Published:Updated:

"சினிமா விகடனில் என்னைப்பற்றி வெளியானது முழுக்க முழுக்க பொய்!" - வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

''என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.’'

நேற்று சினிமா விகடன் தளத்தில் வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டார் என செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தி தொடர்பாக வனிதா விஜயகுமார் நம்மிடம் பேசினார்.

‘’என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா... உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
படம்: ப.பிரியங்கா / விகடன்

நமது நிருபர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பலரிடமும் கிராஸ்செக் செய்து, அதன் நம்பகத்தன்மையை முழுவதுமாக உறுதிசெய்தபிறகே அதை வாசகர்களுக்கு அளிக்கிறார்கள். வனிதா விஜயகுமார் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கம் விகடனுக்கு துளியும் கிடையாது. இந்தச் செய்தியை வனிதா விஜயகுமார் முழுவதுமாக மறுத்திருப்பதோடு, அவர் மிகவும் காயப்பட்டிருப்பதும் தெரிகிறது. அவரை காயப்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகிறோம்!

அடுத்த கட்டுரைக்கு