சென்னை வளசரவாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கிக் குடியேறியுள்ளது ரோபோ சங்கர் குடும்பம். நவம்பர் 6 வெள்ளிக்கிழமை வீட்டின் புதுமனைபுகுவிழா நடந்தது. வீட்டின் விலை ஒன்றரை

`சி’ என்கிறார்கள்.

ஒன்றரை `சி’!

ஒருவழியாக ஷகிலாவும் டிவிக்கு வந்துவிட்டார். தீபாவளியிலிருந்து தொடங்கியிருக்கிற `குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனில் `குக்’காக வருகிறார். முதல் சீசன் ஒளிபரப்பானபோதே ‘கெஸ்ட்டாகவாது வந்து போறேனே’ எனக் கேட்டாராம். ஆனால் அப்போது கிடைக்காத வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. சமையலில் நான்வெஜ் சமைப்பதுதான் ஷகிலாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.

குக் வித் ஷகிலா!

நடிகர் ராஜசேகர் இறக்கும் தறுவாயில் வாங்கிய வீட்டுக்கான கடனைச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அவர் மனைவி தாரா. கடைசியாக ராஜசேகர் நடித்த ‘சத்யா’ சீரியல் யூனிட்டிலிருந்து சில லட்சங்கள் திரட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாம். `அந்த சீரியல்ல சேர்ந்து ரெண்டு மாசமே நடிச்சார். அவர் அதிக காலம் நடிச்ச சேனலும் பொருளாதார ரீதியா கொஞ்சம் உதவினா சீக்கிரமா கடனை அடைச்சுடுவேன்’ என்கிறார் தாரா.

கஷ்ட காலம்!

ஊரடங்கு தொடங்கிய புதிதில் சொந்த ஊரான ஐதராபாத்துக்குச் சென்ற `பகல் நிலவு' அன்வர் - சமீரா ஜோடி இப்போது வரை சென்னை திரும்பவில்லை. இடையில் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’, `நீயா நானா' ஆகிய ஷோக்களில் கலந்துகொள்ள சேனல் அழைத்தும் வர மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் கொரோனாவுக்கு முன் இங்கு சீரியல் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஜோடிதான். `கோவிட் பயம் காரணமாக வர மறுக்கிறார்களா' என விசாரித்தபோதுதான் ஜோடி தெலுங்கு சீரியலில் பிஸியாகிவிட்டது தெரிந்தது.தாங்களே தயாரித்து நடிக்கவிருக்கிறார்களாம். `சமீராவுக்கு தெலுங்குத் தொலைக்காட்சியில் ஏற்கெனவே ரசிகர்கள் அதிகம் பாஸ்' என்கிறார் அன்வர்.

ரசிகர்கள் அதிகம் பாஸ்!

``எஸ்.பி.பி.சார், எஸ்.ஜானகி மேம், பி.சுசிலாம்மா, எல்.ஆர்.ஈஸ்வரியம்மான்னு சீனியர்களையெல்லாம் வணங்கிட்டுத்தான் முதல் அடியை எடுத்து வச்சிருக்கேன். `சூப்பர் சிங்கர்' ஷோவுல ஆங்கரிங் பண்ணிட்டிருந்த நாள்களில் பலரும் எங்கிட்ட கேட்ட ஒரு கேள்வி, `நீங்க எப்ப பாடப் போறீங்க?' அதுக்கான விடை வந்தாச்சு’’ என்கிறார் பாவனா. `சூப்பர் சிங்க'ருக்குப் பிறகு சிலகாலம் ஸ்போர்ட்ஸ் பக்கம் நகர்ந்து ஐபிஎல் போட்டிகளைத் தொகுத்து வழங்கி வந்தவர் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

வாழ்த்துகள் சொல்லிவிட்டு, `அது சரி, ஆனா முதல் அடியை `இரண்டாம் குத்து'ங்கிற விவகாரமான படத்துல இருந்து எடுத்து வச்சிருக்கீங்களே' என்றேன்.

``மியூசிக் டைரக்டர் தரண் சாரை ஒரு முறை சந்திச்சப்ப `உங்க வாய்ஸ் நல்லா இருக்கு. ஆனா பாட மாட்டேங்கறீங்களே'ன்னு சொன்னார். வாய்ப்பு வந்தா பாட ஆர்வமாத்தான் இருக்கேன்னு அப்ப சொல்லி வச்சேன். திடீர்னு ஒருநாள் `ஒரு பாட்டு இருக்கு. வரிகளை அனுப்பி வைக்கிறேன். பாருங்க'ன்னு அனுப்பி வச்சார். தூய தமிழில் இருந்த `வீராதி வீரா'ங்கிற அந்தப் பாட்டு வரிகள் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால பாடறேன்னு சொன்னேன். லாக்டௌன் போயிட்டிருந்ததால எங்க வீட்டுல இருந்தபடியே பாடி அனுப்பினேன். அவருக்கும் ஓகே.

ஆனா என்ன படத்துக்கான பாட்டுன்னு எனக்கு அப்ப தெரியாது. சில நாள் கழிச்சு நீங்க பாடின பாட்டு `இரண்டாம் குத்து' படப் பாடல்தான்னு சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் உண்மையிலேயே ஜெர்க் ஆச்சு.

அப்பா அம்மா, கணவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். என் கணவர், `வரிகள், மியூசிக்ல ஆபாசம் இல்லைன்னு உன் மனசுக்குத் தோணுச்சுன்னா நீ பாடு'ன்னு சொல்லிட்டார். வீட்டுக்காரர் சம்மதம் கிடைச்சிடுச்சுன்னா அதுக்குப் பிறகு என்ன வேண்டியதிருக்கு, துணிஞ்சு இறங்கிட்டேன்'’ என்கிறார்.

பாடகி பாவனா

ஜெயிலுக்குப் போயிருக்கும் நெறியாளரைக் குறிப்பிட்டு, ‘என்னைக்காவது ஒரு நாள் அந்தாளு கம்பி எண்ணுவார்னு எனக்குத் தெரியும்’ எனத் தன் சகாக்களிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார் நம்மூர் நெறியாளர். ‘ஜெயில்’ ஆங்கர் டிவி தொடங்கிய சமயத்தில் அங்கு போன நம்மூர்க்காரர் அவரிடம் படாத பாடு பட்டதே மகிழ்ச்சிக்கான காரணம் என்கிறார்கள். லக்கேஜையெல்லாம் போட்டுவிட்டு உடுத்தியிருந்த உடையுடன் விமானம் ஏறி அன்று தப்பித்து வந்தாராம் நம்மூர்க்காரர்.

பாதியில் வெளியேறினால்கூட, ஷோ முடியும் வரை வேறு சேனல்களில் ‘கச்சேரி’ வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனை கண்டு, ஆரம்பத்தில் கலந்து கொள்ளத் தயங்கியிருக்கிறார் பாடகர். ‘இதெல்லாம் ஒரு பார்மாலிட்டிக்காகத்தான்; வாங்க பார்த்துக்கலாம்’ எனச் சொல்லி ஷோவில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார்கள். வெளியில் வந்ததும் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிக்காக பல சேனல்கள் அழைத்தி ருக்கின்றன. ‘போகலாமா’ எனக் கேட்ட வருக்குப் பாசிட்டிவான பதில் கிடைக்க வில்லையாம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் பிளவுபட்டதன் பின்னணியில், அவ்வளவாக நடிக்காத, ஆனால் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அரசியல் பிரமுகருக்கு முக்கியப் பங்கு இருந்தது. அவர்தான் இப்போது டிவி நடிகர் சங்கம் பிளவுபட்டுக் கிடப்பதன் பின்னணியிலும் இருக்கிறார் என்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் அந்தப் பிரமுகர் ஆளுங்கட்சிக்காரரான புதுத்தலைவருக்கு ஆதரவளிப்பதுதான் இதில் ஹைலைட்.