Published:Updated:

"திட்டி, கலாய்க்கிறதில் எனக்கு உடன்பாடு கிடையாது" நெட்ப்ளிக்ஸில் களமிறங்கிய `டாப் 10' சுரேஷ்!

`டாப் 10' சுரேஷ்

"என் குரல் 90-ஸ் கிட்ஸ் மனதில் பதிஞ்சிடுச்சு. அதனால, அவங்க எப்ப என் குரலைக் கேட்டாலும் அதே எனர்ஜியை பீல் பண்றாங்க!"

"திட்டி, கலாய்க்கிறதில் எனக்கு உடன்பாடு கிடையாது" நெட்ப்ளிக்ஸில் களமிறங்கிய `டாப் 10' சுரேஷ்!

"என் குரல் 90-ஸ் கிட்ஸ் மனதில் பதிஞ்சிடுச்சு. அதனால, அவங்க எப்ப என் குரலைக் கேட்டாலும் அதே எனர்ஜியை பீல் பண்றாங்க!"

Published:Updated:
`டாப் 10' சுரேஷ்

சன் தொலைக்காட்சியில் டாப் 10 நிகழ்ச்சியை 22 வருடங்களுக்கும் மேலாகத் தொகுத்து வழங்கியவர், சுரேஷ் குமார். கிட்டத்தட்ட 1500-க்கும் மேற்பட்ட எபிசோட்களை இவர் மட்டுமே தொகுத்து வழங்கியிருக்கிறார். 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான தொகுப்பாளர்களுள் நிச்சயம் இவருக்கென தனி இடம் உண்டு. `நெட்ப்ளிக்ஸ் டாப் 10' என்கிற நிகழ்ச்சியை நெட்ப்ளிக்ஸூக்காக இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.

'டாப் 10' சுரேஷ்
'டாப் 10' சுரேஷ்

'நெட்ப்ளிக்ஸில் ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தாங்க. ரொம்ப யோசிச்சு ஓகே சொன்னேன். 2019-ல் டாப் 10 முடிந்தது. அதுக்கு பிறகு, கோவிட் வந்ததால ஒரு வருடம் சின்ன கேப் இருந்துச்சு. அப்பவும், என்னுடைய யூடியூப் சேனலில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் பண்ணிட்டு இருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெட்ப்ளிக்ஸூக்காக அவங்க கேட்டப்பவே ஸ்கிரிப்ட் ஒர்க் நான் தான் பண்ணுவேன்னு சொல்லிட்டேன். டாப் 10 பண்ணும்போதே ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லாமே கத்துக்கிட்டேன். என்னுடைய ஸ்டைலில் படம் குறித்த விமர்சனங்கள் இருக்குமே தவிர நேரடியாக படம் நல்லா இல்லைன்னு திட்ட மாட்டேன். ஏன்னா, அதுவும் ஒருத்தருடைய உழைப்புதான்! படம் எடுக்கிறதெல்லாம் ஈஸி கிடையாது. அதில் பலருடைய உழைப்பு இருக்கு. விமர்சனமா கொண்டு போகலாமே தவிர அவங்களைத் திட்டி, கலாய்க்கிறதில் எப்பவும் எனக்கு உடன்பாடு கிடையாது.

'டாப் 10' சுரேஷ்
'டாப் 10' சுரேஷ்

90-ஸ் கிட்ஸ் பொறுத்தவரை என் வாய்ஸ் அவங்க மனசுல ரிஜிஸ்டர் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். எப்போ எஸ்பிபி குரலில், 'ஹலோ எவ்ரிபடி..!' என்கிற புத்தாண்டு பாடலை கேட்டாலும் அந்த கொண்டாட்ட நேரத்திற்கு நம் மனம் போய் விடுமோ அதுபோல என் குரல் 90-ஸ் கிட்ஸ் மனதில் பதிஞ்சிடுச்சு. அதனால, அவங்க எப்ப என் குரலைக் கேட்டாலும் அதே எனர்ஜியை ஃபீல் பண்றாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெட்ப்ளிக்ஸில் டாப் 10 குறித்து பேசும்போது ரேட்டிங் பண்ண வேண்டாம்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன். முதலில் பண்றதனால அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள்னு கொண்டு போயிடலாம்னு சொன்னேன். அவங்ககிட்ட ஸ்கிரிப்ட்டிற்கென தனி டீம் இருந்தாங்க. அவங்ககூட டிஸ்கஸ் பண்ணி ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினேன். வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கிறது பொறுத்தவரை எனக்கு புல் ப்ரீடம் கொடுத்தாங்க. நான் எப்பவும் படம் குறித்து பேசிட்டு கடைசியில் ஒரு பன்ச் சொல்லுவேன். அந்த பன்ச் கதையோடு ஒத்துப்போகணும். ஸ்கிரிப்ட் அளவிற்கு சமமான மெனக்கெடல் பன்ச் எழுதுவதில் இருக்கும். எப்பவும் தமிழிலேயே பன்ச் சொல்லுவேன். ஆனா, நெட்பிலிக்ஸில் ஹாலிவுட், கொரியன் என பல லாங்குவேஜ் படங்கள், வெப் சீரிஸ்னு இருக்கிறதனால அது குறித்து விமர்சனம் பண்ணும்போது ஆங்கிலம் இருந்தா நல்லாயிருக்கும்னு டீம் சொன்னாங்க. அதனால, சில ஆங்கில பன்ச் இந்த ரிவ்யூவில் பயன்படுத்தியிருப்பேன். ரிசல்ட் நல்முறையில் வந்திருக்கிறது மனசுக்கு நிறைவா இருக்கு.

'டாப் 10' சுரேஷ்
'டாப் 10' சுரேஷ்

90ஸ் கிட்ஸ் முன்னாடியெல்லாம் என்ன நினைக்கிறாங்கன்னு அவங்களோட ஃபீட்பேக் தெரிஞ்சுக்க முடியாது. இப்ப என்னுடைய யூடியூப் பக்கத்தில் பட விமர்சனம் பார்த்துட்டு அது தொடர்பாக நேரடியா கம்மென்ட் பண்ணிடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு கம்மென்டிற்கும் நான் தவறாம ரெஸ்பான்ஸ் பண்ணிடுவேன்!' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism