Published:Updated:

"ஸ்கூல் படிக்கறப்ப என்கிட்ட மத்த குழந்தைகளை பழக விடமாட்டாங்க!"- நினைவுகள் பகிரும் நித்யா ரவிந்திரன்

நித்யா ரவிந்தர்

கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுல இருக்கப்போறேன்னு நினைச்சேன். ஆனா மேரேஜ் ஆன ஒரு வாரத்துல சினிமா வாய்ப்பு. மணி சாரோட 'அக்னி நட்சத்திரம்', அப்பறம் 'பாம்பே'ல நடிக்க கேட்டிருந்தாங்க. 'எனக்கு நடிக்க விருப்பமில்லை சார்'னு சொல்லிட்டேன்." - நித்யா ரவிந்தர்

"ஸ்கூல் படிக்கறப்ப என்கிட்ட மத்த குழந்தைகளை பழக விடமாட்டாங்க!"- நினைவுகள் பகிரும் நித்யா ரவிந்திரன்

கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுல இருக்கப்போறேன்னு நினைச்சேன். ஆனா மேரேஜ் ஆன ஒரு வாரத்துல சினிமா வாய்ப்பு. மணி சாரோட 'அக்னி நட்சத்திரம்', அப்பறம் 'பாம்பே'ல நடிக்க கேட்டிருந்தாங்க. 'எனக்கு நடிக்க விருப்பமில்லை சார்'னு சொல்லிட்டேன்." - நித்யா ரவிந்தர்

Published:Updated:
நித்யா ரவிந்தர்
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தங்கை ரோலில் ஒரு கலக்கு கலக்கியவர் நித்யா ரவிந்தர். நடிப்பு மட்டுமில்லாமல் டப்பிங், பாடகி எனப் பன்முகம் கொண்டவர் இவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மேடை நாடகங்களில் அசத்தியவர். சமீபத்திய 'அட்ரங்கி ரே'யில் தனுஷின் அம்மாவாக நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாக எஃ.ப். எம். ஒன்றின் டைரக்டராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவரிடம் பேசினேன்.

"மியூசிக் எனக்கு சின்ன வயசில இருந்தே பிடிக்கும். அதனால ஒரு ரிலாக்சேஷனுக்காகப் பாடுறது பிடிக்கும். பொழுது போகறதுக்காக அப்பப்ப பாடுவேன். என்னோட சின்னவயசிலேயே நான் நடிக்க வந்துட்டேன். அஞ்சு வயசில இருந்தே மௌலி சார், காத்தாடி சாரோட மேடை நாடகங்கள் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஸ்கூலுக்குப் போவேன். நடிக்கறோம்... படிக்கறோம்னு தோணும்.

நாற்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் நடிக்கற குழந்தைங்கனாலே மத்தவங்க எங்களோட பழகத் தயங்குவாங்க. அவங்களோட குழந்தைகளை எங்களோட பழக விடமாட்டாங்க. 'அவள்லாம் நடிக்கறா... அவ கூடவெல்லாம் சேராதே'னு சொல்லிடுவாங்க. அந்தக் குழந்தைங்க என்னோட வயசுனால 'எங்க அம்மாதான் அப்படி சொன்னாங்க'ன்னு உண்மையை போட்டு உடைச்சிடுவாங்க. அவ்ளோ சில்லியா இருந்திருக்காங்களேனு இப்ப தோணும்.

நித்யா ரவிந்தர்
நித்யா ரவிந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்ப ஸ்கூல் விட்டதும், மத்த குழந்தைங்க விளையாட போவாங்க. நான் நாடகத்துக்கு நடிக்க போயிடுவேன். ஸோ, லைஃப் நிக்காமல் ஓடிப்போச்சு. நாடகம்னாலே அது ஆடியோ மீடியாதானே... அங்கே நடிப்பை விட, நமது எக்ஸ்பிரஷன்ஸை குரல்லதான் வெளிப்படுத்தணும். கடைசி ரோல்ல இருக்கறவன் வரை புரியணும்னா, நம்ம குரல் தெளிவா இருக்கணும். விசு சாரோட 'அவள் சுமங்கலிதான்' நாடகம் ரொம்ப பிடிக்கும். ஒய்.ஜி.மகேந்திரன் சார் 'வியட்நாம் வீடு' நாடகம் பண்றப்ப பப்பியம்மா (பத்மினி) ரோலை நான் பண்ணியிருப்பேன். அது மறக்க முடியாத ரோல்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமாவுல நடிக்க வரும்போதுகூட அப்பா சொன்னதால நடிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா... நான் கிறிஸ்டியன் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்ப என்னோட லட்சியம்னா கன்னியாஸ்திரியா ஆகி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும். அப்படித்தான் நான் நினைச்சேன். ஆனா, அப்பா சொன்னதால நடிச்சேன். ஹீரோயினா ஆகணும், நிறைய கேரக்டர்கள்ல நடிக்கணும்னு இப்படி எதுவும் நினைச்சதில்ல. எனக்கு கல்யாணமான பிறகுதான் சினிமா மீதான ஆர்வம் அதிகமானது.

நித்யா
நித்யா

கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுல இருக்கப்போறேன்னு நினைச்சேன். ஆனா மேரேஜ் ஆன ஒரு வாரத்துல சினிமா வாய்ப்பு. மணி சாரோட 'அக்னி நட்சத்திரம்', அப்பறம் 'பாம்பே'ல நடிக்க கேட்டிருந்தாங்க. 'எனக்கு நடிக்க விருப்பமில்லை சார்'னு சொல்லிட்டேன். அது எவ்வளவு பைத்தியகாரத்தனம் இப்பத் தோணும். அப்புறம் 'அலைபாயுதே'க்காக அவங்க கேட்கும் போது உடனே பிடிச்சுக்கிட்டேன். நாம எவ்ளோ நேரம் நடிக்கறோம்னு முக்கியமில்ல. நாம வந்தா அது மைன்ட்ல ரிஜிஸ்டர் ஆகணும். அது போதும். நமக்கு வரணும்னு இருக்கறது எங்கிருந்தாலும் வந்திடும்.

சீரியல்ல வேற வேற ரோல்கள் கிடைக்கறதால, மனசுக்கு நிறைவாகவும் பண்றோம். ரஜினி, கமல்னு எல்லாருக்கும் தங்கையா நடிச்சிட்டேன். அதிலும் தெலுங்கில் அப்ப உள்ள ஹீரோக்கள் எல்லோருக்குமே தங்கை ரோல்ல நடிச்சிட்டேன்.

இப்ப ஒரு தமிழ் எஃப்.எம். ரேடியோவுக்கு இயக்குநராகவும் இருக்கேன். துபாய்ல உள்ள பண்பலை இது. ஏழாவது வருஷமா பொறுப்பில இருக்கேன். நான் டப் பண்ண வேண்டிய சீரியல்களுக்கு ஸ்கிர்ப்ட் எல்லாம் மெயில் வந்திடும். அதை என்னோட ஸ்டூடியோவிலேயே டப் பண்ணி அனுப்பிடுவேன்.

கணவர் ரவிந்திரன். ஒளிப்பதிவாளர். மகன் வளர்ந்துட்டான். மாமியார் எங்களோட இருக்காங்க. வீட்டு வேலை செய்ய மெய்டு ஒருத்தரும் இருக்காங்க. ரெண்டு நாய்க்குட்டிகளும் வளர்க்கறோம். கிடைச்ச நேரத்துல எல்லாமே மேனேஜ் பண்ணிக்கறேன்" - எனச் சொல்லி மகிழ்கிறார் நித்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism