Published:Updated:

`லாக் டௌன் முடிய காத்திருந்தா வேலைக்கு ஆகாது!' -கல்யாண குஷியில் 'குக் வித் கோமாளி' சாய்சக்தி

சாய்சக்தி
சாய்சக்தி

''எங்களுக்குள் திருமணம் உறுதியானதுல இருந்து தினமும் அவங்களோட பேசிட்டுதான் இருக்கேன்’’

`ஜோடி’, `கிச்சன் சூப்பர் ஸ்டார்’, `குக் வித் கோமாளி’ உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் சாய்சக்தி, விரைவில் மறுமணம் செய்ய இருக்கிறார்.

சாய்சக்திக்கு 2013-ம் ஆண்டு சென்னைப் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.

சாய்சக்தி
சாய்சக்தி

இந்நிலையில், `சாய்சக்தி தன்னுடைய உறவுக்காரப் பெண்ணை மறுமணம் செய்ய இருக்கிறார்’ என்றொரு தகவல் வர, சாய்சக்தியிடமே பேசினேன்.

``விவாகரத்து வாங்கி ரெண்டு வருஷமாச்சு. தனிமை ரொம்பவே மன அழுத்தத்தைத் தருது. அதனால, வீட்டுல எனக்கு இன்னொரு வாழ்க்கையை அமைக்கிற முயற்சியில் இருந்தாங்க. மும்பையில் இருக்கிற என்னுடைய உறவுக்காரப் பெண் ஒருத்தங்க என்னோடு வாழ சம்மதிக்கவே, ரெண்டு பேர் வீட்டுலயும் பெரியவங்க பேசினாங்க. அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமா முடிஞ்ச நேரத்துலதான் கொரோனா வந்துடுச்சு.

கொரோனா முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா, அது இந்த வருஷம் முடியற வரைக்கும் விடாது போலத் தெரியுது. அதனால ஜூலை அல்லது ஆகஸ்ட்ல கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம். லாக் டௌன் முடியறதுக்குக் காத்திட்டிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு தோணுது.

Vikatan

இன்னொரு முக்கியமான விஷயம், நான் இப்போ இருக்கிற சென்னைலயும் கொரோனா உச்சத்துல இருக்கு. அவங்க இருக்கிற மும்பைலயும் அதே நிலைமைதான். அதனால அவங்களை நான் சென்னைக்கோ, என்னை அவங்க மும்பைக்கோ கூப்பிட முடியாத சூழல். அதேநேரம், எங்களுக்குள் திருமணம் உறுதியானதுல இருந்து தினமும் அவங்களோட பேசிட்டுதான் இருக்கேன்’’ என்கிறார் சாய்சக்தி.

அடுத்த கட்டுரைக்கு