சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிமோட் பட்டன்

இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை உலகுக்குச் சொல்வதுதான் ட்ரெண்டிங் போல.

ணவர் வெளிநாட்டில் வசிக்க, தனியாக சென்னையில் இருந்தபடி மொபைலிலும் ஆன்லைனிலுமே குடும்பம் நடத்தி வருகிற டிவி பிரபலங்களின் சோகம் விவரிக்க முடியாதது. சீரியல் நடிகைகளில் ஸ்ரீத்திகா மற்றும் அவரது அக்கா சுதா இருவரின் கணவன்மார்களும் துபாயில் பணிபுரிந்து வருகிறார்கள்.
விகடன் TV: ரிமோட் பட்டன்

தொகுப்பாளர்களில் தியாவின் கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இதுகுறித்து இவர்களைக் கேட்டால், ‘‘வாழ்க்கையையும் வருமானத்தையும் பிரிக்க முடியலை இல்லையா, அதனாலேயே இந்தக் கஷ்டங்களையெல்லாம் கடந்தாக வேண்டி இருக்கு’’ என்கிறார்கள். ஆங்கர் பாவனாவின் கணவரும் சில வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவரே. இப்போது மும்பை வந்து சேர்ந்து விட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை உலகுக்குச் சொல்வதுதான் ட்ரெண்டிங் போல. ஜனவரி முதல் தேதி ரேஷ்மா – மதன் ஜோடி தங்களை அறிவிக்க, அதே பாணியில் ‘எனக்கு எல்லாம் இவர்தான்’ என தன் பாய் ஃப்ரண்டையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார், அதே ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஷாமிலி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

வ்வளவு வேலைகள் இருந்தாலும், குடும்பத்துடன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்று பொங்கல் கொண்டாடுவதுதான் போஸ் வெங்கட்டின் வழக்கம். இந்த ஆண்டு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போஸ் வெங்கட்டுக்குப் பெரியார் விருது வழங்கப்பட, சென்னையிலேயே உற்சாகமாக பொங்கலைக் கொண்டாடி விட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் ஷூட்டிங் இல்லாத நாள்களில் எங்காவது சுற்றுலா கிளம்பிவிடுகிறார் ‘யாரடி நீ மோகினி’ பவித்ரன். முக்கியமான இடங்களைச் சுற்றிவருகிறவர், தன்னுடைய அந்த அனுபவங்களைப் பகிர்வதற்காகவே யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘‘மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கெல்லாம்கூட போயிட்டு வந்திருக்கேன். ஃபாரின் போக ஆசைப்படறவங்க, அதுக்காக எந்தவொரு ஏஜென்சியையும் தேட வேண்டாம்; நேரடியாக் கிளம்பிப் போயி ஊர் சுத்திட்டு வரலாம்’னு புரிய வைக்கறதுக்காகத்தான் இதைப் பண்ணிட்டு இருக்கேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்லயே வாழலாம்’ என முரண்டு பிடித்ததாலேயே ஆர்மி கண்ட நடிகையின் முதல் காதல் கைகூடவில்லை. இப்போது புதிதாகக் கிடைத்திருப்பவரிடம், தன்னுடைய அந்த நிபந்தனையை ஸ்ட்ரிக்டாகச் சொல்லி, அதற்குச் சம்மதமும் வாங்கிவிட்டார் என்கிறார்கள்.

சென்ற சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்த சில சின்னத்திரைப் பிரபலங்களை இந்தத் தேர்தலுக்கும் அழைத்ததாம் ஆளுங்கட்சி. ஒருசிலர் சம்மதிக்க. நிறைய பேர் தயங்கியபடி, ‘கால்ஷீட் பார்த்துட்டுச் சொல்றோம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். தயக்கத்துக்கு என்ன காரணம் என்றால், ‘‘சின்னம்மா வெளியில வந்தா என்னென்ன நடக்குமோ; எதுக்கு அவசரப்படணும்’’ என்கிறார்கள்.