Published:Updated:

``அந்த கிஸ் வீடியோ உங்களுக்குத்தான்!'' – `திருமணம்’ சீரியல் சித்து - ஸ்ரேயா

’திருமணம்’ சித்து
’திருமணம்’ சித்து

தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் முதன் முதலாக லிப்லாக் காட்சியில் நடித்துப் பரபரப்பு கிளப்பிய ‘திருமணம்’ சித்து-ஸ்ரேயா அஞ்சன் ஜோடி லாக்டெளன் பிரிவின் ஏக்கத்தைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கும் வீடியோதான் சின்னத்திரை ஏரியாவின் லேட்டஸ்ட் டாக்.

சீரியலில் ஜோடியாக நடிப்பவர்களிடையே காதல் மலர்ந்து அவர்கள் நிஜ வாழ்வில் இணைவது தமிழ்த் தொலைக்காட்சி உலகுக்குப் புதிதல்ல. சேத்தன் – தேவதர்ஷினி, ராஜ்கமல் – லதா ராவ் தொடங்கி, செந்தில்- ஸ்ரீஜா, ரச்சிதா – தினேஷ், ஆல்யா – சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளை உதாரணங்களாகச் சொல்லலாம். எப்போதோ திருமணப் பந்தத்தில் நுழைந்து கணவன் மனைவி ஆகிவிட்ட இந்த ஜோடிகளெல்லாம் நிச்சயம் கொரோனா காலப் பிரிவு போன்ற ஒரு பிரிவை அனுபவித்திருக்க மாட்டார்கள். தற்போது காதலித்து வருகிற சில ஜோடிகளைத்தான் ‘கொரோனா’ பாடாய்ப் படுத்துவதா புலம்புகிறார்கள்.

ஸ்ரேயா அஞ்சன்
ஸ்ரேயா அஞ்சன்

சீரியல் வரலாற்றில் முதன் முதலாக லிப்லாக் காட்சியில் நடித்துப் பரபரப்பு கிளப்பிய ‘திருமணம்’ தொடரின் சித்து-ஸ்ரேயா அஞ்சன் லாக்டெளன் பிரிவின் ஏக்கத்தைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கும் வீடியோதான் சின்னத்திரை ஏரியாவின் லேட்டஸ்ட் டாக்.

இருவரும் அவரவர் வீட்டிலிருந்து ஷூட் செய்து ஒரே வீடியோவாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். வீடியோவில் தேநீர் அருந்தியபடியே ஸ்ரேயா முத்தங்களைப் பறக்கவிட, அழகாக கேட்ச் செய்கிறார் சித்து. வீடியோ குறித்து இருவரிடமும் பேசும் முன், ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி நோக்கிய இவர்களது பயணம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம்.

ஸ்ரேயா மங்களூரு பொண்ணு. ‘திருமணம்’ தொடரில் ஹீரோ ஹீரோயினாக இவர்கள் இருவரும் கமிட் ஆனதுமே, ஸ்ரேயாவுக்குத் தமிழ் சொல்லித்தரத் தொடங்கினார் சித்து. சித்து சொல்லிக் கொடுத்த தமிழ் வார்த்தைகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளத் தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே இருவருக்குமிடையில் ஏதோவொன்று இருப்பதாகக் கிளம்பியது கிசுகிசு.

சித்து-ஸ்ரேயா
சித்து-ஸ்ரேயா

இன்னொருபுறம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடிப் பொருத்தம் வெகுவாக ரசிக்கப்பட, இயக்குநரும் எக்கச்சக்க க்ளோஸ் அப் காட்சிகளைப் புகுத்தி, ரீல் லவ் ரியல் லவ் ஆவதற்குத் தன் பங்குக்கு ரோடு போட்டுக் கொடுத்தார். விளைவு, கிசுகிசு என்றது போய், இருவர் காதுபடவே ‘இவர்களிடையே காதல்’ எனப் பேசப்பட்டது.

இப்படிக் கிளம்பிய பேச்சுக்களை இருவருமே மறுக்கவில்லை என்றாலும், ஏனோ அதன்பிறகு சேர்ந்து பேட்டிகள் தருவதைத் தவிர்க்கத் தொடங்கினர். இது சீரியல் ரசிகர்களைக் குழப்பத்தில் தள்ளியது.

‘இவங்க லவ் பண்றாங்களா இல்லையா’ என அறிந்து கொள்ள சீரியல் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்த நேரத்தில்தான் வந்து சேர்ந்தது கொரோனா. சீரியலும் ஷூட்டிங்கும் ரத்தாகி இப்போது சித்து சென்னையிலும் ஸ்ரேயா மங்களூருவிலும் இருக்கிற சூழலில்தான் தற்போது முத்தங்களைப் பறக்க விட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறது ஜோடி.

வீடியோ குறித்துப் பேசலாமென ஸ்ரேயாவைத் தொடர்பு கொண்டால், தொடர்ந்து அவரது மொபைல் ரீச் ஆகாமலேயெ இருக்க, சித்துவிடம் பேசினேன்.

உங்களை சேர்ந்து பார்க்க ஆசையா இருக்குனு கேட்டுட்டே இருந்தாங்க. கொரோனாவால பல திண்டாட்டங்களை அனுபவிச்சிட்டிருக்கிற அவங்களோட இந்தச் சின்ன ஆசையை நிறைவேத்தலாமேன்னு ஸ்ரேயாகிட்ட கேட்டேன்.
சித்து
சித்து -ஸ்ரேயா
சித்து -ஸ்ரேயா

‘’டிவி இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை, ஹீரோ ஹீரோயினை ஜோடியா மக்களுக்குப் பிடிச்சுப் போச்சுன்னா, பிறகு அந்த சீரியலை அடிச்சுக்கவே முடியாது. அந்த வகையில என்னையும் ஸ்ரேயாவையும் ரசிகர்கள் ஏத்துக்கிட்டதோட, சீரியல் ஜோடியான நாங்க ரியல் லைஃப்லயும் சேரணும்னு ஆசைப்பட்டு வர்றாங்க. இந்த நிலையில கொரோனா வந்து அவங்க எங்களை ரொம்பவே மிஸ் பண்ற மாதிரி ஆகிட்டதால, ‘உங்களை சேர்ந்து பார்க்க ஆசையா இருக்கு’னு கேட்டுட்டே இருந்தாங்க. கொரோனாவால பல திண்டாட்டங்களை அனுபவிச்சிட்டிருக்கிற அவங்களோட இந்தச் சின்ன ஆசையை நிறைவேத்தலாமேன்னு ஸ்ரேயாகிட்ட கேட்டேன். அவங்களும் சம்மதிக்கவே, வீடியோ வெளியிட்டோம். ஆனா நாங்களே எதிர்பார்க்காத வரவேற்பு வீடியோவுக்குக் கிடைச்சிருக்கு’ எனச் சிரிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு