சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

விகடன் TV: “தமிழ் சீரியல் ஹீரோக்களைப் பிடிக்காது!”

ஆயிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயிஷா

- ஆயிஷா

காசர்கோட்டில் கல்லூரியை முடித்துவிட்டு மேல்படிப்புக்காகச் சென்னை வந்த ஆயிஷா, இப்போது முன்னணித் தமிழ்ச் சேனலில் பிரைம் டைம் சீரியலின் ஹீரோயின். ஷூட்டிங் ஸ்பாட் லஞ்ச் பிரேக்கில் அவருடன் ஒரு சாட்டிங்.

``உண்மையைச் சொல்லுங்க, தமிழ்நாட்டுக்குப் படிக்க வந்தீங்களா அல்லது நடிக்கத்தான் வந்தீங்களா?’’

``முதன் முதலா ரியாலிட்டி ஷோவுல‌ ஜஸ்ட் முகம் காட்டலாம்’ங்கிற மைன்ட் செட்டோடுதான் போனேன். அங்க என் பர்பாமன்ஸைக் கொண்டாடிட்டாங்க. அது அப்படியே டிவிக்குள் இழுத்துடுச்சு. அதனால நடிக்கணும்னு நான் ஸ்கெட்ச் போட்டெல்லாம் வரலை, நம்புங்க.’’

விகடன் TV: “தமிழ் சீரியல் ஹீரோக்களைப் பிடிக்காது!”

``சீரியலுக்கு வரலைன்னா என்னவாகியிருப்பீங்க?’’

“ஏர் ஹோஸ்டஸ் வேலை மேல எனக்கு லவ் அதிகம். ஸ்கூல் நாள்களில் வீட்டுல இந்த ஆசையைச் சொல்லியிருக்கேன். அந்தச் சமயத்துல எங்க ஊர்ல ப்ளைட் ஆக்ஸிடென்ட். அதனால பயந்துபோனவங்க, அதெல்லாம் சரிப்பட்டு வராது’ன்னு அப்பவே பயமுறுத்தினதும் ஞாபகத்துல இருக்கு.’’

`` ‘சத்யா’வுல பையன் மாதிரி நடிக்கறீங்க. ஹோம் ஒர்க் ஏதாவது?’’

‘`எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணலை. ஆனா யாரும் இதை நம்ப மாட்டேங்கிறாங்க. இந்த சீரியல் அனுபவத்துல இருந்து எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கு. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளேயும் ‘ஆம்பள’ மனசும் இருக்கத்தான் செய்யுது. எங்கிட்ட நிறைய கேர்ள்ஸ் வந்து அதைப் பத்தி மனம் திறந்து பேசியிருக்காங்க. ‘உன்ன மாதிரிதான் இருக்கணும்க்கா’ன்னு ஒரு பெண் என்னைப் பார்த்துச் சொல்றதை நான் வேறெப்படி எடுத்துக்கறது? இப்படியொரு சீரியல் கிடைக்கறப்ப உள்ளுக்குள் இருக்கிறது வெளிப்பட்டுடுச்சு. அதனால ஹோம் ஒர்க் அவசியமே இல்லை.”

``ராத்திரி 10 மணிக்கு மேல ரோட்டுல தனியா போறீங்க. சில பசங்க வம்பு பண்றாங்க. எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?’’

“சென்னை வந்தபுதுசுல பயந்திருக்கேன். இப்பெல்லாம் ‘வாங்கடா ஒரு கை பார்த்துடலாம்’னுதான் மனசு சொல்லுது. அது சரி எதுக்குங்க உங்களுக்கு இப்படியெல்லாம் கற்பனை வரணும். சீரியல்ல நான் போடற சண்டையைப் பார்த்துட்டுக் கேக்கறீங்களா? சீரியல் ரொம்பத்தான் கெடுத்து வெச்சிருக்கில்ல.’’

விகடன் TV: “தமிழ் சீரியல் ஹீரோக்களைப் பிடிக்காது!”

``எப்போ கல்யாணம்? வரப்போறவர் எப்படி இருக்கணும்?’’

“இன்னும் ரெண்டு அல்லது மூணு வருஷம் ஆகும். வரப் போகிறவர் பாதி ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா மாதிரியும் மீதி ‘சூரரைப் போற்று’ சூர்யா மாதிரியும் இருந்தா நல்லது. அப்படியே வீட்டோட அட்டாச்சா இருக்கிறதுல ‘தல’ மாதிரியும் இருக்கணும். நான் ‘தல’ ரசிகை. அதனால அவரையும் மிஸ் பண்ணக் கூடாதில்லையா?’’

``சினிமாவில் பிடிச்ச ஹீரோன்னா அஜித், சூர்யான்னு சொல்றீங்க. சீரியல் ஹீரோக்களில் பிடிச்சவங்க..?’’

‘`ஆயிஷாகிட்ட இந்த வம்பு வேண்டாம். தமிழ் சீரியல் ஹீரோக்களில் எனக்கு யாரையும் பிடிக்காதுங்க. போதுமா?‌”