததாலேயே வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாந்தினியிடம் பேசினேன்.

``படங்கள்தான் பண்ணிட்டிருந்தேன். கொரோனா வந்ததுல சினிமாவுக்குப் பலத்த அடி விழுந்திடுச்சே, நடிச்சு வெளிவர வேண்டிய படங்களே எப்ப வெளியாகும்னு தெரியாத நிலையா இருக்கு. இப்போதைக்கு சினிமா ஷூட்டிங் ஆரம்பிக்கற மாதிரியும் தெரியலை. அதனால அதுவரைக்கும் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்தலாம்னு நினைச்சேன்.

சாந்தினி
சாந்தினி
படம்: பா.காளிமுத்து

இது எனக்கு ரெண்டாவது சீரியல். சில மாசம் முன்னாடிதான் `தாழம்பூ’ தொடர் மூலம் சீரியலுக்குள் வந்தேன். அது எதிர்பார்த்த அளவுக்கு ரீச் தரலை. அந்த வருத்தத்தை இந்த சீரியல் சரி செஞ்சிடும்னு நம்புறேன். ஏன்னா, பொதுவா சீரியல்கள்ல டபுள் ஆக்ட் பண்ண அவ்வளவு சீக்கிரத்துல வாய்ப்பு கிடைக்காது. அதுவும் பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல் ரெண்டுமே கிடைக்குதுங்கிறப்ப நடிக்க ஸ்கோப் இருக்கும்கிறதால சம்மதிச்சேன்.

நல்ல டீமா அமைஞ்சதும் இன்னொரு அதிர்ஷ்டம். ஒருவேளை கொரோனா சரியாகி பட வாய்ப்புகள் அமைஞ்சாலும் கால்ஷீட் விஷயத்துல அட்ஜஸ்ட் செய்யறதாச் சொல்லியிருக்காங்க. நான் கமிட் ஆன நேரமா தெரியாது சீரியல் பிரைம் டைம் ஸ்லாட்டுக்கு மாறப்போகுது’’ என்கிறார் உற்சாகத்துடன். 'இரட்டை ரோஜா' இனி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு