Published:Updated:

“பர்சனல் வேற... சீரியல் லைஃப் வேற!”

நவீன் - ஹீமா பிந்து
பிரீமியம் ஸ்டோரி
நவீன் - ஹீமா பிந்து

டிவி - ரீல் ஜோடி

“பர்சனல் வேற... சீரியல் லைஃப் வேற!”

டிவி - ரீல் ஜோடி

Published:Updated:
நவீன் - ஹீமா பிந்து
பிரீமியம் ஸ்டோரி
நவீன் - ஹீமா பிந்து

சமூகவலைதளப் பக்கங்களில் `நவீன் - ஹீமா பிந்து' ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `இதயத்தை திருடாதே அத்தியாயம்-2' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். `விஸ்வாசம்' படத்தைப் போன்ற கதைக்களம் என்பதால் ஆடியன்ஸ் பெரிய அளவில் இந்தத் தொடரைக் கொண்டாடுகிறார்கள். இந்த ஸ்டார் ஜோடிகளுடன் ஒரு ஸ்பெஷல் சாட்!

நம்மை வரவேற்று கூலாகப் பேசத் தொடங்கினார், நவீன். ``நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை. என் அப்பா சினிமாவில் லொகேஷன் மேனேஜராகவும், ஆக்டராகவும் இருக்கார். ஆனாலும், எனக்கு நடிக்க ஆர்வம் இருந்ததில்லை. டெக்னீஷியனாகணும்னுதான் விஸ்காம் படிச்சேன். ஒரு டைரக்டர் கட்டாயப்படுத்தி என்னை நடிக்க வச்சார். என் நடிப்பை மானிட்டரில் பார்த்தபோது, எனக்கே என்னைப் பிடிச்சிருந்துச்சு. `சரி, நாமளும் ட்ரை பண்ணுவோம்'னு அப்போதான் முடிவெடுத்தேன். `போங்கடி நீங்களும் உங்க காதலும்' என் முதல் படம். கிட்டத்தட்ட 10 படங்களில் நடிச்சேன். ஆனா, பெரிய அங்கீகாரம் கிடைக்கல. நிறைய இடங்களில் ரிஜெக்ட் பண்ணினாங்க. சீரியலில் நடிக்கவும் ஆடிஷனில் கலந்துக்கிட்டு, அதிலுமே ரிஜெக்ட் ஆனேன். அப்போ இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சீரியல்னா நம்ம முகம் மக்கள்கிட்ட ரீச் ஆகும்னு நம்பினேன். ஆனா, இந்த அளவுக்கு ரீச் கிடைக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஃபர்ஸ்ட் சீசன் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்போ சீசன் 2 போய்ட்டிருக்கு'' என்றவரிடம் `ரீல் ஜோடி ரியல் ஜோடியாகுங்கன்னு ரசிகர்கள் சொல்றாங்களே' என்று கேட்டோம்.

``எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிதல் இருக்கு. அவங்க எனக்கு ரொம்ப கம்பர்ட் ஜோன் உருவாக்கிக் கொடுத்தாங்க. அதனாலதான் எங்களால இயல்பா நடிக்க முடியுது. என்னைப் பொறுத்தவரை பர்சனல் லைஃப் வேற, சீரியல் லைஃப் வேற. அதையும் இதையும் கனெக்ட் பண்ண முடியாது. இப்போதைக்கு சீரியலில் நடிக்கிறேன்... அடுத்த பிளான் பற்றியெல்லாம் இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்ல'' என்றார் நவீன்.

“பர்சனல் வேற... சீரியல் லைஃப் வேற!”

தொடர்ந்து ஹீமா பிந்து பேசினார். ``எனக்கு சொந்த ஊர் சென்னை. அப்பா சினிமாத் துறையில் இருக்கிறதனால, இந்தத் துறை எனக்கு வேண்டாம்னு சொன்னாங்க. `படிப்புல கவனம் செலுத்து'ன்னு சொன்னாங்க. அதனால் நான் பி.காம் முடிச்சிட்டு ஃபேஷன் டிசைனிங் டிப்ளமோ கோர்ஸ் படிச்சேன். நான் படிச்சிட்டிருக்கும்போது ஒரு புரொடக்‌ஷன் ஹவுஸில் இருந்து சீரியலில் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா, படிக்கணுங்கிறதனால அந்த வாய்ப்பை எடுத்துக்க முடியல. படிப்பு முடிஞ்சதும் மறுபடி அதே புரொடக்‌ஷனில் இருந்து `இதயத்தை திருடாதே' சீரியலுக்காகக் கூப்டாங்க. என்மேல நம்பிக்கை வச்சு என்னைக் கூப்பிட்டாங்க. ஏற்கெனவே ஒரு தடவை வேண்டாம்னு சொன்னதால இந்த முறை வேண்டாம்னு சொல்ல மனசில்லாம அப்பாகிட்ட பர்மிஷன் கேட்டேன். என் ஆசைக்காக அப்பா சம்மதிச்சாங்க.

இப்போ கிட்டத்தட்ட 750 எபிசோடுக்கு மேலே நடிச்சிட்டேன். இந்த அளவுக்கு ஃபேன்ஸ் லவ் இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. எங்க ஃபேமிலியில் என் மேல எப்படி எதையுமே எதிர்பார்க்காம அன்பைக் கொடுப்பாங்களோ, அதே அன்பை இவங்க கொடுக்கிறாங்க. அவங்க அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்னே தெரியல.

நவீன் பற்றிச் சொல்லணும்னா எங்களுக்குள்ள நல்ல ஃப்ரெண்ட்ஷிப் பாண்டிங் இருக்கு. இப்போ அவர் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் ஆகிட்டார். ஃபேமிலியில் நடக்கிற எல்லா நல்லது கெட்டதிலும் அவர் நிச்சயம் இருப்பார். அந்த அளவுக்கு நாங்க குளோஸ்'' என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.

``எனக்கு ஒரு பொட்டிக் ஆரம்பிக்கணுங்கிறதுதான் ஆசை. நிச்சயம் அந்த ஆசையை சீக்கிரம் நிறைவேற்றிடுவேன்'' என்றார், பிந்து. ``அவ்ளோதானா?'' என்றால், ``வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்டார்.

கடைசிவரைக்கும் உண்மையைச் சொல்ல மாட்டேங்கறீங்களே!