Published:Updated:

``நடிக்க வாய்ப்பு கிடைக்காததால பிச்சை எடுக்கப் போனேன்!" - கலங்கும் சீரியல் நடிகை சுபீதா

சுபீதா

1991-ம் வருஷம் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதும், நிலைமை எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. வண்ணாரப் பேட்டையில இருந்த எங்க குடும்பம் வீட்டை வித்துட்டு சென்னையை விட்டே வெளியேற வேண்டியதாகிடுச்சு.

Published:Updated:

``நடிக்க வாய்ப்பு கிடைக்காததால பிச்சை எடுக்கப் போனேன்!" - கலங்கும் சீரியல் நடிகை சுபீதா

1991-ம் வருஷம் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதும், நிலைமை எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. வண்ணாரப் பேட்டையில இருந்த எங்க குடும்பம் வீட்டை வித்துட்டு சென்னையை விட்டே வெளியேற வேண்டியதாகிடுச்சு.

சுபீதா
'பாண்டவர் இல்லம்' உள்ளிட்ட சில சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்தவர் சுபீதா. சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் இவர், தற்போது நடிப்பதற்கான வாய்ப்புகள் ஏதுமின்றி, பொருளாதார ரீதியாக பெரிதும் சிரமப்படுவதாகவும், சில மாதங்களுக்கு முன் கையில் பணம் எதுவும் இல்லாததால் பிச்சை எடுத்ததாகவும் கூறுகிறார்.

வேளச்சேரியில் உள்ள அவரைச் சந்தித்துப் பேசியபோது அவர் கூறியது...

''நான் நடிக்க வந்தப்ப பதிமூணு வயசு இருக்கும். முதன்முதலா ஒரு நாடகத்துல நடிச்சேன். அது இலங்கையில் தனி நாடு வேணும்னு கேட்டுப் போராடினாங்க இல்லையா, அதுக்கான காரணத்தை விளக்கி தமிழ்நாட்டுல எடுக்கப்பட்ட நாடகம். அப்பெல்லாம் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டுக்கு வந்து போயிட்டிருந்த காலம். எங்க வீட்டுலயுமே என்னுடைய அப்பா அவங்களுக்கு ஆதரவானவர்தான்.

ஆனா எனக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் பத்தியெல்லாம் தெரியாது. நாடகத்துல நடிக்கணும்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய் தி.நகரில் ஒரு இடத்துல வச்சுப் போட்டோ எடுத்தாங்க.

என்னைப் போட்டோ எடுத்தவர்தான் பிரபாகரன்னு எனக்கு அங்க போன பிறகுதான் தெரிஞ்சது. அந்த நாடகத்துல என்னுடன் சேர்ந்து நடிச்சவர் நடிகர் நாசர் சார்.

நாடகம் நடிச்சு அதைக் கேசட்டா போட்டாங்க. அந்தக் கேசட்டை இலங்கைக்கு கொண்டு போய் அங்க எல்லாருக்கும் குடுப்பாங்கன்னு சொன்னாங்க. எங்கிட்டேயும் அந்தக் கேசட் முதல்ல இருந்தது.

திடீர்னு 1991-ம் வருஷம் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், நிலைமை எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. வண்ணாரப் பேட்டையில இருந்த எங்க குடும்பம் வீட்டை வித்துட்டு சென்னையை விட்டே வெளியேற வேண்டியதாகிடுச்சு. கொஞ்ச காலம் பல இடங்கள்ல தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்தோம். நான் நாடகம் நடிச்ச கேசட் உள்ளிட்ட எந்தவொரு இலங்கைத் தமிழர் தொடர்பான அடையாளமும் எங்ககிட்ட இல்லாதபடி அழிச்சிட்டோம்.

சுபீதா
சுபீதா

யார் செஞ்ச புண்ணியமோ, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எங்க குடும்பத்தினர் யாரும் கைது செய்யப்படலை. அந்தச் சம்பவத்துல நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்களில் யாருக்கும் தொடர்பு இல்லைன்னாலும், அந்தச் சமயத்துல இலங்கை தொடர்புடைய எல்லாரையும் சகட்டுமேனிக்குக் கைது செஞ்சாங்க. அதனால நாங்க கைதாகாததை அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன்'' என்கிற சுகிதா, நிறைய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறாராம்.

''கல்யாணமாகி பசங்களும் ஆன பிறகு என் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துட்டார். அதுக்குப் பிறகு பிள்ளைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். சினிமாவுல பெரிசா வருமானம் கிடைக்காததால் சீரியல் பக்கம் வந்தேன். சில சீரியல்கள்ல நடிச்சேன். ஆனாலும் குடும்பம் நடத்தப் போதுமான வருமானம் வர்றதில்லை. ரெண்டு மகன்களில் பெரியவன் கல்யாணமாகி அவன் பிழைப்பைப் பார்க்குறான். சின்னவன் மட்டும் சினிமாவில் ஸ்டன்ட் டைரக்டராக முயற்சி செய்துட்டிருக்கான். அவன் கொண்டு வர்ற சொற்ப வருமானம் போதாததாலதான் இடையில கொஞ்ச காலம் விட்டிருந்த நடிப்பை மீண்டும் தொடங்கலாம்னு வாய்ப்பு தேடத் தொடங்கினேன்.

சுபீதா
சுபீதா

ஆனா வாய்ப்பு ஏதும் கிடைக்கலை. அதனாலதான் என்னை அறியாமலேயே ஒரு நாள் போய் பிச்சை எடுக்கத் தொடங்கிட்டேன்'' என்கிறார்.

'நாசருடன் பேசுவீர்களா, அவர் மூலம் சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாமே?' என்றோம்.

''அவர்கிட்ட பேசினேன். ஆனா, வாய்ப்பு எதுவும் கேட்கத் தோணல. இப்போதைக்கு எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தாலே போதும்னு தோணுது'' என்கிறார்.