Published:Updated:

''குஷ்பு மட்டும் இல்லைனா என் நிலைமை மோசமாகியிருக்கும்!'' - டிவி நடிகை பூஜா

பூஜா - குஷ்பு

''சீரியலில் எல்லோரும் என்னை வில்லியாத்தான் பார்த்திருக்கிறாங்க. நிஜத்தில் நான் அப்படியே ஆப்போசிட். கத்திக் கத்தி சண்டை போடுறதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது!''

''குஷ்பு மட்டும் இல்லைனா என் நிலைமை மோசமாகியிருக்கும்!'' - டிவி நடிகை பூஜா

''சீரியலில் எல்லோரும் என்னை வில்லியாத்தான் பார்த்திருக்கிறாங்க. நிஜத்தில் நான் அப்படியே ஆப்போசிட். கத்திக் கத்தி சண்டை போடுறதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது!''

Published:Updated:
பூஜா - குஷ்பு

சின்னத்திரையில் வில்லியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை பூஜா. பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் சீரியல் வில்லியாக தமிழ் இல்லங்களில் அதிகம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவர் இப்போது என்ன செய்கிறார் என அவருக்கு போன் அடித்தேன்!

பூஜா
பூஜா

''14 வயசுல மீடியா ஃபீல்டுக்குள்ள வந்தேன். எங்க ஃபேமிலில நிறையப் பேர் மீடியாவை சேர்ந்தவங்கன்றதால எனக்கும் நடிப்பு மேல காதல் இயல்பாவே இருந்துச்சு. நான் தமிழ் சீரியல் இன்டஸ்ட்ரிக்குள் நுழைஞ்சதற்கான காரணமே குஷ்புதான். அவங்க மூலமாதான் எனக்கு 'குங்குமம்' சீரியல் வாய்ப்பு கிடைச்சது.

என்னோட அப்பா இறந்த நேரம் நான் 'கல்கி'ன்னு ஒரு சீரியல்ல நடிச்சிட்டு இருந்தேன். அப்போ அதிகமா கவலைப்பட்டு எனக்கு உடல் ரீதியான பிரச்னைகள் வந்துடுச்சு. அப்ப குஷ்பு மட்டும் இல்லைனா என் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அந்தநேரம் கூடப் பிறந்த அக்கா மாதிரி என்னை குஷ்பு பார்த்துக்கிட்டாங்க.

கிட்டத்தட்ட நாலு வருஷமா நாங்க மீட் பண்ணிக்கலை. கொரோனா லாக்டெளனுக்கு முன்னாடி ஒரு கல்யாண வீட்ல வெச்சு குஷ்புவை சந்திச்சேன். அவங்க என்னை பார்த்ததும் ஓடி வந்து கண்ணை பொத்திக்கிட்டு யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு இன்னைக்கு வரைக்கும் எங்களுக்குள்ள நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கொரோனா பிரேக்ல என்னுடைய பழைய சீரியல்களைப் போட்டு பார்க்கிறதுக்கு எனக்கு நேரம் கிடைச்சது. நான் நடிச்ச 'தங்கமான புருஷன்' சீரியல் பார்த்தேன். அது நெகட்டிவ், பாசிட்டிவ் கலந்த ஒரு ரோல். நடிக்கும்போது எனக்கு எதுவுமே தெரியலை. இத்தனை வருஷம் கழிச்சு அதைப் பார்க்கும்போது இப்படியெல்லாமா நாம நடிச்சிருக்கோம்னு எனக்கே தோணுச்சு.

பூஜா
பூஜா

சீரியல்ல எல்லோரும் என்னை வில்லியாவேதான் பார்த்திருக்கிறாங்க. நிஜத்தில் நான் அப்படியே ஆப்போசிட். கத்தி கத்தி சண்டை போடுறதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது. எனக்கு கோபம் வந்தா எதுவும் பேசமா அமைதியா உட்கார்ந்திடுவேன். எங்கேயாவது கூட்டமா சண்டை போட்டுட்டு இருந்தாங்கன்னா அந்த இடத்துல கூட நான் நிற்க மாட்டேன். ஆனாலும், என்னுடைய நடிப்பு பலருக்கும் பிடிச்சிருக்குன்னு நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்ஸ்டாகிராமில் நிறைய பேர், 'நீங்க என் கிரஷ்'னு சொல்லுவாங்க... அதே மாதிரி 'நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன்'னு சிலர் சொல்லுவாங்க. எல்லோரும் எப்போ மறுபடி ஸ்கிரீனில் உங்களை பார்க்கலாம்னு கேட்டுட்டே இருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ ஃபேமிலியோடு பெங்களூருவில் இருக்கோம். ZEE கன்னடால ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். நானும், என் சகோதரரும் சேர்ந்து ஒரு புரொடக்‌ஷன் ஹவுஸ் வெச்சிருக்கோம். அது மூலமா ஒரு படம் தயாரிச்சோம். அந்தப் படத்துக்கு ஹீரோயின்ல இருந்து எல்லோருக்கும் நான்தான் காஸ்ட்யூம் டிசைனரா இருந்தேன்.

பூஜா
பூஜா

இதுபோக, நாங்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கோம். அதில் புதுசு, புதுசா நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்கோம். அதனால ரொம்ப ஆக்டிவாவே இருக்கேன். வெப் சீரிஸ், சீரியல்னு நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் ரீ- என்ட்ரி கொடுக்க நான் ரெடி. ஏன்னா, எனக்கு நடிக்க இயல்பாவே பிடிக்கும். தூக்கத்துல எழுப்பி நடின்னு சொன்னாலும் நடிச்சிடுவேன். அந்த அளவுக்கு நடிப்பு மேல இப்போ வரை காதல் மாறாமல் இருக்கு!'' என சிரிக்கிறார் பூஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism