ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“இது, என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்!”

ஸ்வாதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வாதி

என் சம்பளத்தை முதல்ல சேமிப்புக்குத் தான் ஒதுக்குவேன். நகைச்சீட்டு கட்டுறேன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர் களுக்கு அறிமுகமாகியிருக்கிறார் ஸ்வாதி. `பொம்மி' கேரக்டரில் டிரெடிஷனல் லுக்கில் கலக்கும் ஸ்வாதியுடன் கலகல பேட்டி.

“இது, என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்!”

எப்படி நடிக்க வந்தீங்க?

‘`எனக்கு நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, வீட்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். காலேஜ் முடிச்சதும் ஃபிரெண்ட் மூலமா ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் அதுக்கே ஓ.கே சொன்னாங்க. அப்புறம் ஒரு பிரைவேட் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தப்ப கன்னட சீரியல் ஆடிஷனுக்கு வரச் சொல்லி திடீர்னு ஒரு போன் வந்துச்சு. வீட்ல சொல்லாம ஆடிஷனுக்கு போய், செலக்ட்டும் ஆயிட்டேன். வீட்ல சொன்னதும் அப்பா ரொம்ப டென்ஷன் ஆயிட்டார். அப்புறம் டைரக்டர் டீம் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி தொடங்கின பயணம், ஏழு வருஷத்துல தமிழ் சீரியல் வரை கொண்டு வந்திருக்கு.’’

“இது, என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்!”

பெங்களூரு பொண்ணு... சரளமா தமிழ் பேச றீங்களே...

‘`பொம்மி சீரியல்ல கமிட் ஆனபோது எனக்கு ஒரு வார்த்தைகூட தமிழ்ல பேசத் தெரி யாது. ஸ்கிரிப்ட்டை முதல் நாளே எனக்கு இங்கிலீஷ்ல அனுப்பிருவாங்க. இந்த சீரியல் ஆரம்பிச்சதுலேருந்தே ரசிகர்கள் என்னை ‘பொம்மி’ன்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. எனக்கு தமிழ் தெரியாததால அவங்ககிட்ட வெளிப்படையா பேச முடியல. அதுக்காகவே தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ சூப்பரா பேசறேன்ல...’’

சோஷியல் மீடியா பத்தி உங்க கருத்து என்ன?

‘`சோஷியல் மீடியாவுல எத்தனை பேர் நம்மைக் கொண்டாடுறாங்களோ, அதே அளவுக்கு நம்மை வெறுக்கிறவங்களும் இருப் பாங்க. சமீபத்துல என்னோட தோழிகூட இருக்குற போட்டோ ஷேர் பண்ணியிருந்தேன் அதுக்குகூட ஆயிரம் நெகட்டிவ் கமென்ட்ஸ். ஆரம்பத்துல இந்த மாதிரி கமென்ட்ஸை பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. இப்பல்லாம் இக்னோர் நெகட்டிவிட்டின்னு போயிடறேன்.’’

“இது, என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்!”

பாடி ஷேமிங்கை எதிர்கொண்ட அனுபவம் உண்டா?

‘`இந்த சீரியல்ல நடிக்க வந்தப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன். ‘ஹீரோயின் குண்டா இருக்காங்க. கொஞ்சம் வெயிட்டை குறைக்கலாம்’ னு கமென்ட் பண்ணாங்க. நம்ம மேல இருக்க அக்கறை யில் சொல்றாங்கனு நானும் வெயிட்டை குறைச்சேன். இப்போ ஒல்லியா இருக் கேன்னு சொல்றாங்க. ஒல்லி, குண்டு, குட்டைனு பாடி ஷேமிங் பண்றவங்ககிட்ட ‘இது என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்’னு கமென்ட் கொடுத்துடறேன்.’’

“இது, என் உடம்பு... எனக்குப் பிடிச்ச மாதிரி இருந்தா போதும்!”

சேமிக்கிற பழக்கமெல்லாம் உண்டா?

‘`என் சம்பளத்தை முதல்ல சேமிப்புக்குத் தான் ஒதுக்குவேன். நகைச்சீட்டு கட்டுறேன். என்னோட இன்வெஸ்ட்மென்ட் எப்போதும் தங்கத்துலதான்.’’