சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: தமிழ் சீரியல் வேண்டாம்னு சொன்னேனா?

தேஜஸ்வினி
பிரீமியம் ஸ்டோரி
News
தேஜஸ்வினி

ரெண்டாவது சீரியல்லயே ஹீரோயின் ஆகிட்டா நிச்சயம் சிலருக்காச்சும் கண்ணை உறுத்தணுமில்லையா, அதேதான்

சன் டிவியின் `வள்ளி' தொடரில் அறிமுகமானவர் தேஜஸ்வினி. தொடர்ந்து `முள்ளும் மலரும்' தொடரில் ஹீரோயின் ஆனார். பாதி எபிசோடு கடந்த நிலையில் என்ன நடந்ததோ, அந்த சீரியலிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து விஜய் டிவியில் `பொண் ணுக்குத் தங்க மனசு' சீரியலில் நடித்தவரை அதன்பிறகு பார்க்க முடியவில்லை. மீண்டும் கன்னட சீரியல் பக்கமே போய்விட்டதாகக் கேள்விப்பட்டு, மொபைலில் பிடித்தேன்.

``ரெண்டாவது சீரியல்லயே ஹீரோயின் ஆகிட்டா நிச்சயம் சிலருக்காச்சும் கண்ணை உறுத்தணுமில்லையா, அதேதான். நல்லாப் போயிட்டிருந்த `முள்ளும் மலரும்' சீரியல்ல ஹீரோயினான என்னை டம்மியாக்கிட்டு, வில்லியா நடிச்சிட்டிருந்தவங்களை ஹீரோயினாக்க முயற்சி செய்தாங்க. `உங்க சீரியலே வேண்டாம்'னு சேனல் மாறினேன். `பொண்ணுக்குத் தங்க மனசு' நல்ல ரீச் தந்தது. அதற்குள் கொரோனா வந்திட, இப்ப பெங்களூருல இருக்கேன். ஆனா `தமிழ் சீரியலே வேண்டாம்'னு சொல்லிட்டுப் போயிட்டதாக் கிளப்பி விட்டிருக்காங்க. அது பொய். இப்பவும் தமிழ் சிரீயல் வாய்ப்பு வந்திட்டுதான் இருக்கு. கொரோனா கம்ப்ளீட்டா முடிஞ்சதும் திரும்பவும் வருவேன்.''

விகடன் TV: தமிழ் சீரியல் வேண்டாம்னு சொன்னேனா?

``கன்னட சீரியல்ல பிஸியாகிட்டதாச் சொன்னாங்களே?’’

``பிஸின்னு சொல்ல மாட்டேன். பிரைம் டைம்ல ஒரு சீரியல் போயிட்டிருக்கு. அதுவும் போக, கன்னடத்துல ஹீரோயினா ஒரு படம் நடிச்சிருக்கேன். கோவிட் சிக்சுவேஷன் சரியானதும் படம் ரிலீஸ் ஆகலாம். ஒரே நேரத்துல கன்னட சீரியல், தமிழ் சீரியல் ரெண்டுலயும் இருக்கணும் கிறதுதான் என்னுடைய சின்ன ஆசை.''