சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'வானத்தைப் போல'. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நாயகியாக, கன்னட சீரியல் உலகில் பிரபலமான ஸ்வேதா கெல்ஜ் நடித்து வந்தார். இவர் நடித்த 'துளசி' கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது திடீரென அவர் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக, மன்யா ஆனந்த் என்பவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யார் இந்த மன்யா?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜெமினி தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தெலுங்குத் தொடரான பாக்யரேகா (Bhagyarekha) எனும் தொடரில் நடித்திருக்கிறார். 'வானத்தைப் போல' தொடர் 300 எபிசோடுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் இனி வரும் எபிசோடுகளில் இவர்தான் துளசியாக நடிக்க இருக்கிறார்.
'வானத்தைப் போல' தொடர் ரசிகர்கள் பலரும் ஸ்வேதாவை மிஸ் செய்வதாகவும், அவர் மீண்டும் தொடரில் நடிக்க வேண்டும் எனவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். துளசி கதாபாத்திரத்தில் மன்யா நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடிக்கும் காட்சிகளும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஸ்வேதா கெல்ஜ் என்ன காரணத்திற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பது தெரியவில்லை. அது தொடர்பாக அவரும் எதுவும் பேசவில்லை. அவர் நடித்த கடைசி எபிசோடு இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. நாளையிலிருந்து துளசியாக மன்யா நடிப்பார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது.