ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

‘சிவா அண்ணாவின் பாசம், வடிவேலு சாரின் பாராட்டு, கல்யாணம்...’

ஷிவாங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவாங்கி

ஷிவாங்கியின் பர்சனல்!

சின்னத்திரையின் செல்லப் பிள்ளை, ஷிவாங்கி. விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெகுளித்தனமான பேச்சாலும், குழந்தைத்தனமான ரியாக்‌ஷன்களாலும் லைக்ஸ் அள்ளுபவர்.

இவரின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார், ‘சந்திரமுகி’ படத்தில் ‘ரா ரா’ பாடலைப் பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். அப்பா கிருஷ்ணகுமார். இருவருமே கர்னாடக இசைப் பாடகர்கள். பாடகியாக சின்னத் திரையில் நுழைந்த ஷிவாங்கி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். சிவகார்த்தி கேயனுடன் ‘டான்’ படத்தில் நடித்திருப்பவர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரட்டைக்குதிரைச் சவாரிக்குத் தயாராகி யுள்ளார். ஷிவாங்கியுடனான கலகலப்பான சந்திப்பிலிருந்து...

“மியூசிக் என் கரியரா அமையும்னு நான் எதிர்பார்க்கலை. அம்மாவின் ஆசைக்காகத் தான் விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். அதுல, என் இயல்பே எல்லார்கிட்டயும் ஜாலியா பேசறதுதான். ‘இந்தப் பொண்ணு நடிக்குதுப்பா’னு ஆரம்பத்துல என்னைக் கிண்டலாவும் கேலியாவும் சிலர் பேசினாங்க. ‘குக் வித் கோமாளி’ ரெண்டாவது சீசன்ல, ‘இந்தப் பொண்ணோட குணமே இப்படித்தான் போல...’னு பலரும் என்கிட்ட அன்பு பாராட்டினாங்க.

‘சிவா அண்ணாவின் பாசம், வடிவேலு சாரின் பாராட்டு, கல்யாணம்...’

என்டர்டெயின் பண்ணணும்னு பிளான் பண்ணி எதுவுமே செய்யறதில்லை. ஸ்பாட்ல என்ன வருதோ அந்த ஃப்ளோவுல பேசிடு வேன். என்னாலயும் மத்தவங்களைச் சிரிக்க வைக்க முடியுதுங்கிறது ஆச்சர்யமாவும் ஹேப்பியாவும் இருக்கு...” இயல்பான பேச்சால் ரசிக்க வைக்கிறார் ஷிவாங்கி.

சிவகார்த்திகேயனின் அன்பைப் பெற்ற கதையைப் பகிர்ந்தவரின் குரலில் கொஞ்சல்... “ ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் டைரக்டர் ரெளஃபா மேம், எனக்கு மென்டார் மாதிரி. ஒருநாள், ‘உனக்கு கால் வந்திருக்கு’னு என்கிட்ட போன் கொடுத்தாங்க. ‘நான் ரெகுலரா ‘குக் வித் கோமாளி’ ஷோ பார்க்கி றேன். நல்லா பர்ஃபார்ம் பண்றீங்கம்மா’ன்னு சொன்னவர், ‘நான் யார்னு தெரியுதா?’னு கேட்டார். ‘தெரியலையே’னு சொல்லிட்டு, போன்ல ஸ்டோர் பண்ணியிருந்த பெயரைப் பார்த்தேன். அது சிவா அண்ணான்னு தெரிஞ்சதும் எனக்கு பயங்கர ஷாக்.

அதுக்கடுத்த வாரமே ‘குக் வித் கோமாளி’ செட்டுக்கு வந்த சிவா அண்ணா, ‘எனக்கு ஷிவாங்கி மாதிரி தங்கச்சி இல்லையே’னு அன்பா சொன்னதும் உருகிட்டேன். அப் புறமா, ‘டான்’ல ஆக்டிங் வாய்ப்பு கொடுத்தார். ‘சிங்கரான நீ, சமையல் ஷோவுக்குப் போய் என்ன பண்ணப் போறே?’னு பலரும் சொன்னப்போ, ‘குக் வித் கோமாளி’ வாய்ப்பை மிஸ் பண்ணாதே’னு எங்கம்மாதான் நம்பிக்கை கொடுத்தாங்க. அதேமாதிரி, ‘டான்’ வாய்ப்பு வந்தப்போ, ‘சும்மா ட்ரை பண்ணிப் பாரு’னு ரெளஃபா மேம்தான் என்கரேஜ் பண்ணாங்க” - ‘டான்’ பட அனுபவம் சொன்ன ஷிவாங்கி, கடந்த வருடம் பி.காம் முடித்திருக்கிறார்.

“படத்துல, ஹீரோயின் பிரியங்கா மோகன் அக்காவோட ஃபிரெண்டா வருவேன். சிவா அண்ணன் மேல எனக்கு லேசா கிரஷ் வரும். என் நிஜ கேரக்டருக்கு ஏத்தமாதிரி படத் துலயும் துருதுரு ரோல்லதான் நடிச்சிருக்கேன். பிரேக் டைம்ல நாங்க டீமா பேசிட்டிருப் போம். அப்போ சிவா அண்ணன் என்னை மாதிரியே மிமிக்ரி பண்ணுவார். சிவா அண்ணனோடு நாங்க கேரவன்ல ஒண்ணா லஞ்ச் சாப்பிடுவோம். அவரின் அன்புலயும் கவனிப்புலயும் மனசு ரொம்பவே கலங்கிடுச்சு.

இதுவரைக்கும் எந்தப் படத்தையும் நான் முதல்நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அந்த ஆசை இப்போ நிறைவேறப்போகுது. விடியற்காலையில அம்மா, அப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போய் ‘டான்’ படம் பார்க்கணும்னு இருக்கேன்” என்று குஷியாகக் கூறுபவர், வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உட்பட சில படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

‘சிவா அண்ணாவின் பாசம், வடிவேலு சாரின் பாராட்டு, கல்யாணம்...’

“வடிவேலு என்ன சொன் னார்?”

“அவர் காமெடியைப் பார்த்து வளர்ந்தவ நான். அவர் கூட சேர்ந்து நடிப் பேன்னு கனவுலயும் நினைச்சதில்லை. ‘குக் வித் கோமாளி’ ஷோ பார்த்துட்டு, வடிவேலு சார் டீம்லேருந்து எனக்கு அழைப்பு வந்துச்சு. என் குறும்புத்தனத்தை ரொம்பவே ரசிச்சுப் பாராட்டினார்.”

“சின்னத்திரை, இசைத் துறை... உங்க முதல் சாய்ஸ் எது?”

“சிங்கர்ங்கிறதுதான் எனக்கான அடையாளம். சினிமாவுலயும், டிவி நிகழ்ச்சிகள்லயும் பாடு றேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடுறது என் கனவு. அதுக்காக என்னைத் தயார்படுத்திக்கிறேன். அதேசமயம், எனக்குள்ள தூங்கிட்டிருந்த என்டர் டெயினரைத் தட்டி எழுப் பினது சின்னத்திரைதான். அதனால, இந்த ரெண்டுலயும் நல்லபடியா வேலை செய்யணும்னு ஆசைப்படுறேன்.”

****

சில் வித் ஷிவாங்கி...

உங்க ரீசென்ட் ஆன் ஸ்கிரீன் க்ரஷ்?

துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் தாஸ்.

முதல் சம்பளம்?

குழந்தையா இருந்தபோது ‘பசங்க’ படத்துல பாடினேன். அதுக்கு 1,000 ரூபாய் கிடைச்சது.

எந்த ஒரு விஷயத்தையும் உடனே பகிர்ந்துக்க நினைக்கிற பர்சன்?

இருக்காங்க. ஆனா, யார்னு சொல்ல மாட்டேன். அது பர்சனல்!

சந்திக்க ஆசைப்படுற பர்சன்?

ரஜினி சார். அவரின் பாசிட்டிவ் எனர்ஜியை நேரடியா உணரணும். பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் மேடத்தின் வெறிப்பிடிச்ச ரசிகை நான். அவங்களை சந்திச்சா, ‘டக்கு’னு கால்ல விழுந்து, கட்டிப்பிடிச்சுடுவேன்.

உங்களைப் பத்தின ரூமர்ஸ்ல விளக்கம் கொடுக்க நினைக்கிற ஒரு செய்தி?

எனக்குக் கல்யாணம் ஆகப்போகுதுனு அடிக்கடி நியூஸ் வருது. அதெல்லாம் உண்மையில்லை. இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்குப் பிறகுதான் கல்யாணம்.

பெஸ்ட் சிங்கர்; ஆக்டர்; என்டர் டெயினர்... மூணுல எந்த விருது கிடைச்சா சந்தோஷப்படுவீங்க?

இதெல்லாம் எனக்குக் கிடைக்கிறதே பெரிய விஷயம். அதனால, மூணு விருதையும் ஒண்ணா கொடுங்கன்னு வாங்கிப்பேன்.

எக்ஸாம்ல ‘காப்பி’ அடிச்ச அனுபவம் இருக்கா?

இருக்கு! கொரோனாவால பாஸான ஹேப்பி ‘2கே கிட்ஸ்’ கேங்ல நானும் ஒருத்தி (வெடித்துச் சிரிக்கிறார்).