Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

`ஜோடி’ நிகழ்ச்சிதான் இன்றைக்கும் என் பெயருடன் ஒட்டி நிற்கிறது என்கிறார் ஆனந்தி.

* `முதலமைச்சரே தன் வாயால் `பிக் பாஸ்’ பத்திப் பேசிட்டார்’ என விஜய் டிவி சந்தோஷப்பட்ட நேரத்தில்தான், கமல் நொந்துபோன சம்பவமும் நடந்துள்ளது. பிரசார மேடையில் நரம்பு புடைக்க ஆட்சியாளர்களின் ஊழல் குறித்துப் பேசி எனக்கு ஓட்டு போடுவீர்களா எனக் கேட்டால், ‘முதல்ல அர்ச்சனா கேங்கை வெளியில அனுப்புங்க ஆண்டவரே, எங்க வீட்டுல அத்தனை ஓட்டும் உங்களுக்குத்தான்’ எனக் கூட்டத்திலிருந்து குரல் வந்தால் நோகாமல் என்ன செய்வார்?

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* 20: VANAJA: ‘சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நடித்த சீரியலும் இப்போது நடிக்கிற சீரியலும் ஒரே நேரத்தில் சேனலில் ஒளிபரப்பாவதைப் பார்க்கிற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்’ என்கிறார் வனஜா. சன் டிவியில் இவர் நடித்த ‘மெட்டி ஒலி’யின் மீள் ஒளிபரப்பு போய்க்கொண்டிருக்க ஜீ தமிழில் ‘ராஜா மகள்’ ஒளிபரப்பாகிவருகிறது. இரண்டு சீரியல்களையும் பார்த்துவிட்டு போன் செய்கிற சில ரசிகர்கள் ‘எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே’ என உச்சுக் கொட்டுகிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

* JODI: `ஜோடி’ நிகழ்ச்சிதான் இன்றைக்கும் என் பெயருடன் ஒட்டி நிற்கிறது என்கிறார் ஆனந்தி. திடீரென இப்படி இவர் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. சீரியல்களின் முக்கியமான கேரக்டர்களுக்கு இவரைப் பரிசீலிக்காமல், சின்னச் சின்ன ஷோக்களில் முகம் காட்ட மட்டுமே விஜய் டிவி இவரை அழைக்கிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

* விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஸ்கிரீனுக்குப் பின்னால் இருந்து டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்த, தொகுப்பாளர் பிரியங்காவின் கணவர் பிரவீனுக்கு சேனலில் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

* சட்டசபைத் தேர்தலில் பிரசாரத்துக்குப் பயன்படுத்த, பிரபலமான சீரியல் நட்சத்திரங்களின் பட்டியல் ஒன்றை ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி என இரண்டு தரப்புமே தயாரித்து வைத்துள்ளதாம். அதேநேரம், சில நட்சத்திரங்களோ செம ஷார்ப்பாக இருக்கிறார்கள். `கட்சி, கொள்கை கிடக்குது, எந்தப் பக்கம் சம்பளம் அதிகமோ அங்க கிளம்பிட வேண்டியதுதான்’ என்கிறார்கள்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

* போர்டு, சாக்பீஸ் வைத்துக் கொண்டு, சேனல்களில் பணிபுரிகிறவர்களின் பின்புலம் குறித்து சமூக வலைதளத்தில் வகுப்பெடுத்து வந்தவருக்கே இபோது வகுப்பு எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். `யாருடைய டிவிங்கிறதெல்லாம் கிடக்கட்டும், தேர்தல் நேரத்துல மீடியா உதவி ரொம்பவே தேவை; அவங்களைச் சீண்டறது தேவையில்லாத வேலை. அதனால கொஞ்ச நாளைக்கு ஆணியே பிடுங்க வேண்டாம்’ எனச் சொல்லப்பட்டுள்ளதாம்.

* சீரியல் நடிகை மரணத்தில் தன்னைக் கோத்து விட்டுவிடுவார்களோ என்கிற பீதி ஹெவியாகத் தெரிகிறது அந்தத் தொகுப்பாளரின் முகத்தில். நடிகை மற்றும் அவர் கணவர் இருவருடனும்தான் இருந்த புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களையெல்லாம் மொபைலிலிருந்து அழித்து வருகிறாராம்.