Published:Updated:

ஆல்யா மான்ஸாவில் இருந்து `மைனா' நந்தினி வரை... யார் யார் வீட்ல என்னென்ன விசேஷம் தெரியுமா?!

ஆல்யா - சஞ்சீவ்
ஆல்யா - சஞ்சீவ்

வீட்டில் அடைபட்டுக்கிடந்த நாள்களில் நடந்த விசேஷங்களைப் பகிர்கிறார்கள் பிரபலங்கள்.

கொரோனா நாள்களைக் `கொடுமையானவை’ என்றுதான் உலக வரலாறு பதிவு செய்யும். அதேநேரம் கொடுமைக்கிடையில் இனித்த தருணங்கள் வாய்க்கப் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

"கண்ணுக்குத் தெரியாத அந்த வைரஸ் இன்னைக்குப் போயிடும்... நாளைக்குப் போயிடும்னு எத்தனை நாளைக்கு உட்கார்ந்துக்கிட்டிருக்கிறது? நல்ல காரியத்தைத் தள்ளிப் போடக்கூடாதுனு சொல்வாங்க இல்லையா? கல்யாணம், காதுகுத்து மாதிரின்னா கூட ஓரளவுக்கு நாம நினைச்சபடி செய்யலாம். குழந்தைப் பேறு மாதிரியான விஷயங்கள் எல்லாம் கடவுள் பார்த்துத் தர்றது" என்கிறார்கள் பிரபலங்கள்.

யார் யார் வீட்ல என்ன விசேஷம் என்று பார்க்கலாமா?

டைரக்டர் டுடாக்டர்... சேம் ப்ளட்!

சஞ்சீவ் - ஆல்யா மானசா மற்றும் ரியோ - ஸ்ருதி தம்பதியினர். இவர்களில் சஞ்சீவ், ரியோவுக்கு இடையில் அத்தனை ஒற்றுமை. சஞ்சீவ் ஹீரோவாக நடித்த அதே சேனலில் அதே இயக்குநரின் சீரியலில்தான் ரியோவும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த லாக்டௌன் நாள்களில் இருவருக்கும் அப்பா புரொமோஷன் கிடைத்தது. இருவருக்குமே பெண் குழந்தை. அத்துடன் மான்ஸா - ஸ்ருதி இருவருக்கும் பிரசவம் பார்த்ததும் ஒரே மருத்துவர்தான்.

ரியோ-ஸ்ருதி
ரியோ-ஸ்ருதி

''உலகமே பீதியில இருக்கிற நேரத்துல என் உலகத்தை ஆட்சி செய்ய எங்க வீட்டுக்கு வந்தாண்ணே, எங்க இளவரசி. ரெகுலரான `செக்-அப்’புக்கு வெளியில போயிட்டு வரவே பயந்துகிட்டிருந்தோம். ஆனா, டெலிவரிக்கு போய்த்தானே ஆகணும்? அந்தக் காலமா என்ன வீட்டுலயே பிரசவம் நடக்கறதுக்கு? கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்தோம். எல்லாம் நல்லபடியா நடந்தது. வாழ்க்கையில மறக்க முடியுமா அந்த நாளை?

கொஞ்சம் விவரம் தெரியவர்றப்ப மகள்கிட்ட இப்படிக் கதை சொல்லலாம்... 'நீ பொறந்தப்ப, இந்த ஊர் மட்டுமல்ல உலகமே பயந்து வீட்டுக்குள்ளேயே கிடந்துச்சாம்...’னு சொல்லுவேன். கதை த்ரில்லிங்கா இருக்கும்ணே'' எனச் சிரிக்கிறார் ரியோ.

"கல்யாணத்தப்பவே எல்லா பயம் பதற்றத்தையும் பார்த்தாச்சு!"

"ஃபிரெண்டு... லவ் மேட்டரு... ஃபீல் ஆகிட்டாப்ல'’ வசனம் மூலம் பிரபலமான டேனியல், பிக் பாஸ் 2-வது சீஸனில் ஒரு போட்டியாளராகக் களமிறங்கியவர். அந்த ஷோவிலிருந்து வெளியேறிய அடுத்த சில தினங்களில் டெனிஷா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். டேனி - டெனிஷா திருமணத்துக்கு டெனிஷா வீட்டுத் தரப்பில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததால் சிம்பிளாகப் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு லாக்டௌனில் ஆண் குழந்தை பிறந்தது.

`பிக் பாஸ்’ டேனி
`பிக் பாஸ்’ டேனி

டேனியலிடம் பேசியபோது, ''குழந்தை பிறந்து நாலு நாள் கழிச்சுதான் கண்ணுல காட்டினாங்க. கோவிட் டெஸ்ட் அது இதுன்னு பாடாப் படுத்திட்டாங்க. படபடப்பு, பதற்றம்லாம் ஹெவியா இருக்கத்தான் செஞ்சது. ஆனாலும், கல்யாணமே பதட்டம், பரபரப்புக்கிடையில நடந்ததுதானே... அந்த எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால ரொம்ப ஃபீல் ஆகலை'' என்றார்.

"கொரோனா எனக்கு ஹெல்ப் பண்ணுச்சாம் ப்ரோ!"

`செம்பருத்தி’ சீரியலில் ஹீரோ கார்த்திக்கின் தம்பியாக வரும் கதிரின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை 2-ம் தேதி நடந்தது.

''ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டிருந்தாங்க ப்ரோ. கொரோனா வராட்டிகூட இந்த வருஷம் எனக்கு கால்கட்டு போட்டுடறதுன்னு வீட்டுல உறுதியா இருந்தாங்க.

இப்ப திருச்சி பக்கமிருந்து ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கையில என்னைப் புடிச்சுக் கொடுக்கப்போறாங்க. இந்த மாதக் கடைசியில கல்யாணம். அதனால இப்ப நடந்துக்கிட்டிருக்கிற சீரியல் ஷூட்டிங்ல கூட கலந்துக்காம சொந்த ஊர்லயே இருக்கேன். ‘கல்யாணத்தை முடிச்சுட்டு வா’ன்னு லீவு கொடுத்துட்டாங்க.

கதிர்
கதிர்
``லாக்டெளனால வீட்ல சண்டை அதிகமாகிடுச்சு... ஆனா, ஒரு விஷயம் மட்டும் குறைஞ்சிடுச்சு!'' - விஜயலட்சுமி

என்கேஜ்மென்ட் மாதிரியே கல்யாணத்துக்கும் கூட்டமே இருக்காது. 'மச்சான் நீ கொடுத்து வச்சவன்டா. கொரோனா வந்து உனக்குச் செலவு இல்லாமப் பாத்துக்கிடுச்சே’ன்னு அதுக்கும் கலாய்க்கிறாங்க ஃபிரெண்ட்ஸ்" என்கிறார் இவர்.

இவர்கள் தவிர, ‘சூப்பர் சிங்கர்’ திவாகருக்கும் சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.

’மைனா’ நந்தினியும் தான் அம்மாவாகப் போவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு