கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ‘நெல்லை சிவாவின் கடைசி வார்த்தைகள்...’

சுஜிதா குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுஜிதா குடும்பம்

சித்ராவை இழந்த பாதிப்புல இருந்து இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ யூனிட்.

மாதத்தில் 15 நாள் சென்னை, 15 நாள் ஹைதராபாத் என (‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிற்குமாக) பரபரப்பாக ஷூட்டிங் போய் வந்துகொண்டிருந்த சுஜிதா ஊரடங்கின் புண்ணியத்தில் இப்போது ஃப்ரீ. `போன முறை ஊரடங்கில் குழந்தைகளுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சீங்க. இப்ப என்ன பிளான்?’ என்றேன்.

 விகடன் TV: ‘நெல்லை சிவாவின் கடைசி வார்த்தைகள்...’

‘`கொரோனா ஊரடங்குல நிறைய பேர் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சாங்க. அதுல என்னென்னவோ பண்ணிட்டிருக்காங்க. அது அவங்கவங்க விருப்பம். ஆனா `கதை கேளு கதை கேளு’ன்னு நான் ஆரம்பிச்சது என் மகன் தன்வினை மனசுல வச்சு மட்டுமல்ல. இன்னைக்குச் சூழல்ல பெற்றோர் பசங்களை நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும், அவங்க கேட்டதையெல்லாம் வாங்கித் தரணும்னெல்லாம் நினைக்கிறாங்க. ஆனா எத்தனை பேர் பசங்களை நல்ல குணங்களோட வளர்க்கணும்னு நினைக்கிறாங்க? அப்படி நினைக்க மறந்தவங்களுக்குத்தான் கதைகள் அவசியப்படுது. அவங்களை மனசுல வச்சுதான் தொடங்கினேன். ஒரு வருஷத்துல நிறைய கதைகள் சொல்லியாச்சு. நல்ல வரவேற்பு.’’

 விகடன் TV: ‘நெல்லை சிவாவின் கடைசி வார்த்தைகள்...’

``நெல்லை சிவாவின் இழப்பு...’’

‘`சித்ராவை இழந்த பாதிப்புல இருந்து இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ யூனிட். திடீர்னு இவர். பெருந்துயரமான ஒரு காலமா இருக்கு. என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். `ஊர்ப் பெயரையே அடைமொழியா வச்சிருக்கீங்க, ஒரு தடவையாச்சும் அல்வா வாங்கிட்டு வந்து தந்திருக்கீங்களா?’ன்னு ஒரு நாள் கேட்டேன். போன மாசம் ஷூட்டிங் முடிச்சு ஊருக்குக் கிளம்பறப்ப, `தனம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கேரக்டர் பெயர்), அடுத்த மாசம் வர்றப்ப நிச்சயம் அல்வாவோட வர்றேன்’னு சொல்லிட்டுப் போனார், அவ்ளோதான்.’’

 விகடன் TV: ‘நெல்லை சிவாவின் கடைசி வார்த்தைகள்...’

``மகனுடன் சேர்ந்து விளம்பரங்களில் நடிக்கறீங்களே, பையனுக்கும் சினிமா ஆசை இருக்கா?’’

“எங்களுடைய விளம்பர நிறுவனத்துக்காக (சுஜிதாவின் கணவர் தனுஷ் விளம்பர நிறுவனம் நடத்திவருகிறார்) எடுக்கப்பட்ட விளம்பரத்துல நடிச்சதைக் கேக்கறீங்களா? அது சும்மா பண்ணினது. அந்த நேரத்துல என்ன மூடுல இருந்தானோ ஓ.கே சொல்லிட்டான். எனக்குத் தெரிய அவனுக்கு ஸ்போர்ட்ஸ்லதான் ஆர்வம் அதிகமா இருக்கு.’’