Published:Updated:

விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”

தேஜஸ்வினி
பிரீமியம் ஸ்டோரி
தேஜஸ்வினி

‘நான் நடிக்கிற எல்லா சீரியலிலும் ஒரு கேரக்டருக்கும், இன்னொரு கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கும்படி பார்த்துப்பேன்.

``கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருந்தேன். கல்யாணம் பண்ணினால்தான் வாழ்க்கை நல்லா இருக்கும்னு வீட்டில் சொன்னாங்க. ஃபேமிலியோட சந்தோஷத்தை விடவும் நம்ம பிடிவாதம் முக்கியமில்லைன்னு தோணுச்சு. உடனே கிரீன் சிக்னல் கொடுத்துட்டேன்!’’ என்றவாறு பேசத் தொடங்கினார் தேஜஸ்வினி. இவருக்கும், தெலுங்கு நடிகர் அமர்தீப் செளத்ரிக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது.

விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”
விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வித்யா நம்பர் 1' தொடரில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் தேஜஸ்வினியை ஷூட்டிங் பிரேக்கில் சந்தித்தோம்.

‘‘என்னுடைய சொந்த ஊர் பெங்களூரு. விஜய் டி.வி-யில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' தொடரில் நடிச்சேன். அந்தத் தொடர் முடிந்த பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. நல்ல புராஜக்ட் பண்ணணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்பத்தான் ‘வித்யா நம்பர் 1' வாய்ப்பு வந்தது. எனக்கு அதில் ரொம்ப ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் என்பதால் உடனே ஓகே சொல்லிட்டேன்’’ என்றவர், தன் வருங்காலக் கணவர் குறித்துப் பேசினார்.

விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”
விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”
விகடன் TV: “திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்!”

‘‘அவரும் மீடியா துறையைச் சார்ந்தவர். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னைத் திருமணம் செய்துக்கணும்னு விருப்பம். நேரடியா அவங்க பெற்றோர்களைக் கூட்டிட்டு வந்து என் வீட்டில் பெண் கேட்டார். அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் நடிக்கணும். கரியர் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாதுங்கிறது என்பதில் ரொம்ப கவனமா இருந்தேன். அவங்களும் என் கரியருக்கு சப்போர்ட்டா இருக்கேன்னு சொல்லிட்டாங்க. அதனால திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.

‘‘நான் நடிக்கிற எல்லா சீரியலிலும் ஒரு கேரக்டருக்கும், இன்னொரு கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கும்படி பார்த்துப்பேன். ‘வித்யா நம்பர் 1' தொடருக்காக நான் பெரிய அளவில் எல்லாம் மெனக்கடலைன்னாலும் வித்யாவாக வாழ்வதற்கு என்ன தேவையோ, அதைக் குறையாம திரையில் காட்டுறேன். அதனால்தான் மக்கள் என்னை அவங்க வீட்டில் ஒருத்தியாகப் பார்க்கிறாங்க.

எனக்கு புராணக் கதைகளில் நடிக்கணும்னு ஆசை. அதே மாதிரி, வெள்ளித்திரையில் நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா அங்கேயும் காலடி பதிக்கலாம்னு இருக்கேன்’’ எனப் புன்னகைக்கிறார்.