Published:Updated:

அப்போ இப்போ: விடாது கருப்புல ரீச் ஆகலைங்கிற குறையை ஜீ பூம்பா தீர்த்து வச்சது! - லோகேஷ்

லோகேஷ்

'மர்மதேசம்', 'ஜீ பூம்பா' போன்ற தொடர்கள் மூலம் நம்மிடையே பரிச்சயமான முகம் லோகேஷ் ராஜேந்திரன். விடாது கருப்பு என்கிற தொடர் பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடாத 90'ஸ் கிட்ஸ் வெகு சிலரே என்றால் பாத்துக்கோங்களேன்!

Published:Updated:

அப்போ இப்போ: விடாது கருப்புல ரீச் ஆகலைங்கிற குறையை ஜீ பூம்பா தீர்த்து வச்சது! - லோகேஷ்

'மர்மதேசம்', 'ஜீ பூம்பா' போன்ற தொடர்கள் மூலம் நம்மிடையே பரிச்சயமான முகம் லோகேஷ் ராஜேந்திரன். விடாது கருப்பு என்கிற தொடர் பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடாத 90'ஸ் கிட்ஸ் வெகு சிலரே என்றால் பாத்துக்கோங்களேன்!

லோகேஷ்
`அப்போ இப்போ' புதிய பகுதி. தொலைகாட்சித் தொடர்களில் நடித்து நம்மிடையே நன்கு பரிச்சயமானவர்கள் சிலர் அதன் பிறகு சீரியலில் இருந்து விலகியிருப்பர். அவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்தப் பகுதியில் அவர்களை நேர்காணல் செய்திருக்கிறோம். வாங்க மக்களே இந்த வாரம் லோகேஷ் பத்தி தெரிஞ்சுப்போம்.

`மர்மதேசம்', 'ஜீ பூம்பா' போன்ற தொடர்கள் மூலம் நம்மிடையே பரிச்சயமான முகம் லோகேஷ் ராஜேந்திரன். விடாது கருப்பு என்கிற தொடர் பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடாத 90'ஸ் கிட்ஸ் வெகு சிலரே என்றால் பாத்துக்கோங்களேன்! நம் மனம் கவர்ந்த பெரும்பாலான தொடர்களில் நடித்திருந்த லோகேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரை சந்தித்தோம்... புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

'விடாது கருப்பு' லோகேஷ்
'விடாது கருப்பு' லோகேஷ்

குழந்தை நட்சத்திரமாகத்தான் அந்தத் தொடரில் கமிட் ஆனேன். அந்த சீரியலில் நடிக்கும்போது எனக்கு ஐந்து வயசு. நாகா சாருடைய கிரியேட்டிவிட்டியில் நாங்க எல்லாரும் வாழ்ந்தோம்னு தான் சொல்லணும். அந்த டைம் இந்தத் தொடர் பெரிய அளவில் ஹிட் ஆச்சு. கிட்டத்தட்ட 25 வருஷம் ஆகியும் இன்னமும் எங்க எல்லாரையும் மக்கள் ஞாபகம் வச்சிருக்காங்கங்கிறதே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு என்றவர் அந்தத் தொடர் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

எப்பவாச்சும் தான் ஸ்கூலுக்கு போவேன். ஸ்கூல்ல பசங்க எல்லாரும் என்னை பார்த்தாலே பயப்படுவாங்க. எல்லாரும் என்னை விடாது கருப்பு ராஜேந்திரனாகத்தான் பார்த்தாங்க. நான் கடகடன்னு வளர ஆரம்பிச்சிட்டேன். அதனால முதலிலேயே கிளைமாக்ஸ் சீன் எடுத்துட்டோம். நாகா சார் என்கிட்ட அந்த சீனை சொல்லிக் கொடுக்கும்போதே ஆர்ட் & கிராஃப்ட் வச்சு தான் சொல்லிக் கொடுப்பார். அவர் என்ன சொல்றாரோ அதை அப்படியே உள்வாங்கி நடிச்சிடுவேன்.

'விடாது கருப்பு' ரீயூனியன்
'விடாது கருப்பு' ரீயூனியன்

split personality என்கிற கான்செப்ட் நமக்கு ரொம்பவே புதுசு. அப்பவே அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும்னு என் மேல நம்பிக்கை வச்சு என்னை பண்ண வச்சார். விடாது கருப்புக்கு பிறகு தான் அந்நியன் படமே வந்துச்சு. ஒரு முறை படையப்பா படத்தோட ஷூட்டிங்கின் போது ரஜினி சாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவர் என்னை பார்த்ததும் பயங்கரமா பண்ணியிருந்தீங்கன்னு சொன்னார்.

நாகா சாரே ஒரு ஸ்கூல் மாதிரி. எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடிச்சிட்டேன். அப்படி என் கரியரில் முக்கியமான இன்னொரு தொடர்னா அது 'ஜீ பூம்பா'. அந்த சீரியலில் ரெண்டு விஷயம் எனக்கு ரொம்ப பிளஸா இருந்துச்சு. ஒன்று, கண்ணாடி. இன்னொன்று, பென்சில். விடாது கருப்பு பண்ணும்போது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைச்சதுங்கிறதை என்னால அந்த வயசுல ஃபீல் பண்ண முடியல. அந்த மனக்குறையை ஜீ பூம்பா தீர்த்து வச்சது.

'விடாது கருப்பு' லோகேஷ்
'விடாது கருப்பு' லோகேஷ்

எங்கேயும் வெளியில போக முடியாது. எல்லாரும் அடையாளம் கண்டுபிடிச்சு கேட்பாங்க. அது ஒரு மாதிரி ஜாலியா இருக்கும். 'கண்ணுபட போகுதய்யா' படத்தின் போது விஜயகாந்த் சாரை சந்திச்சேன். அப்ப அவர் என்கிட்ட ஞாயிற்றுக்கிழமை ஆனா என் பசங்க நியூஸ் பார்க்க விட மாட்டேன்றாங்க.. ஜீ பூம்பா தான் பார்க்கிறாங்கன்னு சொன்னார். விஜய் டிவியிலிருந்து ஸ்டார் விஜய் ஆக மாறிய போது அந்த சீரியலை திடீர்னு நிறுத்திட்டாங்க. இதுதான் கடைசி நாள் ஷூட்னு கூட எங்க யாருக்கும் தெரியாது. அந்த சீரியல் நினைவாக கண்ணாடி மட்டும் பத்திரம் பண்ணி வச்சிருக்கேன். பென்சிலை மிஸ் பண்ணிட்டேன் என்றவரிடம் திடீரென நடிப்பில் இருந்து விலகிய காரணம் குறித்துக் கேட்டோம்.

``நாகா சார் என்கிட்ட சொன்ன அட்வைஸ் அது. ஒரு குறிப்பிட்ட வயசுல நடிக்கிறதை நிறுத்திக்கோங்கன்னு சொன்னார். நானும் நடிக்கிறதை விட்டுட்டு டான்ஸ் கத்துக்கிட்டேன். ஸ்கூல் முடிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியல. மறுபடி நாகா சார்கிட்ட போய் நின்னேன். என்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்துக்கோங்கன்னு சொன்னார். அவர் சொன்னதால ஓகே சொல்லிட்டேன். அப்ப அவர் பொன்னியின் செல்வன் நாவலை ஒரு சீரியலாக எடுத்தார். அதில் நான் ஒர்க் பண்ணினேன். அவருடைய மேக்கிங், டீச்சிங் வேற மாதிரி இருக்கும். பல நுணுக்கங்கள் அவர்கிட்ட கத்துக்கிட்டேன். அந்த சீரியல் திடீர்னு டிராப் ஆகிடுச்சு. ஆனாலும், எனக்கு பல விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. அதுக்கு பிறகு டைரக்‌ஷனில் ஆர்வம் வந்துடுச்சு.

'விடாது கருப்பு' லோகேஷ் - சேத்தன்
'விடாது கருப்பு' லோகேஷ் - சேத்தன்

'ஆனந்தபுரத்து வீடு' , 'அம்புலி' உட்பட பல படங்களில் ஒர்க் பண்ணியிருக்கேன். டைரக்‌ஷனில் நமக்கு ஆர்வம் இருக்குன்னா முதலில் நாம எடிட்டிங் கத்துக்கணும் என்பதை நாகா சார் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். எடிட்டிங், சவுண்ட், டைரக்‌ஷன்னு எல்லாமே எனக்குத் தெரியும். என் அப்பாவுக்கு நான் நடிக்கலைங்கிற வருத்தம் நிறையவே இருந்துச்சு. ஆனாலும், எனக்கு அதைத் தாண்டி பல விஷயங்கள் இப்பத் தெரியும்.

புரொடெக்ஷன் ஒர்க்கும் கத்துக்க ஆசைப்பட்டேன். அதனால சீரியல்களில் புரொடெக்ஷன் சார்ந்து ஒர்க் பண்ணினேன். இப்ப மீடியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிராவல் பண்ணிட்டு இருக்கேன். மீடியாவை பொறுத்தவரையில் கிளிக் ஆகுறதும், ஆகாததும் நம்ம கையில் இல்லை என்றவரிடம் எம் ஆர் ராதா குறித்துக் கேட்டோம்.

'விடாது கருப்பு'
'விடாது கருப்பு'

அவர் எனக்கு தாத்தா முறை வேணும். அவர் இருந்தப்ப நான் இல்லைங்கிற வருத்தம் எனக்கு நிறையவே இருக்கு. அவரை ஒரு முறையாவது பார்த்திருக்கலாம்னு அடிக்கடி தோணும் என்றார்.

சமீபத்தில், 25 years of விடாதுகருப்பை அந்த டீம் செலிபரேட் செய்திருக்கிறார்கள். அந்த டீம் மீட்டில் பல நடிகர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் புகைப்படமும் சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல விஷயங்கள் குறித்து லோகேஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!