Published:Updated:

நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் திடீர் மரணம்... தூக்கத்தில் பிரிந்த உயிர்!

சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ்

நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் திடீர் மரணம்...

‘மெட்டி ஒலி’ சீரியலில் கறார் மாமியாராக நடித்துப் பிரபலமானவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தி வில்லியம்ஸ் சீரியலுக்கு வரும் முன் தமிழ், மற்றும் மலையாள சினிமாவில் நிறையப் படங்களில் நடித்திருந்தார். தமிழில் ’மாந்தோப்புக் கிளியே’, ‘மூடுபனி’ ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சாந்தி வில்லியம்ஸ்
குடும்பத்துடன் சாந்தி வில்லியம்ஸ்

மலையாளத் திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து மறைந்த வில்லியம்ஸ், இவரது கணவர். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தது இவரது குடும்பம். கணவர் மறைவுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார் சாந்தி.

ஒத்திகை டாஸ்கில் பறந்த ஹார்ட்டின்கள்; முதல் தலைவர் ரம்யா... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 1

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ்க்கு நான்கு குழந்தைகள். இவர்களில் தற்போது 40 வயதான மகன் சந்தோஷ் நேற்று திடீரென மரணமடைந்திருக்கிறார். மாரடைப்பால் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாகச் சொல்கிறார்கள்.

மறைந்த சந்தோஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ்க்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சந்தோஷின் உடல் இன்று (6/10/2020) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அடுத்த கட்டுரைக்கு