Published:Updated:

பிக்பாஸ் சீசன் - 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்கிறாரா, Endemol Shine வெளியேறியதா… உண்மை என்ன?

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதில் Endemol Shine கைதேர்ந்தவர்கள். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் அதை சரியாகக் கையாண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திமுடிப்பார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்க ஏற்பாடுகளை செய்துவருகிறது விஜய் டிவி. இதற்கிடையே பிக்பாஸ் - 5 சீசனை கமல்ஹாசனே தயாரிக்கப்போவதாகவும், இதை நடத்திவந்த Endemol Shine நிறுவனம் வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திபரவி வருகிறது. இதன் உண்மை நிலவரம் என்ன என விசாரித்தோம்.

Endemol Shine என்பது டச்சு நிறுவனம். இந்நிறுவனம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காப்பிரைட்ஸ் வாங்கி தொடர்ந்து உலகம் முழுக்க இந்த ரியாலிட்டி ஷோவை நடத்திவருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட அனைத்து மொழிகளிலும் இந்த நிறுவனம்தான் நடத்திவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் அதை சரியாகக் கையாண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திமுடிப்பார்கள்.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

இந்த Endemol Shine நிறுவனத்தை கடந்த ஆண்டு Banijay எனும் ஃப்ரெஞ்சு நிறுவனம் வாங்கிவிட்டது. Banijay நிறுவனம் உலகம் முழுக்க கிளைபரப்பியிருக்கும் மிகவும் புகழ்பெற்ற மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவிக்கான சில தொடர்களையும் தயாரித்திருக்கிறது.

இந்த Banijay நிறுவனத்துடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸும், டிவி மகேந்திரனின் டர்மரிக் மீடியா நிறுவனமும் இணைந்து ஓடிடி வெப்சீரிஸ்கள் உள்பட சில நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடிவு செய்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதை வைத்துதான் பிக்பாஸ் -5 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசனே தயாரிக்கப்போவதாக செய்திகள் பரவியிருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சிக்கான உரிமங்கள் அனைத்தும் இப்போது Banijay நிறுவனத்திடம்தான் இருக்கிறது. இந்த ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக மட்டுமே கமல்ஹாசன் இருக்கிறார். இந்த 100 நாள் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் கால்ஷீட் என்பது 20 நாட்களுக்குள்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்கும் கமல்ஹாசனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

பிக்பஸ் -5 சீசன் நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து விகடன் இணையளத்தில் வெளியாகும். தொடர்ந்து இணைந்திருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு