Published:Updated:

``ஆமா, எனக்கு கல்யாணம் ஆகப்போகுது... மாப்பிள்ளை யார்னா?'' - வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் ( படம்: ப.பிரியங்கா / விகடன் )

வனிதாவுக்கு கல்யாணம் எனக் கிசுகிசுக்கள் பறக்க, உண்மை என்ன எனத் தெரிந்துகொள்ள அவருக்கே போன் அடித்தேன்.

செலிபிரிட்டிகள் முதல் சாமான்யர்கள் வரை எல்லோருமே யூடியூப் சேனல் தொடங்கும் இந்த 2020-யில் வனிதா விஜயகுமாரும் ஒரு சேனல் தொடங்கிவிட்டார்.

தன் பெயரிலேயே சேனல் தொடங்கியிருக்கும் வனிதா, சமையல், மேக்அப் எனக் கலந்துகட்டி வீடியோக்கள் செய்து ஹிட்ஸ் அள்ளிவருகிறார். இவரின் அவக்காய் சிக்கன் பிரியாணி வீடியோ 2 மில்லியன் வியூஸ்களைத் தாண்டியிருக்கிறது.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

நடிகர்கள் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான வனிதா, 25 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் 'சந்திரலேகா' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நாயகியாக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கும் வனிதா, டிவி தொடர்களிலும் நடித்தார். கடந்த ஆண்டு 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் வைரலானார் வனிதா.

இவரின் அதிரடி பேச்சும், படபட பஞ்சாயத்து தீர்ப்புகளும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தது. பிக்பாஸ் வரலாற்றில் எலிமினேட் செய்யப்பட்டு, பிறகு மீண்டும் வனிதாவை ஸ்பெஷல் பாஸ்லாம் கொடுத்து அழைத்துவந்த சாதனைகள் எல்லாம் நடந்தன.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

வனிதாவின் பர்சனல் பக்கங்கள் அடிக்கடி மீடியாக்களில் வருவதும் வாடிக்கைதான். முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்த வனிதா, பிறகு அவரைவிட்டுப் பிரிந்தார். அடுத்து ஆந்திர தொழிலதிபர் ஒருவரை மணந்தார். இவர்கள் இருவரின் மூலமும் இவருக்குக் குழந்தைகள் உண்டு. அடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த வனிதா, சமீபகாலமாகத் தனித்தே இருந்தார். இந்த நேரத்தில்தான் வனிதாவுக்கு கல்யாணம் எனக் கிசுகிசுக்கள் பறக்க, உண்மை என்ன எனத் தெரிந்துகொள்ள அவருக்கே போன் அடித்தேன்.

''லாக்டெளன் நாள்கள் எப்படிப் போயிட்டிருக்கு?''

''ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நல்லாயிருக்கேன். இந்த லாக்டெளன்ல வாழ்க்கை வேற மாதிரி மாறிடுச்சு. மூணு மாசத்துக்கு மேல போயிட்டிருக்கிறதாலே இதுவே செட் ஆகிடுச்சு. திரும்ப வெளில வேலையெல்லாம் ஸ்டார்ட் பண்ணும்போதுதான் கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன்.''

Vanitha Vijaykumar With her friends
Vanitha Vijaykumar With her friends

''உங்க யூடியூப் சேனல் பார்த்துட்டு இருக்கோம்... சமையல், மேக்-அப் வீடியோஸ்ன்னு பயங்கர பரபரப்பே இருக்கீங்களா?

''ஆமா, யூடியூப் சேனல் ஆரம்பிக்கணும்கிறது என்னோட ரொம்ப நாள் ஐடியா. தள்ளித்தள்ளிப்போயிட்டே இருந்ததை இந்த லாக்டெளன்ல கடைசியாகப் பண்ணிட்டோம். ஏப்ரல் 6-ம் தேதிதான் சேனல் லான்ச் பண்ணோம். அதுக்குள்ள 60 வீடியோக்கு மேல பண்னிட்டேன். 4 லட்சம் சப்ஸ்கிரைப்ஸர்னு நல்லா போயிட்டுருக்கு. வீடியோஸ் பண்றதுலயே முழு நாள் ஓடிடுது.''

''உங்களுக்கு கல்யாணம்னு செய்திகள் வருதே... உண்மையா?''

''ஆமாம்... உண்மைதான். சீக்கிரமே பிரஸ் ரிலீஸ்ல எல்லா விவரங்களையும் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணப்போறவர் ஒரு ஃபிலிம்மேக்கர், டெக்னீஷயன். இப்ப பெரிய புராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். அந்த புராஜெக்ட்ல நானும் இருக்கேன். அப்படித்தான் அவரைத் தெரியும். லாக்டெளன் நேரத்துல அவர்தான் சேனல் ஆரம்பிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். விஷுவல் எஃபெக்ட்ஸ் டைரக்டர் அவர். பாலிவுட், ஹாலிவுட்னு வொர்க் பண்ணியிருக்கார். இங்கேயும் வொர்க் பண்ணிட்டு இருக்கார். முதல்ல ஒரு நண்பனாத்தான் தெரியும். அப்புறம் One Plus One Has Become Ten.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த..." - பார்த்திபன் தொடர் - 3

''உங்களோட வருங்காலக் கணவர் பெயரை சொல்லவேயில்லையே?''

''அவர் பெயர் பீட்டர் பால். சீக்கிரமே கல்யாணம் எப்போ, என்னன்னு எல்லாத் தகவல்களையும் முறையா சொல்றேன்.''

விகடனில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் தன் திருமண தேதியை அறிவித்திருக்கிறார் வனிதா. ஜூன் 27-ம் தேதி, வனிதாவின் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு