Published:Updated:

"விக்ரமனுக்கு ஓட்டு கேட்டது தப்புன்னு இப்போ திருமாவளவன் உணர்ந்திருப்பார்!"- வனிதா விஜயகுமார் அதிரடி

திருமாவளவன் - விக்ரமன், வனிதா விஜயகுமார்

"அசிம், ஷிவின்னு ஒவ்வொருத்தருமே திறமையா விளையாடித்தான் கடைசி வரைக்கும் வந்திருக்காங்க. அப்படி இருக்கறப்ப நீங்க உங்க அரசியல் செல்வாக்கை உங்களுக்கு வேண்டியவருக்காகப் பயன்படுத்த நினைக்கறது தப்பு. இதைச் சொன்னா மிரட்டுவீங்களா?"- வனிதா விஜயகுமார்

"விக்ரமனுக்கு ஓட்டு கேட்டது தப்புன்னு இப்போ திருமாவளவன் உணர்ந்திருப்பார்!"- வனிதா விஜயகுமார் அதிரடி

"அசிம், ஷிவின்னு ஒவ்வொருத்தருமே திறமையா விளையாடித்தான் கடைசி வரைக்கும் வந்திருக்காங்க. அப்படி இருக்கறப்ப நீங்க உங்க அரசியல் செல்வாக்கை உங்களுக்கு வேண்டியவருக்காகப் பயன்படுத்த நினைக்கறது தப்பு. இதைச் சொன்னா மிரட்டுவீங்களா?"- வனிதா விஜயகுமார்

Published:Updated:
திருமாவளவன் - விக்ரமன், வனிதா விஜயகுமார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிறைவு பெற இன்னும் ஒரே நாள்தான் மிச்சமிருக்கிறது. தற்போது டைட்டில் வெல்வதற்கான இறுதிப் பந்தயத்தில் அசிம், விக்ரமன், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி ஆகியோர் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், `டைட்டில் வெல்ல விக்ரமனுக்கு ஆதரவு தர வேண்டும்' என அவர் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ட்வீட் செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விக்ரமன் vs அசிம்
விக்ரமன் vs அசிம்
திருமாவளவனின் இந்த ட்வீட்டுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தவர் நடிகையும் பிக் பாஸ் முந்தைய சீசனின் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார். வனிதா பற்ற வைத்த நெருப்பு சமூக வலைதளங்களில் அப்படியே எரியத் தொடங்கியது எனச் சொல்லலாம்.

நிகழ்ச்சியில் விக்ரமனுடைய நேரடி எதிரி என்றால் அது அசிம்தான். அவருடைய ஆதரவாளர்கள் இந்த விஷயத்தைப் பிடித்துக் கொண்டார்கள். "ஒரு ரியாலிட்டி ஷோவில் தேவையில்லாத அரசியல் கலப்பு இது. அசிம் கூடத்தான் முக்கியக் கட்சியில் பொறுப்பிலிருந்தவர். ஆனால் அவருக்காக யாரும் வாக்கு கேட்கவில்லை. எனவே விக்ரமனுக்காக திருமாவளவன் ஆதரவு கேட்பது தவறு. எனவே பிக் பாஸ் ரசிகர்கள் திருமாவின் இந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளி அசிமை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என அவர்கள் அனல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

திருமாவளவன் - விக்ரமன்
திருமாவளவன் - விக்ரமன்
ட்விட்டர்

இந்த நிலையில் நேற்று இரவு வனிதா விஜயகுமார், "திருமாவளவன் விக்ரமனுக்கு ஆதரவு கேட்டது குறித்த என் கருத்துக்கு மிரட்டல்கள் வருகின்றன" என்று ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார்.

அதில், "யாருக்கும் எதற்கும் பயந்தவ இல்ல நான். உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமாப் பார்த்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேறப் பாருங்க. உங்க அரசியல் எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க!" எனச் சொல்லி இருக்கிறார்.

வனிதா விஜயகுமாரிடமே அவருக்கு வந்த மிரட்டல் குறித்துக் கேட்கலாமெனத் தொடர்பு கொண்டோம்.

"போன் பண்ணினவங்க, 'அவரைக் கொஞ்சம் பார்த்து இருந்துக்கச் சொல்லுங்க. தேவையில்லாம எங்க கட்சியைப் பத்தித் தப்பாப் பேசறாங்க'ன்னு சொன்னதா எனக்குத் தகவல் வந்தது. அவங்க கட்சியின் அடிமட்டத் தொண்டர்ன்னுதான் யாரோ பேசியிருக்காங்க.

இந்தத் தகவலை நான் பொதுவெளியில பதிவிட்டதுக்குக் காரணம், விஷயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமைக்குப் போய்ச் சேரணும்னுதான். ஏன்னா, தொண்டர்கள்னு சிலர் பேசறதெல்லாம் அவருக்குத் தெரியுமான்னு நமக்குத் தெரியலையே?

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

என்னைப் பொறுத்தவரை முதல்ல நான் சொன்னது சொன்னதுதான். அதுல இருந்து நான் பின் வாங்கறதா இல்லை. இந்த நிகழ்ச்சியில் ஒருத்தருக்கு ஆதரவு கேட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பேசறது ரொம்பவே தப்பான விஷயம். விளையாட்டுல அரசியல் கலக்கக் கூடாதுங்கிறது எல்லாருமே சொல்றதுதானே? இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கா?

`விக்ரமனுக்கு ஓட்டுப் போடுங்க'ன்னு யார்கிட்ட கேக்கறாங்க? பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துட்டு வர்றவங்கதான் ஓட்டுப் போடப் போறாங்க. அரசியல்வாதிகள், அவர்களுடைய தொண்டர்கள் எல்லாருமே அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துட்டு வர்றாங்களா என்ன?

ஒரு கட்சியின் தலைவர்ங்கிறவர் நல்ல ஒரு விஷயத்துக்குக் குரல் கொடுக்கணும். பிக் பாஸ் மாதிரியான ஒரு மைன்ட் கேம் ஷோவுக்காகப் பேசணுமாங்கிறதுதான் என் கேள்வி. திருமாவளவன் பேசப் போய்த்தானே அவருடைய தொண்டன்னு ஒரு ஆள் இந்த மாதிரி போன் பண்ணி ராங்காப் பேசறார்!

திருமாவளவன்
திருமாவளவன்

அசிம், ஷிவின்னு ஒவ்வொருத்தருமே திறமையா விளையாடித்தான் இந்த நிகழ்ச்சியில கடைசி வரைக்கும் வந்திருக்காங்க. அப்படி இருக்கறப்ப நீங்க உங்க அரசியல் செல்வாக்கை உங்களுக்கு வேண்டியவருக்காகப் பயன்படுத்த நினைக்கறது தப்பு. இதைச் சொன்னா மிரட்டுவீங்களா?

தொல்.திருமாவளவன் இந்த விஷயத்துல தலையிட்டது தப்புன்னு இப்ப நினைச்சிருப்பார்னுதான் நான் நினைக்கிறேன். அதனால இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம்" என்றார் வனிதா.