சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “தெரிந்த பிறகு விமர்சனம் பண்ணுங்க!”

சுரேஷ் குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சுரேஷ் குமார்

அந்தச் சமயத்துல சன் டிவிக்கும் சினிமாக்காரங்களுக்குமிடையில் சின்ன ஒரு கசப்பு இருந்ததாப் பேச்சு இருந்தது.

‘`25 வருஷங்களுக்கு முன்னாடி இதே செப்டம்பர் முதல் வாரத்துலதான் டிவியில வந்தேன்’’ என்று தூர்தர்ஷன் நாள்களை நினைவுகூர்ந்தார் சுரேஷ் குமார். சன் டிவியில் ‘டாப் 10 மூவிஸ்’ திரை விமர்சனம் செய்வாரே அவரேதான்.

‘‘வண்ணத் தொலைக்காட்சி வரத் தொடங்கியிருந்த நேரம் அது. படிச்சுட்டு ஸ்பிக்ல வேலை பார்த்திட்டிருந்தேன். எதேச்சையா ஒருநாள் வீட்டுல டிவி பார்த்துட்டு இருந்தப்ப, தூர்தர்ஷன்ல அறிவிப்பாளருக்கு விண்ணப்பிக்கச் சொன்ன விளம்பரம் பார்த்து ஒரு ஆர்வத்துல அப்ளை பண்ணினேன். மூணு கட்டத் தேர்வுக்குப் பிறகு செலக்ட் ஆனேன். பிறகு சன் டிவி வந்ததும், அங்க வேலை பார்த்திட்டிருந்த நண்பர் ஒருத்தரைப் பார்க்கறதுக்காக சேனல் ஆபீஸ்க்குப் போயிருந்தேன்.

அந்தச் சமயத்துல சன் டிவிக்கும் சினிமாக்காரங்களுக்குமிடையில் சின்ன ஒரு கசப்பு இருந்ததாப் பேச்சு இருந்தது. அதுவரை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன். நிகழ்ச்சி கொஞ்சம் கடுமையா இருக்குன்னும் ஆங்கரை மாத்தணும்னும் கோரிக்கை வந்திட்டிருந்ததாச் சொன்னாங்க. சும்மா ஆபீஸ் போயிருந்த நான் அங்க செய்தி வாசிக்கச் சொன்னாங்கன்னு வாசிக்க, தூர்தர்ஷன்ல இருந்து ‘வாழ்த்துகள்’ சொல்லி அனுப்பிட்டாங்க.

விகடன் TV: “தெரிந்த பிறகு விமர்சனம் பண்ணுங்க!”

அதன்பிறகு அப்படியே சன் டிவிக்கு வந்து, ‘டாப் 10 மூவிஸ்’ திரை விமர்சனம் பண்ணத் தொடங்கியாச்சு. சரியா 21 வருஷம் நான் மட்டுமே தொகுத்து வழங்கின அந்த நிகழ்ச்சி கடந்த 2019-ம் வருஷத்துடன் முடிவுக்கு வந்திடுச்சு. அதன் பிறகு அந்த வேலையை என்னுடைய யூடியூப் சேனல்ல பண்ணிட்டிருக்கேன்’’ என்றவரிடம், இப்போதைய சோஷியல் மீடியா சினிமா விமர்சனங்கள் குறித்துக் கேட்டேன்.

‘‘விமர்சனம் செய்ய எல்லாருக்கும் உரிமை இருக்கு. அதேநேரம் ஒரு டாக்டராகணும்னா எம்.பி.பி.எஸ் படிக்கணும்; பிறகு பயிற்சி எடுக்கணும்... எல்லாம் முடிச்ச பிறகுதான் டாக்டர். அதேதான் இங்கயும். ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யணும்னா அந்த வேலையைச் செய்கிறவருக்கு முதல்ல அந்த ஃபீல்டுல ஏ டு இசட் தெரிஞ்சிருக்கணும். நான் ஷூட்டிங் ஸ்பாட், டப்பிங் ஸ்டூடியோக்கள்னு பல இடங்களுக்கு அலைஞ்சு சினிமா பத்தி நிறைய கத்துக்கிட்டேன். ஒரு பிரபல இயக்குநர்கிட்ட கொஞ்ச நாள் உதவி இயக்குநரா இருந்த அனுபவமும் உண்டு.எதுவும் தெரியாம விமர்சிக்கிறேன்னு இறங்குறவங்க விரைவில் அம்பலப்பட்டுப்போவாங்க’’ என்கிறார்.