சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

தமிழ் சீரியல் ஒன்றில் ஷூட்டிங் முழுக்க முழுக்க கேரளாவிலேயே நடக்கிறதென்றால் நம்புவீர்களா? விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘மௌனராகம்’ தொடரின் ஷூட்டிங்தான் அது.

‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வில்லியாக நடித்துக் கவனம் ஈர்த்ததன் மூலம் சினிமா ஹீரோயினாகியிருக்கிறார் சைத்ரா ரெட்டி.
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘விஷமக்காரன்’ படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவர் சைத்ரா என்றுதான் படக்குழு கூறுகிறது. ஆனால் சைத்ராவோ. ‘‘என்னுடைய கேரக்டரை ஹீரோயின்னு சொல்ல முடியாது. என் மனசுக்கு அது வில்லி ரோல் போலத்தான் தெரியுது’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சினிமாவில் ஆர்யா, விவேக் என ஒரு பெரிய சைக்கிள் கேங் இருக்கிறது. தினமும் அதிகாலையில் சைக்ளிங் செல்வது இவர்களது வழக்கம். இதேபோல் சின்னத்திரையிலும் ரிஷி, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட சிலர் இப்படி ஒரு குரூப்பாக ஃபார்ம் ஆகத் தொடங்கியிருக்கிறார்கள். சீரியல் நடிகைகள் சிலரும் இந்தக் குழுவில் இணைய ஆர்வம் காட்டிவருகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘‘நான் ‘செம்பருத்தி’ சீரியல்ல இருக்கேனா இல்லையான்னு தெரியல’’ எனச் சில தினங்களுக்கு முன் புலம்பியிருந்தார் நடிகை ஜெனிஃபர். இவரின் குரல் எட்ட வேண்டிய காதுகளை எட்டிவிட்டது போலும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரியலில் ஜெனிஃபரைப் பார்க்க முடிகிறது.பொண்ணு இப்ப செம ஹேப்பி!

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிப்ரவரி 13, இயக்குநர் பாலுமகேந்திரா மறைந்த தினம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் சென்னை வடபழனியில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றிவிட்டு, கோயிலுக்கு வெளியில் பசியோடிருக்கும் சிலருக்கு சாப்பாடு கொடுத்து வருகிறார் மௌனிகா. பாலுமகேந்திரா இருந்தபோது அவருடன் இந்தக் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வந்ததுடன், இருவரும் சேர்ந்தே அன்னதானமும் செய்துவந்தார்களாம். இந்த நாளில் ஷூட்டிங் இருந்தாலும் லீவு போட்டுவிடுகிறார் மௌனிகா.

மிழ் சீரியல் ஒன்றில் ஷூட்டிங் முழுக்க முழுக்க கேரளாவிலேயே நடக்கிறதென்றால் நம்புவீர்களா? விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘மௌனராகம்’ தொடரின் ஷூட்டிங்தான் அது. சீரியலின் தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அங்கேயே ஷூட்டிங் நடந்து தொடருமே முடிவடைந்து விட்ட நிலையில். இப்போது அதன் ‘பார்ட் 2’வையும் தொடங்கி இருக்கிறார்களாம். இந்த இரண்டாவது சீசனில் நடிக்கக் கேட்டபோது மறுத்து விட்டார்களாம் சில சீரியல் ஹீரோக்கள். ‘தமிழ்நாட்டை விட கேரளாவில் கொரோனா அதிகளவில் இருப்பதால் எழுந்த பயம்தான் காரணம்’ என்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

பாட்டியும் பேத்தியுமாக ஆவணப்படம் ஒன்றில் நடித்தவர்கள் அவர்கள். பிரபல சீரியலில் புதிதாகத் தொடங்க உள்ள சீரியலில் பேத்தி இப்போது ஹீரோயினாகிவிட்டார். ஹீரோயினின் பாட்டியாக அதே பாட்டியை கமிட் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த சீனியர் நடிகை மேற்படி சேனலில் இன்னொரு சீரியலிலும் நடித்துக்கொண்டிருப்பதால் ‘ஒரு சமயத்தில் ஒரு சீரியல்தான்’ என்றபடி சேனல் அதற்குத் தடை போட்டுவிட்டதாம். இப்போது வேறு பாட்டியைப் பிடித்திருக்கிறார்கள்.

லைமைப் பொறுப்பிலிருந்தவருக்கு மட்டும் மற்ற மீடியாக்களுக்குப் பேசவும், பேட்டி தரவும் அனுமதி தந்திருந்தது அந்தச் சேனல் நிர்வாகம். அவரும் அதைப் பயன்படுத்தி அதீதமாக வளர்ந்துவிட்டதோடு, சேனலுக்கும் டாடா காட்டி விட்டார். எனவே இப்போது அங்கு தலைமைப் பொறுப்பிலிருப்பவருக்குமே பேட்டி போன்ற விஷயங்களுக்குத் தடை போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.