Published:Updated:

தொடர்ச்சியான சோக சீன்; நிஜமாகவே நடந்த சோகம்! 'வானத்தைப் போல' சீரியலில் தொடர்வாரா மனோஜ்குமார்?

மனோஜ்குமார்

மனோஜ் சாரும் அவரது மனைவியும் மருத்துவமனையிலதான் இருக்காங்க. கடவுள் அருளால் உடல் நலம் தேறிட்டு வர்றாங்க ஆனால்...

தொடர்ச்சியான சோக சீன்; நிஜமாகவே நடந்த சோகம்! 'வானத்தைப் போல' சீரியலில் தொடர்வாரா மனோஜ்குமார்?

மனோஜ் சாரும் அவரது மனைவியும் மருத்துவமனையிலதான் இருக்காங்க. கடவுள் அருளால் உடல் நலம் தேறிட்டு வர்றாங்க ஆனால்...

Published:Updated:
மனோஜ்குமார்

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'வானத்தைப் போல'. அண்ணன் தங்கை கதையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்னர்தான் அண்ணனாக நடித்து வந்த நடிகரும் அவருக்குத் தங்கையாக நடித்த நடிகையும் திடீரென விலகினர். இவர்கள் விலகியதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் பதிலாக வேறு நடிகர் நடிகைகள் கமிட் ஆகி பழையபடி விறுவிறுப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது தொடர்.

இந்தச் சூழலில் இந்தத் தொடரில் முத்தையா என்கிற கேரக்டரில் நடித்து வந்த நடிகரும் இயக்குநருமான மனோஜ்குமார் இரு தினங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய சம்பவத்தை வைத்து சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

இது தொடர்பாக 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வரும் சில ஆர்ட்டிஸ்டுகளிடம் பேசினோம்,

'இந்தத் தொடர்ல முதல்ல முக்கியக் கதாபாத்திரங்கள்ல நடிச்ச நடிகர் நடிகைகள் சிலர் வெளியேறுனாங்க. இப்ப பார்த்தீங்கன்னா மனோஜ்குமார் சார் மனைவியுடன் கார் விபத்துல சிக்கி இருக்கார்.

மனோஜ்குமார்
மனோஜ்குமார்

சொந்த ஊருக்கு மனைவியுடன் காரில் போய்க் கொண்டிருந்தப்ப நடந்த விபத்துல அதிர்ஷ்டவசமா உயிருக்கு ஒண்ணும் ஆகலை. ஆனாலும் பெரிய அடின்னு சொல்றாங்க. இப்ப மனோஜ் சாரும் அவரது மனைவியும் மருத்துவமனையிலதான் இருக்காங்க. கடவுள் அருளால் உடல் நலம் தேறிட்டு வர்றாங்க' என்றார்கள்.

'கதைப்படி சீரியலில் கடந்த சில தினங்களாக அவர் தொடர்புடைய காட்சிகள் சோகமானவையாகவே இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளதே' எனக் கேட்டோம்.

'நடந்த விபத்தையும் சீரியல் சீனையும் முடிச்சுப் போடக் கூடாதுங்க, சீரியல்ல கதைக்கு என்ன தேவையோ அதையே எடுக்கிறாங்க. அதனாலதான் விபத்து நடந்திடுச்சுன்னு சொல்றதுல அர்த்தம் இல்லையே' என்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயக்குநர் பாரதிராஜாவிடம் அசோசியேட்டாகவும் இருந்த மனோஜ் குமார், அந்தக் காட்சிகளில் நடித்த போது 'ஏய் என்னப்பா, இந்த மாதிரியெல்லாம் சீன் எடுத்திட்டிருக்கீங்க, என்னை எங்காவது கொண்டு போய்த் தள்ளணும்னு ஆசைப்படுறீங்க' என ஜாலியாகக் கலாய்த்தபடியே நடித்தாராம்.

தற்போது நிஜமாகவே விபத்து நடந்து விட்டதால், கொஞ்சம் அதிர்ச்சியாகிவிட்டாராம். குணமாகி வந்த பின்பு மறுபடியும் இந்த சீரியலில் நடிப்பாரா எனத் தெரியவில்லை' என்கின்றனர் சக ஆர்ட்டிஸ்டுகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism