
‘‘2021-ல் சினிமாவுல கவனிப்படுவேன்’னு நம்பிக்கை இருக்கு ப்ரோ’’ என்கிறார்.
மதன்

அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வருவதால் புதிதாக வரும் சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்துவருகிறார் ‘பூவே பூச்சூடவா’ மதன் பாண்டியன். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் மற்றும் ஆர்.கே. சுரேஷுடன் ஒரு படம் ஏற்கெனவே இரண்டு படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றனவாம்.
‘‘2021-ல் சினிமாவுல கவனிப்படுவேன்’னு நம்பிக்கை இருக்கு ப்ரோ’’ என்கிறார்.
‘சிங்கப்பூர்’சுகன்யா

‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சில சீரியல் களில் நடித்தவர் ‘சிங்கப்பூர்’ சுகன்யா. டிவியிலிருந்து சினிமா வுக்குச் சென்றவர், ‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். கொரோனா தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார். ‘கல்யாணத்துக்கு முன்னாடி சீரியல், சினிமாவுக்காகவே சென்னையில இருந்தப்பெல்லாம் வாய்ப்பே வரலை; இப்ப அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் வந்துட்டிருக்கு, ஆனா கொரோனாச் சூழலால் என்னால பண்ண முடியலை’ என வருத்தப்படுகிறார்.
கௌசல்யா

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்து வமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும், மறைந்த வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யா. சீரியல்களில் கலகலப்பூட்டி வருவதைப் போலவே மருத்துவமனையிலும் செவிலியர்கள் மற்றும் சுற்றியுள்ள நோயாளிகளுடன் அரட்டையடித்தபடி தங்கியிருக்கும் வார்டையே கலகலப்பாக வைத்திருக்கிறாராம்.
யாரடி நீ மோகினி’ 1000


‘யாரடி நீ மோகினி’ சீரியல் யூனிட் சில தினங்களுக்கு முன்புதான் சைத்ரா ரெட்டியின் திருமணத்துக் கான ட்ரீட்டை என்ஜாய் பண்ணியது. அதற்குள் அடுத்த கொண்டாட்டம். கடந்த வாரம் ஆயிரமாவது எபிசோடைத் தொட்டது சீரியல். பாத்திமா பாபு, ஸ்ரீ, மின்னல் தீபா என சீனியர், ஜூனியர் எல்லோருமே கலந்து கொண்ட அன்றைய தினம் ஷூட்டிங் ஸ்பாட் பிரியாணி விருந்துடன் ஒரே ஆட்டமும் பாட்டுமாக அமர்க்களப்பட்டதாம்.
ஜெனிஃபர்

‘‘கொஞ்ச நாளா ஆளைக் காணலையே ‘செம்பருத்தி’ சீரியல்ல இருக்கீங்கதானே’’ எனக் கேட்டால், ‘‘வடிவேலு டயலாக்தான். இருக்கேன், ஆனா இல்லை’’ எனச் சிரிக்கிறார் ஜெனிஃபர். ‘‘புரியும் படியா சொல்லுங்களேன்’’ என்றால், ‘‘எனக்கே நான் சீரியல்ல இருக்கேனா இல்லையானு தெரியலைங்க. ஷூட்டிங் போய் மாசக்கணக்குல ஆச்சு. உடன் நடிச்ச மத்தவங்களைக் கேட்டா, ‘நீங்க சீரியல்ல இல்லை’ங்கிறாங்க. ஆனா எனக்குச் சொல்ல வேண்டியவங்க யாரும் எங்கிட்ட அதைச் சொல்லலை’’ என்கிறார்.
யார்கிட்டயும் சொல்லாதீங்க!
கல்விக் குழுமத்தைச் சேர்ந்த சேனல் சில திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பியதில் நிறைய தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறதாம். ‘எங்களுக்குத் தெரியாமல் எங்கள் படங்கள் எப்படி அந்தச் சேனலுக்குப் போகலாம்’ என சில படங்களின் ஒரிஜினல் உரிமையாளர்கள் கொதிக்க, சத்தமில்லாமல் அவர்களைக் கூப்பிட்டு விவகாரத்தைப் பைசல் பண்ணியிருக்கிறார்கள். ‘எங்கே தவறு நடந்தது’ எனக் கேட்டால், சேனலின் பழைய ஊழியர்கள்மீது பழிபோடுவதும் நடக்கிறதாம்.
சீரியலில் கடை வைத்திருக்கும் அந்த சீனியர் நடிகை, நிஜ வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே பார்க்கத் தொடங்கிவிட்டாராம். யூடியூப் சேனல் எனச் சொல்லிக் கொண்டு யாராவது பேட்டிகேட்டுப் போனால், ‘எவ்வளவு தருவீங்க’ என ஓப்பனாகக் கேட்கிறாராம். ‘‘ஆணியே பிடுங்க வேண்டாம்னு ஓடி வந்துட்டோம்’’ என்கிறார்கள் இந்த அனுபவத்தை எதிர்கொண்ட சிலர்.
கணவருடன் சேர்ந்து ஜோடிப் பேட்டி கேட்டால், தெறித்து ஓடுகிறார், ‘பூ’ சீரியலிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை. இவரது கணவர் டிவியில் ஸ்கிரீனுக்குப் பின்னால் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு திருமணமான புதிதில் தம்பதி சகிதமாகப் பேட்டி கொடுத்ததில் நிறைய ‘கண்’ பட்டுவிட்டதாம். ‘அப்படிப் பேட்டி தந்தா தொடர்ந்து சில நாள் எங்களுக்குள் சண்டை வந்துடுது. ஸோ, ஸாரி’ என்கிறார்.