Published:Updated:

விகடன் TV: “வீட்டைச் சுத்திக்காட்டுறதுக்குப் பேர் டூரா?”

ஷப்னம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷப்னம்

யூ டியூப் சேனல் தொடங்கறப்பவே ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன்.

கொஞ்ச நாள் பிரேக்கில் இருந்த ஷப்னம் மறுபடியும் ஓடத் தொடங்கியிருக்கிறார். ஒருபுறம் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ரியாலிட்டி ஷோ, மறுபுறம் ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ சீரியல் என மேடம் இப்ப பழையபடி பிஸி. ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்கில் இருந்தவரிடம் பேசினேன்.

‘‘ரியாலிட்டி ஷோக்கள்ல நான் அவ்வளவா கலந்துக்கிட்டது கிடையாது. ஏன்னு தெரியலை அதுல எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனா இந்த ஷோ நமக்கு நல்லா வரக்கூடிய ஹ்யூமர் ஏரியாங்கிறதால சம்மதிச்சேன். ஆனா ஒரு பக்கம் பயமும் இருந்தது. ஸ்டேண்ட் அப் காமெடியன்களுக்கு அனுபவம் இருக்கும். நம்ம அவங்க ரேஞ்சுக்கு பர்ஃபாம் பண்ண முடியாதேன்னு நினைச்சேன். ஆனா ‘ஸ்டேஜ்ல என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ’ன்னு சுதந்திரம் கொடுத்தாங்க. அதனால நானும் யோகியும் சேர்ந்த கூட்டணிக்கு அடுத்தடுத்து 10 மார்க் கிடைச்சு, இப்ப லீடிங்ல போயிட்டிருக்கோம்’’ என்கிறார்.

விகடன் TV: “வீட்டைச் சுத்திக்காட்டுறதுக்குப் பேர் டூரா?”

“ `நம்ம வீட்டுப் பொண்ணு’ சீரியல் அண்ணி ரோல் எப்படியிருக்கு?”

‘‘ ‘ராஜா ராணி’ போலவேதான் கலகலன்னு ரவுண்ட் வர்ற அண்ணிதான். ஆனா அந்த சீரியல்ல லேசா வில்லத்தனமும் செய்தேன். ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ல அந்த வில்லத்தனம் இருக்காது. நல்ல அண்ணி.’’

``யூ டியூப் சேனல் தொடங்குனீங்க. ஆனா தொடர்ந்து வீடியோக்களைக் காணவில்லையே?’’

‘‘அடிப்படையில நான் கொஞ்சம் சோம்பேறி. ஒரு விஷயத்தை ஆரம்பிச்சா அதை ஸ்ட்ரிக்டா கொண்டு போகாம விட்டுடுவேன். கொரோனா லாக் டௌன்ல உடல் எடையைக் குறைக்கணும்னு நாலு நாள் ஒர்க் அவுட் செய்தேன். அஞ்சாவது நாள் உடல் லேசா வலிச்சதா, அத்தோடு ஒர்க் அவுட்டை விட்டாச்சு.

யூ டியூப் சேனல் தொடங்கறப்பவே ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன். கிச்சன் டூர், பெட்ரூம் டூர், பாத்ரூம் டூர்னு வீட்டைச் சுத்திக் காட்டற வீடியோக்களையெல்லாம் போடக்கூடாதுன்னு என்னுடைய எடிட்டர்கிட்ட ஸ்ட்ரிக்டாச் சொல்லிட்டேன். டூர்னா புதுப்புது இடங்களுக்குக் கூட்டிட்டுப் போகணுமா, வீட்டையே சுத்திக் காட்டறதுக்குப் பேர் டூரா?

விகடன் TV: “வீட்டைச் சுத்திக்காட்டுறதுக்குப் பேர் டூரா?”

அதனால புதுப்புது இடங்களை லிஸ்ட் எடுத்து அந்த இடங்களுக்கு நானே விசிட் போய் அங்க என்ன ஸ்பெஷல்னு காட்டலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என் எடிட்டருடைய அம்மாவுக்கு கொரோனா வந்து அவர் லாக் ஆகிட்டார். அதனால இப்போதைக்கு பிரேக். ஆனா சீக்கிரமே இந்த ஷூட்டிங் பிஸியிலயும் அந்த வேலையும் தொடங்கிடணும்னு இருக்கேன்’’ என்கிறார்.