Published:Updated:

`` `வனிதா பீட்டர்'னு என் பேரை மாத்துறளவுக்கு காதலிக்கப் போறாராம்!'' - உற்சாகத்தில் வனிதா விஜயகுமார்

"நிறைய ஃபேன்ஸ் இப்போ, `வனிதா அக்கா, பார்த்து முடிவு எடுங்க'னு திருமணம் பற்றி சொல்லிக்கிட்டு இருக்காங்க. அக்கறைனாலதான் இப்படி சொல்றாங்க. என் மேல வெச்சிருக்குற இந்த அக்கறை எனக்கு ஹேப்பியா இருக்கு."

வரும் சனிக்கிழமை (27-06-2020) வனிதா விஜயகுமாருக்கு கல்யாணம். அனிமேஷன் கலைஞரான பீட்டர் பால் என்பவரை மணக்கிறார் வனிதா. திருமண வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

``வாழ்க்கை இப்ப ரொம்ப பாசிட்டிவா போயிட்டிருக்கு. நல்ல நல்ல விஷயங்களெல்லாம் லாக்டெளன்ல நடக்குது. யாரையும் மறுமணம் பண்ணக்கூடாதுனு ரொம்பத் தெளிவா இருந்தேன். ஆனா, பீட்டர் என் முடிவை மாத்திட்டார். அவர் ரொம்ப சாஃப்ட் கேரக்டர். என்னையும், என் பொண்ணுங்களையும் நல்லா பார்த்துக்குறார். ஒரு சினிமா புரொஜக்ட் விஷயமா பேசுறப்போதான் பீட்டர் எனக்கு அறிமுகமானார். நான் தொடங்கியிருக்குற யூடியூப் சேனலுக்கு நிறைய சப்போர்ட் டெக்னிக்கல் ரீதியா செஞ்சு கொடுத்திருக்கார். முதல்ல பீட்டர்தான், `கல்யாணம் பண்ணிக்கலாமா'னு கேட்டார். என் பொண்ணுங்களுக்கும் பீட்டரை பிடிச்சிருந்தது. எனக்கும் இந்த திருமணம் சரியா இருக்கும்னு தோணுச்சு. அதனால உடனே ஓகே சொல்லிட்டேன்.

எங்க அம்மா அப்பாவுடைய திருமண நாள் ஜூன் 27. அதனாலதான், இந்தத் தேதியை நான் செலக்ட் பண்ணேன். என் வீட்டுல ரொம்ப சிம்ப்பிளா எங்க திருமணம் நடக்கப்போகுது. ரொம்ப ஆடம்பரமா திருமணம் பண்றதுல எனக்கு எப்பவும் பெருசா உடன்பாடு இருந்ததில்ல. ஏன்னா, நம்ம கல்யாணத்துக்கு வர்ற யாருமே நம்ம கஷ்டப்படும்போது பக்கத்துல இருக்க மாட்டாங்க. பீட்டரும் இதைத்தான் விரும்புறார். அதனால நெருங்கிய நண்பர்கள் சூழ எங்க திருமணம் நடக்கயிருக்கு. பீட்டர் அடிக்கடி `இத்தனை நாளா என் வாழ்க்கையில வராம எங்கே போனா'னு கேட்டுக்கிட்டு இருக்கார். இதெல்லாம் கேட்குறப்போ சந்தோஷமா இருக்கு. அதே மாதிரி என் வாழ்க்கையோட கடந்த காலத்தை நினைச்சு எப்பவும் நான் வருத்தப்பட்டதில்ல. ஏன்னா, இதெல்லாம் நடக்காம போயிருந்துச்சுனா என்னோட பசங்க எனக்கு கிடைச்சிருக்க மாட்டாங்க. அழகான குழந்தைகள் எனக்கு கிடைச்சிருக்காங்க. ஏதோ ஒரு விஷயத்துகாகத்தான் எல்லாமே நடந்துட்டு இருக்குனு எப்பவும் நினைக்குறதுண்டு.

வனிதா - பீட்டர் பால்
வனிதா - பீட்டர் பால்

சொல்லப்போனா, தலைவரோட `இளமை திரும்புதே' பாட்டை இப்போ அடிக்கடி கேட்டுட்டு இருக்கேன். வெளியே இருந்து பார்க்குறப்போ ரொம்ப தைரியமான பொண்ணா தெரிவேன். ஆனா, ரொம்ப இளகின மனசோட இருக்குறவ நான். என் பொண்ணுங்ககூட இதை அடிக்கடி சொல்லுவாங்க. நிறைய ஃபேன்ஸ் இப்போ, `வனிதா அக்கா, பார்த்து முடிவு எடுங்க'னு திருமணம் பற்றி சொல்லிக்கிட்டு இருக்காங்க. அக்கறைனாலதான் இப்படி சொல்றாங்க. என் மேல வெச்சிருக்குற இந்த அக்கறை எனக்கு ஹேப்பியா இருக்கு. எனக்குள்ள இருக்குற பெண்மையை, உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டு பீட்டர் வந்திருக்கார். என்னோட புகழுக்கும், சொத்துக்கும் ஆசைப்படாம இருக்கார். நிறைய பேர் அவரை என்னவேனா கமென்ட் அடிக்கலாம். இதெல்லாம் பற்றி அவர் கவலைப்படாம வர்றப்போ சந்தோஷமா இருக்கு. ரெண்டு பெண் குழந்தைகளோட இருக்க என்னை திருமணம் செய்யத் தயாரா இருக்கார். பீட்டரோட குடும்பத்துல இருக்குற எல்லார் கூடவும் பேசியிருக்கேன். எங்க திருமணத்துக்கு வர்றதுக்கு ஆர்வமா இருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, என்னோட ஃபேமிலி சப்போர்ட் எனக்கு சுத்தமா கிடையாது. நிறைய பிரச்னைகள் என்னை சுத்தியிருக்கு. இருந்தாலும் இந்த முடிவை தைரியமா எடுத்திருக்கேன். வேலையில இருக்குறப்போகூட கோபமாகி பீட்டரையும் திட்டியிருக்கேன். இருந்தும், என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டு அமைதியா இருப்பார். விட்டுக்கொடுத்து போவார். இதுமாதிரியான லைஃப் பாட்னர் எனக்கு அமைஞ்சதில்ல. இதுதான் அவரை கல்யாணம் பண்ண என்னை தூண்டிச்சு. பீட்டர் என்னை சமாதானப்படுத்துற விதம் பார்த்துட்டு என்னோட கிட்ஸ்கூட சிரிப்பாங்க. எல்லாருடைய திருமண வாழ்க்கையிலும் பிரச்னை வரும். பிரச்னை வராம இருந்தாதான் சந்தேகப்படணும். என் முந்தைய திருமண வாழ்க்கைல நிறைய பிரச்னைகள் பார்த்து கடந்து வந்திருக்கேன். என்னோட அனுபவத்துல இந்தத் திருமணம் நிச்சயம் சரியா இருக்கும். என் பேரை அவர் கையில டாட்டூவா போட்டிருக்கார். இதைப் பார்த்தவுடனே எனக்கு கண்கலங்கிருச்சு. நானும், அவரோட பேரை டாட்டூவா போட்டுக்கிட்டேன். பழங்குடிகள் சமுதாயத்துல கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி கையிலே கணவன் மனைவி பேரையும், மனைவி கணவன் பேரையும் பச்ச குத்துக்குவாங்கனு பீட்டர் சொன்னார். கேட்குறப்போ ரொம்ப எமோஷனால இருந்தது.

நண்பர்களுடன் வனிதா
நண்பர்களுடன் வனிதா

என்னோட பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்திருக்கார். `உன்னைப் பற்றி எப்படி தப்பா பேசுறாங்க'னு ஆச்சர்யமா இருக்குனு சொல்லுவார். கமல் சார்கூட, `வீட்டை ரொம்ப அழகாக வெச்சிருக்கீங்க. நல்லா சமைக்கிறீங்க'னு சொல்லுவார். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'நல்ல அம்மா'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. குடும்பத்துக்கு எப்பவும் முக்கியத்துவம் கொடுக்குற பொண்ணு நான். ஆனா, யாருமே என்னை சரியா புரிஞ்சிக்கமாப் போயிட்டாங்க. வனிதா விஜயகுமார் பேரை எப்பவும் எதுக்காகவும் நான் மாத்தினதில்ல. என்னோட யூரியூப் சேனல்கூட இந்த பேர்ல ஏன் தொடங்கினேன்னு பதில் தெரியல. `வனிதா பீட்டர்னு உன் பேரை மாத்துறளவுக்கு காதலிச்சு காட்டுறேன்'னு பீட்டர் சொல்லியிருக்கார். பார்ப்போம்'' - குழந்தையைப்போல சிரிக்கிறார் வனிதா.

வாழ்த்துகள் வனிதா & பீட்டர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு