Published:Updated:

விகடன் TV: “நாங்க சீரியல் குடும்பம்!”

ஷ்யாம் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்யாம் குடும்பத்தினர்

ரக்‌ஷாவுக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்கணும்னு ஆசை. ரெண்டு வருஷமா அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டே இருந்தா. லாக்டெளன் சமயத்தில் நிறைய பேர் வீடியோஸ் போட்டாங்க.

விகடன் TV: “நாங்க சீரியல் குடும்பம்!”

ரக்‌ஷாவுக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்கணும்னு ஆசை. ரெண்டு வருஷமா அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டே இருந்தா. லாக்டெளன் சமயத்தில் நிறைய பேர் வீடியோஸ் போட்டாங்க.

Published:Updated:
ஷ்யாம் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்யாம் குடும்பத்தினர்

`கோலங்கள்' சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் ஷ்யாம். இவர் தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `பூவே உனக்காக' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவருடைய இரண்டு குழந்தைகளும் சீரியலில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். மூத்த மகள் நிவாஷினி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `செந்தூரப்பூவே' தொடரிலும், இளைய மகள் ரக்‌ஷா `பாரதி கண்ணம்மா' தொடரிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அழகிய மாலைப்பொழுதில் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றோம்.

“அப்பாவும் பொண்ணுங்களும் பாட்டு பாடுறதில் ரொம்ப பிசியா இருக்காங்க. நீங்க உள்ளே வாங்க” என நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார், ஷ்யாமின் மனைவி செளமியா.

“நாங்க `பிளே பாய்ஸ்'னு ஒரு ஆர்கெஸ்ட்ரா வச்சிருக்கோம். அதில் முன்னாடி நானும் பாடியிருக்கேன். பசங்க வளர்ந்துட்டதால அவங்களைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்குன்னு பாடுறதை விட்டுட்டேன். அங்கேதான் நிவாஷினி பாட்டு பாட ஆரம்பிச்சாங்க. இசைமீது அவங்களுக்கு ஆர்வம் இருந்ததால இப்போ முறையா பாட்டு கத்துக்கிட்டிருக்காங்க. ஹார்மோனியமும் வாசிக்கப் பழகிட்டிருக்காங்க. `டிக்கிலோனா' படத்தில் வருகிற `மஞ்ச கலரு குருவி' பாட்டை என் கணவர்தான் பாடினாரு” என்றவரின் முகத்தில் அத்தனை பெருமிதம்! அவரைத் தொடர்ந்து ஷ்யாம் பேச ஆரம்பித்தார்.

விகடன் TV: “நாங்க சீரியல் குடும்பம்!”

“என்னுடைய வாட்ஸப் டி.பி.ய பார்த்துட்டு இயக்குநர் பிரவீன் சார் மூலமாதான் என்னுடைய இரண்டு பொண்ணுங்களுக்கும் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. முதலில் நிவாஷினிதான் நடிக்கப் போனாங்க. நிவாஷினி நடிக்கிறதைப் பார்த்துட்டு ரக்‌ஷாவும் நடிக்கணும்னு ஆசைப்பட்டா. எதார்த்தமா ஆசைப்பட்டது `பாரதி கண்ணம்மா' சீரியல் மூலமா நிறைவேறிடுச்சு. அவங்க இரண்டு பேருக்கும் நடிக்கப் பிடிச்சிருக்குங்குறதனால நாங்களும் அதுக்கு சப்போர்ட் பண்ணினோம். அவங்க செட்ல ஜாலியா நடிச்சிட்டு வருவாங்க. எனக்கும் சரி, என் மனைவிக்கும் சரி, இரண்டு பசங்களும் நல்லாப் படிக்கணும் என்பது ரொம்பவே முக்கியம். இப்போ ரக்‌ஷா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாங்க. நிவாஷினி பத்தாம் வகுப்பு படிக்குறாங்க. நிவாஷினிக்கு அடுத்தடுத்து எக்ஸாம்ஸ் இருக்கிறதனால தொடர்ந்து ஷூட்டிங்குக்குப் போக முடியலை. `செந்தூரப்பூவே' டீம் அதைப் புரிஞ்சுகிட்டு ஒரே நாளில் அவளுடைய ஷாட்களை எடுத்து முடிச்சிட்டு அனுப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கிறதனால இரண்டையும் பார்த்துக்க முடியுது” என்றதும், “அப்பா, நம்ம சேனல் பற்றிச் சொல்லுங்க” எனக் கிசுகிசுக்கிறார் நிவாஷினி.

விகடன் TV: “நாங்க சீரியல் குடும்பம்!”

“ரக்‌ஷாவுக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்கணும்னு ஆசை. ரெண்டு வருஷமா அப்பா அம்மாகிட்ட கேட்டுட்டே இருந்தா. லாக்டெளன் சமயத்தில் நிறைய பேர் வீடியோஸ் போட்டாங்க. நானும் ரக்‌ஷாவும் தொடர்ந்து கேட்டுட்டே இருந்ததால அப்பா சரின்னு சொன்னாங்க. `ரக்‌ஷா வைப்ஸ்'னு சேனலுக்கு நான்தான் பேர் வச்சேன்” என்றதும், “நானே சொல்றேனே” என ரக்‌ஷா உற்சாகமாய்ப் பேச ஆரம்பித்தார்.

“என்னுடைய பிறந்தநாள் பிளாக் நிறைய பேர் பார்த்தாங்க. நான்கு வீடியோ போட்டதுக்கே நல்ல ரீச் கிடைச்சது. அதனால தொடர்ந்து பிளாக் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நானும் அக்காவும் சேர்ந்து வீடியோஸ் பண்ணுவோம். அப்பப்போ எங்க அம்மாவையும் அப்பாவையும் வீடியோவில் சேர்த்துப்போம். நான் நல்லா சமைப்பேன். நான் செய்கிற ஸ்வீட்ஸ் எல்லாம் நல்லா இருக்குன்னு அம்மா சொல்லுவாங்க. எனக்கு செஃப் ஆகணும்னு ஆசை” என்கிறார்.

“எங்க பசங்ககிட்ட இதைத்தான் நீங்க பண்ணணும்னு நாங்க எதையுமே திணிச்சதில்லை. அவங்களுடைய விருப்பத்துக்கு எங்களால முடிஞ்ச சப்போர்ட் மட்டும் பண்ணுவோம். அவங்களுக்கு நடிக்கிறது மூலமா காசு வருதுங்குறதுகூடத் தெரியாது. ஆசைப்பட்டு நடிக்கிறாங்க, அவ்வளவுதான்! பார்க்கிற எல்லோரும் ‘சூப்பரா நடிக்கிறீங்க’ன்னு மனதாரப் பாராட்டுவாங்க. நிவாஷினி கொஞ்சம் சைலன்ட். ரக்‌ஷா சீரியலில் நடிக்கிற மாதிரியே நிஜத்திலும் போல்டான பொண்ணு. இரண்டு பேரும் ஏதோ ஒரு வகையில் சாதிக்க முனைப்போடு இருக்காங்க என்பதில் ரொம்பவே சந்தோஷம்” என்கிறார் ஷ்யாம், மகிழ்ச்சி ததும்பி.