சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “எனக்கு நடிக்கவே வரல!”

தர்ஷனா அசோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
தர்ஷனா அசோகன்

யூனிட்ல எனக்குக் கிடைச்ச பெரிய சப்போர்ட்டுல‌ எல்லாத்தையும் கடந்து இப்ப நானும் ஒரு நடிகையாகிட்டேன்

பல் டாக்டருக்குப் படிக்கச் சென்னை வந்த தர்ஷனா அசோகன், இப்போது 400 எபிசோடுகளை நெருங்கிவிட்ட, `நீதானே எந்தன் பொன் வசந்தம்' சீரியலின் ஹீரோயின். ஷூட்டிங் லஞ்ச் பிரேக்கில் பேச்சுக் கொடுத்தேன்.

கேரளாவுல இல்லாத டென்டல் காலேஜா? உண்மையைச் சொல்லுங்க, டாக்டராகணும்னு வந்தீங்களா அல்லது ஆக்டராகணும்னு ஹிடன் அஜென்டாவோடு வந்தீங்களா?

‘‘சின்ன வயசுல இருந்தே டான்ஸ்ல ஆர்வம் இருந்தது. சினிமா ஆசையெல்லாம் இருந்தது, மறுக்கலை. ஆனா ஹிடன் அஜென்டா வச்சுக்கிட்டு வர்ற அளவுக்குத் தைரியம் கிடையாது.

டென்டல் முடிச்சதும் சும்மா பண்ணின ஒரு போட்டோ ஷூட் பார்த்து ‘நீ தானே எந்தன் பொன் வசந்தம்' சீரியலுக்குக் கூப்பிட்டாங்க. ஆடிஷன் போன இடத்துலயும் எனக்கு நடிப்பே வரலை. ஆனாலும், அந்த கேரக்டருக்கு நான் செட் ஆவேன்னு செலக்ட் பண்ணினதாச் சொன்னாங்க.’’

நீங்களே நடிப்பு வரலைன்னு சொல்றீங்க. அப்போ நெகடிவ் கமென்டுகள் நிறைய வந்திருக்குமே?

‘‘எக்கச்சக்கம். மூணு மாசம் தாண்ட மாட்டான்னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. ஆனா யூனிட்ல எனக்குக் கிடைச்ச பெரிய சப்போர்ட்டுல‌ எல்லாத்தையும் கடந்து இப்ப நானும் ஒரு நடிகையாகிட்டேன்.’’

விகடன் TV: “எனக்கு நடிக்கவே வரல!”

முதல் சீரியல்லயே அதிக வயதுடைய ஹீரோவுடன் ஜோடி. எப்படி சம்மதிச்சீங்க?

‘‘நடிக்கவே வராத என்னை அந்த வெகுளித்தனமான கேரக்டருக்காகவே ‘தேத்திடலாம்'னு கூப்பிட்டவங்ககிட்ட போய், ‘ஹீரோவுக்கு வயசு அதிகமா இருக்கு’ன்னெல்லாம் சொல்றது ஓவரா இருக்காதா? அதனால அதைப் பத்தி எதுவும் யோசிக்கலை. ஆனா கதைக்கு அது அவசியம்கிறதால ரசிகர்களே ஏத்துக்கிட்டாங்களே!’’

அடுத்த சீரியல், சினிமாக் கனவு?

‘‘இந்த ஒரு சீரியலுக்கே நேரம் சரியா இருக்கு. அடுத்து வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. இந்த சீரியல் முடிஞ்ச பிறகுதான் பார்க்கணும். சினிமா இதுவரை பண்ணினதில்லை. சீரியலுக்கு அமைஞ்ச மாதிரியே அதிர்ஷ்டம் இன்னொரு தடவையும் கதவைத் தட்டினா நல்லாதான் இருக்கும்.

மத்தபடி ரெண்டு முக்கியமான பிளான் மனசுல இருக்கு. ஒண்ணு, வெட்டிங் பிளானிங் பிசினஸ் தொடங்கலாம்னு இருக்கேன். கம்பெனிக்குப் பெயரெல்லாம் வச்சிட்டேன். டெகரேஷன், மேக்-அப் மாதிரியான விஷயங்களில் எனக்கு ரொம்பவே ஆர்வம். அந்த ரெண்டாவது, ஒரு டென்டல் க்ளினிக்.’’